Home
Gadgets

OnePlus-ன் புதிய டேப்லெட்.. 10000mAh பேட்டரி, ஸ்னாப்டிராகன் 8 எலைட், 13.2-இன்ச் டிஸ்பிளே.. எந்த மாடல்?

ஆப்பிள் ஐபேட் 2025 மாடல்கள் அறிமுகமான வேகத்தில் விவோ நிறுவனம் அதன் விவோ பேட் 4 ப்ரோ (Vivo Pad 4 Pro) மாடலையும், ஒப்போ நிறுவனம் அதன் ஒப்போ பேட் 4 ப்ரோ (Oppo Pad 4 Pro) மாடலையும் மற்றும் ஷாவ்மீ நிறுவனம் அதன் ஷாவ்மீ பேட் 7எஸ் ப்ரோ (Xiaomi Pad 7s Pro) மாடலையும் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகின.

இதற்கிடையில் சாம்சங் அதன் புதிய கேலக்ஸி டேப் எஸ்10 எப்இ (Samsung Galaxy Tab S10 FE) மற்றும் கேலக்ஸி டேப் எஸ்10 எப்இ பிளஸ் (Samsung Galaxy Tab S10 FE Plus) டேப்லெட்களை அறிமுகப்படுத்த தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது. இவ்விரண்டுமே அடுத்த 2 வாரங்களுக்குள் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

OnePlus-ன் புதிய டேப்லெட்.. 10000mAh பேட்டரி, ஸ்னாப்டிராகன் 8 எலைட்!

தற்போது இந்த பட்டியலில் ஒன்பிளஸ் நிறுவனமும் சேர்ந்துள்ளது போல் தெரிகிறது. ஒரு சமீபத்திய அறிக்கையின்படி, இந்த ஆண்டின் முதல் பாதியில் - ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் உடனான ஒன்பிளஸ் பேட் 2 ப்ரோ (OnePlus Pad 2 Pro) அறிமுகம் செய்யப்படலாம். இது 3.4கே ரெசல்யூஷன் உடனான 13.2-இன்ச் எல்சிடி பேனலை கொண்டிருக்கலாம்.

Take a Poll

ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படும் ஒன்பிளஸ் பேட் 2 ப்ரோ டேப்லெட் ஆனது 16 ஜிபி வரை LPDDR5x ரேம் மற்றும் 1 TB வரை UFS 4.0 ஸ்டோரேஜை பேக் செய்யலாம். இந்த டேப்லெட் ஆண்ட்ராய்டு 15 க்கான கலர்ஓஎஸ்ஸில் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 80W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் சுமார் 10,000mAh திறன் கொண்ட பேட்டரியை கொண்டிருக்கலாம்.

கேமராக்களை பொறுத்தவரை ஒன்பிளஸ் பேட் 2 ப்ரோவில் 13 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா இருக்கலாம். ஒன்பிளஸ் பேட் 2 ப்ரோ டேப்லெட் ஆனது 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படும். பெரும்பாலும் இது ஒப்போ பேட் 4 ப்ரோவை போலவே இருக்கும். விலை விவரங்கள் குறித்து எந்த தகவலும் இல்லை.

கேலக்ஸி டேப் எஸ்10 எப்இ, கேலக்ஸி டேப் எஸ்10 எப்இ பிளஸ் மாடல்களில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இரண்டும் ஐபி68 தூசி மற்றும் நீர் எதிர்ப்பை கொண்ட அலுமினிய பாடியை பெறலாம், எக்ஸினோஸ் 1580 சிப்செட்டால் இயக்கப்படலாம், எக்ஸ்பேன்டபிள் ஸ்டோரேஜ் உடன் வரலாம், வைஃபை 6இ, என்எப்சி, ப்ளூடூத் 5.3 மற்றும் ஆப்ஷனல் 5ஜி ஆதரவுடன் வரலாம்

எப்இ மாடலில் 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2304 x 1440 பிக்சல்ஸ் மற்றும் எஸ் பென் ஆதரவுடன் 10.9-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே பேக் செய்யப்படலாம். இது 8000mAh பேட்டரியை கொண்டிருக்கலாம். 45W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கலாம். 13MP ரியர் கேமரா மற்றும் 12MP செல்பீ கேமராவை பேக் செய்யலாம்

எப்இ பிளஸ் மாடலில் 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2880 x 1800 பிக்சல்ஸ் மற்றும் எஸ் பென் ஆதரவுடன் 13.1-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே பேக் செய்யப்படலாம், இது 10.090mAh பேட்டரியை கொண்டிருக்கலாம். 45W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கலாம். 13MP ரியர் கேமரா மற்றும் 12MP செல்பீ கேமராவை பேக் செய்யலாம்.

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்10 எப்இ என்ன விலைக்கு வரும்? வைஃபை ஒன்லி 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் - ரூ.54,400 க்கும், வைஃபை ஒன்லி 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் - ரூ.63,700 க்கும், 5ஜி சப்போர்ட் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் - ரூ.63,700 க்கும் மற்றும் 5ஜி சப்போர்ட் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் - ரூ.73,100 க்கும் அறிமுகம் செய்யப்படலாம்.

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்10 பிளஸ் எப்இ என்ன விலைக்கு வரும்? வைஃபை ஒன்லி 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் - ரூ.70,200 க்கும், வைஃபை ஒன்லி 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் - ரூ.79,600 க்கும், 5ஜி சப்போர்ட் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் - ரூ.79,600 க்கும் மற்றும் 5ஜி சப்போர்ட் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் - ரூ.89,000 க்கும் அறிமுகம் செய்யப்படலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Pad 2 Pro Android Tablet with Snapdragon 8 Elite Expected to Launch Soon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X