OnePlus ஒரே போடு.. ஜூன்.5 குறிச்சாச்சு.. 12140mAh பேட்டரி.. 67W சார்ஜிங்.. 144Hz டிஸ்பிளே.. எந்த டேப்லெட்?
இந்திய மார்கெட்டில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிவிட்ட ஒன்பிளஸ் 13எஸ் (OnePlus 13s) போனானது, ஜூன் 5ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதே நாளில் ஒன்பிளஸ் பேட் 3 (OnePlus Pad 3) மாடலானது குளோபல் மார்கெட்டில் களமிறங்க இருக்கிறது. ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் கொண்ட இந்த ஒன்பிளஸ் பேட் 3 டேப்லெட்டின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஒன்பிளஸ் டேப்லெட் மாடல்களிலேயே அதிக பேட்டரி கேபாசிட்டி கொண்ட மாடலாக இந்த ஒன்பிளஸ் பேட் 3 வெளியாக இருக்கிறது. ஜூன் 5ஆம் தேதி அன்று வட அமெரிக்கா, கனடா, ஐரோப்பா மற்றும் யுகே உள்ளிட்ட பல்வேறு நாடுகள் உள்பட குளோபல் மார்கெட்டில் வெளியாக இருக்கிறது. சிப்செட், டிஸ்பிளே, பேட்டரி போன்ற பீச்சர்கள் மார்கெட்டில் வெளியாகி இருக்கின்றன.

ஒன்பிளஸ் பேட் 3 அம்சங்கள் (OnePlus Pad 3 Specifications): இந்த டேப்லெட்டில் 13.2 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி (IPS LCD) டிஸ்பிளே வர இருக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 3.4K ரெசொலூஷன், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 900 நிட்ஸ் எச்பிஎம் (HBM) கிடைக்கிறது. லேட்டஸ்ட் ஒன்பிளஸ் மாடல்களில் கிடைக்கும் கலர்ஓஎஸ் 15 (ColorOS 15) கிடைக்க இருக்கிறது.
ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Octa Core Qualcomm Snapdragon 8 Elite) சிப்செட் கிடைக்கிறது. 13 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. 67W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 12140mAh பேட்டரி கிடைக்கிறது. 8 ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ் (Dolby Atmos) ஆடியோ சப்போர்ட் உள்ளது.
இந்த ஒன்பிளஸ் பேட் 3 மாடலானது, வெறும் 5.97 எம்எம் தடிமன் மற்றும் 675 கிராம் எடை மட்டுமே கொண்டிருக்கிறது. 2 கலர்களில் வெளியாக இருக்கிறது. மேற்கண்ட பீச்சர்களில் சிப்செட் மட்டும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற பீச்சர்கள் மார்கெட்டில் கசிந்தவை மட்டுமே. ரூ.40,000 அல்லது ரூ.45,000 பட்ஜெட்டில் ஆரம்ப விலை இருக்க வாய்ப்புள்ளது.

இதற்கு முன்பு வெளியான ஒன்பிளஸ் பேட் 2 (OnePlus Pad 2) மாடலை பற்றி இங்கு தெரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால், அந்த டேப்லெட்டில் இருந்து என்னென்ன பீச்சர்கள் அப்கிரேட் செய்யப்பட்டு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள முடியும். ஒன்பிளஸ் பேட் 2 டேப்லெட்டில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) பேஸ்டு ஆக்ஸிஜன்ஓஎஸ் 14 (OxygenOS 14) கிடைக்கிறது.
12.1 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே மற்றும் அதில் 3K ரெசொலூஷன் கிடைக்கிறது. இதுபோக 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 303 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. ஆகவே, ஒன்பிளஸ் பேட் 3 மாடலானது, டிஸ்பிளேவில் அப்கிரேட் செய்யப்பட்டு இருக்கிறது. அதேபோல ஒன்பிளஸ் பேட் 2 மாடலில் 9510mAh பேட்டரி மட்டுமே கிடைக்கிறது.
ஆனால், ஒன்பிளஸ் பேட் 3 மாடலில் 12140mAh பேட்டரி கிடைக்க இருக்கிறது. இருப்பினும், 67W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. 6 ஸ்பீக்கர்கள் வருகிறது. ஆனால், ஒன்பிளஸ் 3 மாடலில் 8 ஸ்பீக்கர்கள் கிடைக்க இருக்கிறது. 13 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி செல்பீ கேமரா ஒரே மாதிரியாகவே இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








