Home
Gadgets

வெயிட்டிங் முடிந்தது.. 12140mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. 16GB ரேம்.. 144Hz டிஸ்பிளே.. புது OnePlus டேப்லெட்!

இந்தியாவில் இருக்கும் ஒன்பிளஸ் பிரியர்களை வெயிட்டிங் மோடில் வைத்திருந்த ஒன்பிளஸ் பேட் 3 (OnePlus Pad 3) டேப்லெட்டின் விலை விவரங்கள் அதிகாரப்பூர்வமாக உறுதியாகி இருக்கின்றன. எதிர்பார்த்தை போலவே பிரீமியம் டேப்லெட்டாக இருப்பது விலையில் தெரிகிறது. 2 வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்க இருக்கின்றன. இந்த ஒன்பிளஸ் பேட் 3 டேப்லெட்டின் பீச்சர்கள் மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஒன்பிளஸ் 13எஸ் (OnePlus 13s) ஸ்மார்ட்போனானது ஜூன் 5ஆம் தேதி இந்தியாவில் வெளியாகியது. அதே தேதியில் ஒன்பிளஸ் பேட் 3 டேப்லெட்டின் முழு பீச்சர்கள், டிசைன் மற்றும் கலர் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகின. ஆனால், விலை விவரங்களும், விற்பனை விவரங்களும் வெளியாகவில்லை. ஓரிரு வாரங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

வெயிட்டிங் முடிந்தது.. 12140mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. 16GB ரேம்!

ஆனால், ஆகஸ்ட் 23ஆம் அன்றுதான் விற்பனை தேதியே உறுதி செய்யப்பட்டது. செப்டம்பர் 4ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அப்போதும், விலை விவரங்கள் உறுதியாகவில்லை. இந்த நேரத்தில் செப்டம்பர் 1ஆம் தேதியான இன்று விலை விவரங்கள் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு பிறகு விலை விவரங்கள் உறுதியாகி இருக்கிறது. செப்டம்பர் 5ஆம் தேதி அமேசான் (Amazon), பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் ஒன்பிளஸ் ஆகிய தளங்களில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. இந்த ஒன்பிளஸ் பேட் 3 மாடலின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.47,999ஆக இருக்கிறது.

அதேபோல 16 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.52,999ஆக இருக்கிறது. இந்த விலையில் ஆர்டர் செய்யும் கஸ்டமர்களுக்கு ரூ.7,198 மதிப்புள்ள ஒன்பிளஸ் ஸ்டைலோ 2 (OnePlus Stylo 2) மற்றும் ஒன்பிளஸ் பேட் 3 கேஸ் (OnePlus Pad 3 Case) கொடுக்கப்படுகிறது. இதற்கு செப்டம்பர் 5ஆம் தேதி முதல் செப்டம்பர் 7ஆம் தேதிக்குள் ஆர்டர் செய்ய வேண்டும்.

அதன்பிறகு ஒன்பிளஸ் டேப்லெட் மட்டுமே கிடைக்கும். இதுபோக அறிமுக சலுகையாக ரூ.5,000 பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. மேலும், 12 மாதங்களுக்கான நோ-காஸ்ட் ஈஎம்ஐ (No Cost EMI) சலுகை கிடைக்கிறது. இந்த பேங்க் சலுகைகளை பெறுவதற்கு குறிப்பிட்ட பேங்க் கார்டுகளை கஸ்டமர்கள் பயன்படுத்த வேண்டும். இப்போது முழு பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.

ஒன்பிளஸ் பேட் 3 அம்சங்கள் (OnePlus Pad 3 Specifications): இந்த டேப்லெட்டில் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 3என்எம் (Octa Core Snapdragon 8 Elite 3nm) சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) பேஸ்டு ஆக்ஸிஜன் ஓஎஸ் 15 (OxygenOS 15) கிடைக்கிறது. இந்த சிப்செட்டுக்கு கிடைக்கும் அட்ரினோ 830 ஜிபியு (Adreno 830 GPU) கிராபிக்ஸ் கார்டு உள்ளது.

144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3.4K ரெசொலூஷன் கொண்ட 13.2 இன்ச் (3392 x 2400 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இருப்பினும், ஓடிடி பிரியர்களுக்கு ஏற்ப டால்பி விஷன் (Dolby Vision) கிடைக்கிறது. மேலும், 540Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 900 நிட்ஸ் எச்பிஎம் மோட் வருகிறது. 13 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி செல்பீ கேமரா உள்ளது.

இந்த ஒன்பிளஸ் பேட் 3 டேப்லெட்டில் 80W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 12140mAh பேட்டரி கிடைக்கிறது. ஏஐ டிரான்ஸ்லேஷன், ஏஐ சம்மரி மற்றும் ஏஐ ரைட்டர் போன்ற லேப்டாப்புக்கு நிகரான பீச்சர்கள் கிடைக்கின்றன. மொத்தமாக 8 ஸ்பீக்கர்கள் உள்ளன. இதை ஸ்டார்ம் ப்ளூ (Storm Blue) மற்றும் ப்ரோஸ்டட் சில்வர் (Frosted Silver) கலர்களில் வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
OnePlus Pad 3 With Snapdragon 8 Elite Price Revealed Sale From September 5 Check Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X