Home
Gadgets

இதென்ன Tablet-ஆ இல்ல மினி லேப்டாப்-ஆ.. 16GB ரேம், Snapdragon 8 Elite சிப், 10000mAh பேட்டரி.. OnePlus சம்பவம்!

இதென்ன ஆண்ட்ராய்டு டேப்லெட்-ஆ அல்லது ஒரு மினி லேப்டாப்-ஆ என்று கேட்கத்தூண்டும் படியான அம்சங்களுடன் ஒன்பிளஸ் நிறுவனம் அதன் அடுத்த டேப்லெட் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது போல் தெரிகிறது. அதென்ன மாடல்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? என்ன விலைக்கு வரும்?

என்ன மாடல்? ஒன்பிளஸ் நிறுவனம் அதன் பிளாக்ஷிப் டேப்லெட் மாடல் ஆன ஒன்பிளஸ் பேட் ப்ரோ (OnePlus Pad 2) டேப்லெட்டின் அப்கிரேடட் வெர்ஷனை உருவாக்கி வருகிறது. அது ஒன்பிளஸ் பேட் 2 ப்ரோ (OnePlus Pad 2 Pro) என்று அழைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சீனாவின் 3சி சான்றிதழ் தரவுத்தளத்தில் காணப்பட்டுள்ளதால், இது கூடிய விரைவில் சீனாவில் அறிமுகமாகி பின் இந்திய சந்தைக்குள் வரும் என்பது போல் தெரிகிறது.

இதென்ன Tablet-ஆ இல்ல மினி லேப்டாப்-ஆ.. OnePlus சம்பவம்!

ஒன்பிளஸ் பேட் 2 ப்ரோ டேப்லெட்டில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? சீனாவின் 3சி சான்றிதழ் தரவுத்தளத்தின் வழியாக இது 80W பாஸ்ட் சார்ஜிங் திறனை கொண்டிருக்கும் என்பது தெரியவந்துள்ளது. சமீபத்தில் கீக்பெஞ்ச் (Geekbench) இல் காணப்பட்ட போது, இதன் ப்ராசஸர் மற்றும் ஆப்ரேட்டிங் சிஸ்டம் பற்றிய முக்கிய விவரங்களை உறுதிப்படுத்தபட்டது.

கீக்பெஞ்ச்சில் காணப்பட்ட ஒன்பிளஸ் பேட் 2 ப்ரோ மாடல் ஆனது ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான இயக்க முறைமையில் இயங்குகிறது மற்றும் 16ஜிபி ரேம்-ஐ கொண்டுள்ளது. ஒன்பிளஸ் நிறுவனத்தின் இந்த புதிய டேப்லெட் ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Snapdragon 8 Elite) சிப்செட்டால் இயக்கப்படுகிறது என்பதை முந்தைய அறிக்கைகள் உறுதிப்படுத்தியுள்ளன. இது சிங்கிள்-கோர் சோதனையில் 2633 புள்ளிகளையும், கீக்பெஞ்ச் 6-ன் மல்டி-கோர் சோதனையில் 7779 புள்ளிகளையும் பெற்றுள்ளது.

ஒன்பிளஸ் பேட் 2 ப்ரோ மாடல்லில் வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 3.4கே ரெசல்யூஷன் உடனான 13.2-இன்ச் எல்சிடி பேனலை கொண்டிருக்கலாம். சிப்செட்டை பொறுத்தவரை முன்னரே குறிப்பிட்டபடி ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் உடன் வரலாம்.

இது 16 ஜிபி வரை LPDDR5x ரேம் மற்றும் 1 TB வரை UFS 4.0 ஸ்டோரேஜை பேக் செய்யலாம். இந்த டேப்லெட் ஆண்ட்ராய்டு 15 க்கான கலர்ஓஎஸ்ஸில் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 80W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் சுமார் 10,000mAh திறன் கொண்ட பேட்டரியை கொண்டிருக்கலாம்.

கேமராக்களை பொறுத்தவரை ஒன்பிளஸ் பேட் 2 ப்ரோவில் 13 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா இருக்கலாம். ஒன்பிளஸ் பேட் 2 ப்ரோ டேப்லெட் ஆனது 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் (ரூ.50,000 - ரூ.60,000 பட்ஜெட்டில்) சீனாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் இந்திய சந்தைக்கும் நிச்சயம் வரும். ஏனென்றால் ஒன்பிளஸ் பேட் 2 மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

Take a Poll

ஒன்பிளஸ் பேட் 2 டேப்லெட்டின் முக்கிய அம்சங்கள்: இது 3000 × 2120 ரெசல்யூஷன், 900நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 12.1-இன்ச் எல்சிடி டிஸ்பிளே, 6 ஸ்பீக்கர் செட்டப், ஹை-ரெஸ் சவுண்ட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட், 8 ஜிபி / 12 ஜிபி ரேம், 128 ஜிபி / 256 ஜிபி ஸ்டோரேஜ், 13எம்பி ரியர் கேமரா, 8எம்பி செல்பீ கேமரா மற்றும் 67W SUPERVOOC வயர்டு பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 9510mAh பேட்டரியை கொண்டுள்ளது.

ஒன்பிளஸ் பேட் 2 விலை விவரங்கள்: இந்த டேப்லெட்டின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.39,999 க்கும், 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.42,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டது. ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் தலைமுறை டேப்லெட்டை போலவே ஒன்பிளஸ் பேட் 2 மாடலும் வைஃபை வேரியண்ட்டில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனுடன் இணைக்கப்படும் போது செல்லுலார் டேட்டா பகிர்வுக்கான விருப்பத்தை வழங்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Pad 2 Pro With Snapdragon 8 Elite 16GB RAM Confirmed By Geekbench Listing
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X