செப்.5-க்கு அப்புறம் இதுதான்.. 12140mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. 12GB ரேம்.. புது OnePlus பேட்.. எந்த மாடல்?
இதுக்குதான வெயிட் பண்ணோம் என்று ஒட்டுமொத்த ஒன்பிளஸ் பிரியர்களும் குஷியாகும்படி ஒன்பிளஸ் பேட் 3 (OnePlus Pad 3) மாடலின் இந்திய விற்பனை தேதி உறுதியாகிவிட்டது. அமேசான் தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருப்பதும் உறுதியாகி இருக்கிறது. 12140mAh பேட்டரி, 80W ஃபாஸ்ட் சார்ஜிங், 12 ஜிபி ரேம் மற்றும் 13.2 இன்ச் டிஸ்பிளேவை கொடுக்கிறது. ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் கொண்ட இந்த ஒன்பிளஸ் பேட் 3 மாடலின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
பிரீமியம் டேப்லெட் செக்மெண்ட்டில் இது கிடைக்க இருக்கிறது. சொல்லப்போனால், இந்திய மார்கெட்டில் ஒன்பிளஸ் 13எஸ் (OnePlus 13s) ஸ்மார்ட்போன் வெளியானபோதே இந்த ன்பிளஸ் பேட் 3 மாடலும் வெளியாகிவிட்டது. ஆனால், விற்பனை தேதி குறிப்பிடப்படவில்லை. அதேபோல விலை விவரங்களும் வெளியாகவில்லை.

இருப்பினும், ஒட்டுமொத்த பீச்சர்களும் உறுதியாகின. இதையடுத்து செப்டம்பர் மாதத்தில் விற்பனைக்கு வரும் என்று ஒன்பிளஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது. அதன்படி, இப்போது விற்பனை தேதி உறுதியாகி இருக்கிறது. செப்டம்பர் 5ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. அமேசான் (Amazon) தளத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.
ஸ்டார்ம் ப்ளூ (Storm Blue) மற்றும் ப்ரோஸ்டட் சில்வர் (Frosted Silver) ஆகிய கலர்களில் வாங்கி கொள்ளலாம். இந்த டேப்லெட்டின் விலை வெளியாகவில்லை என்றாலும், குளோபல் மார்கெட்டில் விற்பனைக்கு வந்துவிட்டதால், பட்ஜெட் செக்மெண்ட்டை தெரிந்து கொள்ள முடிகிறது. இந்த செக்மெண்ட்டை பார்ப்பதற்கு முன்பாக முழு பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.
ஒன்பிளஸ் பேட் 3 அம்சங்கள் (OnePlus Pad 3 Specifications): ஃபுல் மெட்டல் பாடி டிசைனில் அல்ட்ரா ஸ்லிம் பாடி கொடுக்கிறது. வெறும் 5.97 எம்எம் தடிமன் கொண்ட மெட்டல் பாடி கிடைக்கிறது. இந்த பாடியில் 8 ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன. இதில் 4 வூப்பர்கள் கிடைப்பதால், ஸ்டீரியோ அனுபவம் பக்காவாக எதிர்பார்க்கலாம். ஹை-ரெஸ் ஆடியோ சர்டிபிகேஷன் கொடுக்கிறது.
இதுபோக 2 மைக்ரோபோன்களை கொடுக்கிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட 2 வேரியண்ட்கள் கிடைக்க இருக்கின்றன. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் 3என்எம் (Octa Core Snapdragon 8 Elite 3nm) சிப் கிடைக்கிறது. பிரீமியம் பர்ஃபாமென்ஸ் எதிர்பார்க்கலாம்.
இதுபோக அட்ரினோ 830 ஜிபியு (Adreno 830 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைப்பதால், டிஸ்பிளே அவுட்புட் பட்டையை கிளப்பும்படி இருக்கும். ஆக்ஸிஜன் ஓஎஸ் 15 (OxygenOS 15) மட்டுமல்லாமல், அதோடு ஒன்பிளஸ் ஏஐ (OnePlus AI) பீச்சர்கள் கிடைக்கின்றன. ஆகவே, இதில் ஏஐ டிரான்ஸ்லேஷன் (AI Translation), ஏஐ சம்மரி (AI Summary), ஏஐ ரைட்டர் (AI Writer) பீச்சர்கள் வருகின்றன.
இந்த ஒன்பிளஸ் டேப்லெட்டில் 13.2 இன்ச் (3392 x 2400 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 315 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 540Hz டச் சாம்பிளிங் ரேட், 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. மேலும், 900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. டால்பி விஷன் (Dolby Vision) மற்றும் 3.4K ரெசொலூஷன் கிடைக்கிறது.
ஆகவே, பிரீமியம் டிஸ்பிளே அவுட்புட் எதிர்பார்க்கலாம். 18 மணி நேரங்களுக்கு வீடியோ பிளேபேக் கொடுக்கும்படியான 12140mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு 80W சூப்பர்வூக் ஃபாஸ்ட் கிடைக்கிறது. இந்த ஒன்பிளஸ் டேப்லெட்டில் 13 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. மேலும், 8 எம்பி செல்பீ கிடைக்கிறது. ரூ.50,000 பட்ஜெட் செக்மெண்ட்டில் கிடைக்கலாம்.


Click it and Unblock the Notifications








