9510mAh பேட்டரி, ஸ்னாப்டிராகன் 8 எலைட், 16GB ரேம்.. Samsung, Apple-க்கு ஆட்டம் காட்ட OnePlus புதிய டேப்லெட்!
ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனத்தின் புதிய ஒன்பிளஸ் பென்சில் குறித்த விவரங்கள் வெளியான வேகத்தில், இந்நிறுவனம் ஒரு புதிய ஹை-எண்ட் டேப்லெட்டை அறிமுகம் செய்யலாம் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. அது குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் மூலம் இயக்கப்படும் ஒன்பிளஸ் பேட் 2 ப்ரோ (OnePlus Pad 2 Pro) டேப்லெட் ஆக இருக்கலாம்.
முதலில் ஒன்பிளஸ் பேட் 2 ப்ரோ டேப்லெட் ஆனது OPD2409 என்கிற மாடல் நம்பரின் கீழ் கீக்பெஞ்ச் தரவுத்தளத்தில் காணப்பட்டது. அப்போது இது சிங்கிள்-கோரில் 2633 மற்றும் மல்டி-கோரில் 7779 மதிப்பெண்களை பெற்று இருந்தது. இப்போது OPD2413 என்கிற வித்தியாசமான மாடல் நம்பரில் கீழ் இன்னொரு ஒன்பிளஸ் டேப்லெட் காணப்பட்டுள்ளது

இது சிங்கிள்-கோரில் 3091 மற்றும் மல்டி-கோரில் 9638 மதிப்பெண்களை பெற்றுள்ளது. அனால் இரண்டு லிஸ்டிங்களுமே 16 ஜிபி ரேம் மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ்-ஐ வெளிப்படுத்துகின்றன. மேலும் இரண்டு கீக்பெஞ்ச் லிஸ்டிங்களும் (OPD2413 மற்றும் OPD2409) ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்டை உறுதிப்படுத்துகின்றன. இது 8-கோர் அமைப்பை கொண்ட ஒரு பிளாக்ஷிப் சிப் ஆகும். கீக்பெஞ்ச் சிபியு மதிப்பெண்கள் ஆனது இதை பிரீமியம் ஸ்மார்ட்போன்களுடன் இணைக்கின்றன.
எப்சிசி (FCC) ஆல் சான்றளிக்கப்பட்ட OPD2408 மாடல் ஆனது உலகளாவிய வெர்ஷன் ஆக இருக்கலாம். அதாவது இந்தியா உட்பட பல உலக சந்தைகளில் அறிமுகம் செய்யப்படலாம். அதே நேரத்தில் OPD2413 மாடல் ஆனது சீனாவிற்கு மட்டுமே சொந்தமானதாக இருக்கலாம். அதாவது சீனாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்படலாம். இருப்பினும் இப்போதைக்கு இது வெறும் அறிவார்ந்த யூகம் தான்.
சமீபத்தில் சீனாவில் இதே ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் உடன் அறிமுகப்படுத்தப்பட்ட ஒப்போ பேட் 4 ப்ரோ (Oppo Pad 4 Pro) டேப்லெட்டில் நாம் கண்ட பல முக்கிய அம்சங்கள் ஒன்பிளஸ்-ன் புதிய டேப்லெட்டிலும் இடம்பெற அதிக வாய்ப்புள்ளது. ஏனென்றால் ஒன்பிளஸ் மற்றும் ஒப்போ டேப்லெட்டுகள் கடந்த காலங்களில் அம்சங்களை பகிர்ந்து கொண்டுள்ளன
எனவே ஒன்பிளஸ் பேட் 2 ப்ரோ டேப்லெட் மாடலில் 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 13.2-இன்ச் 3.4கே எல்சிடி டிஸ்பிளே, 900 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 256ஜிபி அல்லது 512ஜிபி UFS 4.0 ஸ்ஸ்டோரேஜ், 13எம்பி ரியர் கேமரா, 8எம்பி செல்பீ கேமரா மற்றும் 67W பாஸ்ட் சார்ஜிங் கொண்ட ஒரு பெரிய 12,140mAh பேட்டரி ஆகிய அம்சங்கள் இடம்பெற்றால் அதில் ஆச்சரியப்படுவதற்கில்லை.
எங்களுடைய யூகங்கள் உண்மையாக இருந்தால், ஒன்பிளஸ் பேட் 2 ப்ரோ டேப்லெட் ஆனது "குறைந்தபட்சம்" செயல்திறன் அடிப்படையில் சாம்சங் (Samsung) அல்லது ஆப்பிள் (Apple) நிறுவனத்தில் பிரீமியம் டேப்லெட்டுகளுக்கு போட்டியாக இருக்கும். இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாததால், கீக்பெஞ்ச் மற்றும் எப்சிசி வழியாக நமக்கு கிடைத்த எல்லா விவரங்களையும் மேலோட்டமாக எடுத்துக்கொள்வதும் நல்லது தான்.
ஒன்பிளஸ் பேட் 2 டேப்லெட்டின் முக்கிய அம்சங்கள்: இது 3000 × 2120 ரெசல்யூஷன், 900நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 12.1-இன்ச் எல்சிடி டிஸ்பிளே, 6 ஸ்பீக்கர் செட்டப், ஹை-ரெஸ் சவுண்ட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட், 8 ஜிபி / 12 ஜிபி ரேம், 128 ஜிபி / 256 ஜிபி ஸ்டோரேஜ், 13எம்பி ரியர் கேமரா, 8எம்பி செல்பீ கேமரா மற்றும் 67W SUPERVOOC வயர்டு பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 9510mAh பேட்டரியை கொண்டுள்ளது.
ஒன்பிளஸ் பேட் 2 விலை விவரங்கள்: கடந்த 2024 இல் இந்த டேப்லெட்டின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.39,999 க்கும், 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.42,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டது. இது ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் தலைமுறை டேப்லெட்டை போலவே வைஃபை வேரியண்ட்டில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டது.


Click it and Unblock the Notifications