விட்ராதீங்க சார்.. அக்.8 முதல் ரூ.4,500 வரை ஆஃபர்.. OnePlus ஃபெஸ்டிவ் சேல் 2026.. டேப்லெட், இயர்பட்ஸ் லிஸ்ட்!
இந்திய மார்கெட்டில் பெஸ்டிவ் சேல் தொடங்கிவிட்டது. அமோன் கிரேட் இந்தியன் சேல், பிளிப்கார்ட் பிக் பில்லியன் சேல் தொடங்க இருக்கிறது. இந்த சேல்களில் ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் ஆஃபர்களை கொடுக்க இருக்கின்றன. இதில் ஒன்பிளஸ் ஃபெஸ்டிவ் சேல் 2026 (OnePlus Festive Sale 2026) என்னும் சிறப்பு விற்பனையும் இருக்கிறது.
அக்டோபர் 8ஆம் தேதி முதல் அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட ஈ-காமர்ஸ் தளங்களில் தொடங்க இருக்கிறது. இதில் ரூ.3,500 வரையிலான தள்ளுபடியுடன் ஒன்பிளஸ் டேப்லெட்களும், ரூ.2,000 வரையிலான தள்ளுபடியுடன் ஒன்பிளஸ் இயர்பட்ஸ் மாடல்களும் கிடைக்க இருக்கின்றன. எந்தெந்த மாடல்களுக்கு எவ்வளவு தள்ளுபடி கிடைக்கிறது?

ஒன்பிளஸ் டேப்லெட்கள்:
ஒன்பிளஸ் பேட் 4 (OnePlus Pad 4) டேப்லெட்டின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் வழக்கமான விலை ரூ.62,999ஆகவும், விற்பனை விலை ரூ.62,999ஆகவும் இருக்கிறது. மேலும், இலவச ஸ்டைலோ ப்ரோ (Stylo Pro) கிடைக்கிறது. ரூ.4,500 பேங்க் டிஸ்கவுண்ட் போக ரூ.58,499 விலைக்கு கிடைக்க இருக்கிறது.
ஒன்பிளஸ் பேட் கோ2 (OnePlus Pad Go2) டேப்லெட்டின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் வழக்கமான விலை ரூ.29,999ஆக உள்ளது. இப்போது, விற்பனை விலை ரூ.29,999ஆகவும் இருக்கிறது. மேலும், இலவச கோ2 ஸ்டைலோ (Go2 Stylo கிடைக்கிறது. ரூ.1,500 பேங்க் டிஸ்கவுண்ட் போக ரூ.28,499 விலைக்கு கிடைக்க இருக்கிறது.
ஒன்பிளஸ் பேட் லைட் (OnePlus Pad Lite) டேப்லெட்டின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் வழக்கமான விலை ரூ.24,999ஆகவும், விற்பனை விலை ரூ.22,999ஆகவும் இருக்கிறது. இந்த டேப்லெட்டுக்கு கூடுதல் பேங்க் டிஸ்கவுண்ட் எதுவும் இல்லை என்பதால், ரூ.22,999 விலைக்கு கிடைக்க இருக்கிறது.
ஒன்பிளஸ் இயர்பட்ஸ் மாடல்கள்:
ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 3 (OnePlus Buds Pro 3) இயர்பட்ஸின் வழக்கமான விலை ரூ.12,999ஆகவும், விற்பனை விலை ரூ.10,999ஆகவும் இருக்கிறது. ரூ.2,000 பேங்க் டிஸ்கவுண்ட் போக ரூ.8,999 விலைக்கு கிடைக்க இருக்கிறது. ஒன்பிளஸ் பட்ஸ் 4 (OnePlus Buds 4) ஒன்பிளஸ் Buds 4 இயர்பட்ஸின் வழக்கமான விலை ரூ.6,499ஆகவும், விற்பனை விலை ரூ.5,899ஆகவும் இருக்கிறது.
ரூ.500 பேங்க் டிஸ்கவுண்ட் போக ரூ.5,399 விலைக்கு கிடைக்க இருக்கிறது. ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 4 ப்ரோ (OnePlus Nord Buds 4 Pro) இயர்பட்ஸின் வழக்கமான விலை ரூ.4,299ஆகவும், விற்பனை விலை ரூ.3,899ஆகவும் இருக்கிறது. ரூ.300 பேங்க் டிஸ்கவுண்ட் போக ரூ.3,599 விலைக்கு கிடைக்க இருக்கிறது. ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 4 இயர்பட்ஸின் வழக்கமான விலை ரூ.3,299ஆக உள்ளது.
இப்போது, விற்பனை விலை ரூ.2,899ஆகவும் இருக்கிறது. ரூ.200 பேங்க் டிஸ்கவுண்ட் போக ரூ.2,699 விலைக்கு கிடைக்க இருக்கிறது. ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 3ஆர் இயர்பட்ஸின் வழக்கமான விலை ரூ.1,999ஆகவும், விற்பனை விலை ரூ.1,699ஆகவும் இருக்கிறது. ரூ.100 பேங்க் டிஸ்கவுண்ட் போக ரூ.1,599 விலைக்கு கிடைக்க இருக்கிறது.
ஒன்பிளஸ் புல்லட்ஸ் வயர்லெஸ் இசட்3 (OnePlus Bullets Wireless Z3) நெக்பேண்டின் வழக்கமான விலை ரூ.1,999ஆகவும், விற்பனை விலை ரூ.1,599ஆகவும் இருக்கிறது. ரூ.200 பேங்க் டிஸ்கவுண்ட் போக ரூ.1,399 விலைக்கு கிடைக்க இருக்கிறது. ஒன்பிளஸ் புல்லட்ஸ் வயர்லெஸ் இசட்1 ஏஎன்சி (OnePlus Bullets Wireless Z2 ANC) நெக்பேண்டின் வழக்கமான விலை ரூ.2,299ஆக உள்ளது.
இப்போது விற்பனை விலை ரூ.2,099ஆகவும் இருக்கிறது. ரூ.100 பேங்க் டிஸ்கவுண்ட் போக ரூ.1,999 விலைக்கு கிடைக்க இருக்கிறது. இதேபோல ஸ்மார்ட்போன்களுக்கும் தள்ளுபடி கிடைக்கிறது. அமேசான், பிளிப்கார்ட் தளங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்குகளின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு மட்டுமே இந்த தள்ளுடி கிடைக்கும்.


Click it and Unblock the Notifications
