பின்றானே இவன்.. 144Hz டிஸ்பிளே.. 16GB ரேம்.. 80W சார்ஜிங்.. 12140mAh பேட்டரி.. 8 ஸ்பீக்கர்கள்.. எந்த மாடல்?
இந்தியாவில் இருக்கும் ஒன்பிளஸ் பிரியர்களுக்கு டபுள் ட்ரீட் என்றே சொல்ல வேண்டும். ஒன்பிளஸ் 13எஸ் (OnePlus 13s) மட்டுமல்லாமல், ஒன்பிளஸ் பேட் 3 (OnePlus Pad 3) மாடலும் களமிறங்கி இருக்கிறது. 16 ஜிபி ரேம், 80W ஃபாஸ்ட் சார்ஜிங், 12140mAh பேட்டரி, 8 ஸ்பீக்கர்கள் போன்ற பீச்சர்களில் பின்னி எடுக்கிறது. ஸ்னாப்டிராகன் 8 எலைட் மொபைல் சிப்செட் கொண்ட இந்த ஒன்பிளஸ் பேட் 3 மாடலின் முழு பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
குளோபல் மார்கெட்டில் இந்த டேப்லெட் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. இந்திய மார்கெட்டில் முழு பீச்சர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. ஒன்பிளஸ் இந்தியா (OnePlus India) வெப்சைட்டில் கலர், டிசைன் மற்றும் பீச்சர்கள் வெளியாகி இருக்கின்றன. ஆனால், விலை விவரங்கள் வெளியாகவில்லை. ஓரிரு நாட்களில் வெளியாக வாய்ப்புள்ளது. முதலில் பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.

ஒன்பிளஸ் பேட் 3 அம்சங்கள் (OnePlus Pad 3 Specifications): இந்த ஒன்பிளஸ் டேப்லெட்டில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் வெளியாகி இருக்கின்றன. அலுமினியம் யுனிபாடி (Aluminum Unibody) டிசைனில் ஸ்டார்ம் ப்ளூ (Storm Blue), ஃப்ரோஸ்டெட் சில்வர் (Frosted Silver) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கின்றன.
8 ஸ்பீக்கர்கள் (4 வூப்பர்கள் மற்றும் 4 ட்வீடர்கள்) கிடைக்கின்றன. 13.2 இன்ச் (3392 x 2400 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த எல்டிபிஎஸ் (LTPS) டிஸ்பிளேவில் 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 3.4K ரெசொலூஷன் கிடைக்கிறது. மேலும், 315 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது. டால்பி விஷன் (Dolby Vision) சப்போர்ட் உள்ளது.
மேலும், டிசிஐ பி3 கலர் காமட் மற்றும் 120Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. 900 நிட்ஸ் எச்பிஎம் மோட் வருகிறது. இந்த ஒன்பிளஸ் பேட் 3 மாடலில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் மொபைல் (Qualcomm Snapdragon 8 Elite Mobile) சிப்செட் கிடைக்கிறது. அட்ரினோ 830 ஜிபியு (Adreno 830 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) வருகிறது.

80W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 12140mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த பேட்டரியுடன் வெறும் 5.97 எம்எம் தடிமன் மட்டுமே வருகிறது. ஆகவே, அல்ட்ரா ஸ்லிம் மாடலாக எதிர்பார்க்கலாம். இருப்பினும், எடை 675 கிராம் எடை இருக்கிறது. 13 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி செல்பீ ஷூட்டர் கொடுக்கிறது. 4K வீடியோ ரெக்கார்டிங், ஈஐஎஸ் (EIS) டெக்னாலஜி வருகிறது.
இந்த ஒன்பிளஸ் டேப்லெட்டில் ஆக்ஸிஜன் ஓஎஸ் 15 (Oxygen OS 15) கிடைக்கிறது. இந்த ஓஎஸ் மூலம் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களுடன் வீடியோ + இமேஜ் சின்ங், நோட்டிபிகேஷன் சின்ங், கிளிப்போர்ட் சின்ங் மற்றும் ஆப் ரிலே போன்றவற்றை செய்து கொள்ளலாம். மேலும், ஒன்பிளஸ் ஏஐ (OnePlus AI) பீச்சர்களை இந்த டேப்லெட்டில் பயன்படுத்தி கொள்ளலாம்.
ஏஐ டிரான்லேஷன் (AI Translation), ஏஐ சம்மரி (AI Summary), ஏஐ ரைட்டர் (AI Writer) மற்றும் ஏஐ ஸ்பீக் (AI Speak) போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. கூகுள் ஜெமினி பீச்சர்களையும் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த டேப்லெட்டுக்கு ஒன்பிளஸ் ஸ்டைலோ 2 (OnePlus Stylo 2) பென்சில் மற்றும் ஒன்பிளஸ் ஸ்மார்ட் கிரீபோர்ட் சப்போர்ட் உள்ளது.
இந்த ஒன்பிளஸ் பேட் 3 மாடலின் ஐரோப்பிய மார்கெட் விலை ரூ.61,579ஆக இருக்கிறது. இந்தியாவிலும் இதே பட்ஜெட்டில் கிடைக்க வாய்ப்புள்ளது. ஏனென்றால், குளோபல் மாடலுக்கும், இந்திய மாடலுக்கும் வித்தியாசம் இல்லை. ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. ஒன்பிளஸ் இந்தியா நிறுவனம், விரைவில் விலை விவரங்களை கொடுக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.


Click it and Unblock the Notifications