ஒருவழியா வந்துட்டான்.. OnePlus-ன் முரட்டு பீஸ்.. 12140mAh பேட்டரி, 8 ஸ்பீக்கர், 16GB ரேம்.. செப்.5 முதல் SALE!
ஒருவழியாக கடந்த 2025 ஜூன் மாதத்தில் ஒன்பிளஸ் 13எஸ் (OnePlus 13s) ஸ்மார்ட்போன் உடன் சேர்த்து இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் பேட் 3 (OnePlus Pad 3) டேப்லெட்டின் இந்திய விற்பனை தேதி (India Sale Date) அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஒன்பிளஸ் பேட் 3 இந்திய விற்பனை தேதி மற்றும் விற்பனை விவரங்கள் (OnePlus Pad 3 India Sale Date): ஒன்பிளஸ் பேட் 3 டேப்லெட் ஆனது வருகிற செப்டம்பர் 5 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு, ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் வழியாக விற்பனைக்கு வரும் என்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

ஒன்பிளஸ் பேட் 3 டேப்லெட்டின் இந்திய விலை விவரங்கள் (OnePlus Pad 3 Price in India): ஒன்பிளஸ் பேட் 3 டேப்லெட்டின் இந்திய விலை விற்பனைக்கு வரும் நாளில் (செப்டம்பர் 5) தான் வெளியிடப்படும். இது 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 16ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் என்கிற 2 வேரியண்ட்காலில், ஃப்ரோஸ்டட் சில்வர் மற்றும் ஸ்டார்ம் ப்ளூ ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு வரும்.
எதிர்பார்க்கப்படும் விலையை பொறுத்தவரை, இந்தியாவில் ஒன்பிளஸ் பேட் 3 மாடலின் விலை ரூ.50,000 க்கும் குறைவாகவே இருக்கும். ஏனென்றால் ஒன்பிளஸ் பேட் 2 டேப்லெட்டின் ஆரம்ப விலை ரூ.47,999 ஆக இருந்தது. இருப்பினும் தற்போது இது ரூ.39,999 என்கிற ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது.
ஒன்பிளஸ் பேட் 3 முக்கிய அம்சங்கள்: ஒன்பிளஸ்-ன் இந்த புதிய டேப்லெட் ஆனது 144Hz வரையிலான ரெப்ரெஷ் உடனான 13.2-இன்ச் 3.4K LCD டிஸ்பிளே மற்றும் TÜV Rheinland ஐ கேர் 4.0 சான்றிதழை கொண்டுள்ளது. மேலும் ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Snapdragon 8 Elite) சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது, இது 16ஜிபி வரையிலான LPDDR5T ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இது 12140mAh பேட்டரியை பேக் செய்கிறது.
ஒன்பிளஸ் பேட் 3 விரிவான அம்சங்கள் (OnePlus Pad 3 Features Specifications):
- 13.2-இன்ச் 3.4கே (2400 × 3392 பிக்சல்ஸ்) எல்சிடி டிஸ்பிளே
- 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 600 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- 540ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட்
- TÜV ரெயிண்லேண்ட் ஐ கேர் 4.0 சான்றிதழ்
- அட்ரெனோ 830 ஜிபியு
- ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்
- 16ஜிபி வரை LPDDR5T ரேம்
- 512GB வரை UFS 4.0 இன்டர்னல் ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான ஆக்சிஜன் ஓஎஸ் 15 (OxygenOS 15)
- கூகுள் ஜெமினை (Google Gemini), சர்க்கிள் டூ சேர்ச் (Circle to Search) மற்றும் ஒன்பிளஸ் ஏஐ (OnePlus AI) அம்சங்கள்
- பின்புறத்தில் 13-மெகாபிக்சல் சென்சார்
- முன்பக்கத்தில் 8-மெகாபிக்சல் சென்சார்
- எட்டு ஸ்பீக்கர்ஸ்
- LHDC ஆடியோ கோடெக்கை ஆதரிக்கிறது
- ஹை-ரெஸ் ஆடியோ வயர்லெஸ் சான்றிதழுடன் வருகிறது
- வெப்ப மேலாண்மைக்கான கிராஃபீன் கம்போசைட் வேப்பர் சேம்பர்களை கொண்டுள்ளது.
- 80W சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு
- 12140mAh பேட்டரி
- ப்ளூடூத் 5.4
- வைஃபை 7
- யூஸ்எஸ்பி டைப்-சி ஆதரவு
- ஒன்பிளஸ் ஸ்டைலோ 2 (OnePlus Stylo 2) மற்றும் ஒன்பிளஸ் ஸ்மார்ட் கீபோர்டுடன் இணக்கமானது
- அளவீட்டில் 289.61×209.66×5.97மிமீ
- எடையில் 675 கிராம்.


Click it and Unblock the Notifications








