கையடக்க சினிமா தியேட்டர்.. 6 ஸ்பீக்கர் செட்டப், 9510mAh பேட்டரி.. OFFER விலையில் OnePlus Pad 2 விற்பனை!
ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு டேப்லெட் ஆக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் பேட் 2 (OnePlus Pad 2) மாடலின் ஓப்பன் சேல் (Open Sale) தொடங்கியுள்ளது. ஏஐ அம்சங்களுடன் வரும் ஒன்பிளஸ் நிறுவனத்தின் இரண்டாம் தலைமுறை டேப்லெட் ஆன இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் (Qualcomm Snapdragon 8 Gen 3) மூலம் இயக்கப்படுகிறது. இந்த டேப்லெட்டின் விலை என்ன? என்னென்ன விற்பனை சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது? இது வேறு என்ன அம்சங்களை பேக் செய்கிறது? இதோ விவரங்கள்:
ஒன்பிளஸ் பேட் 2 விலை விவரங்கள்: இந்த டேப்லெட்டின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.39,999 க்கும், 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.42,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதல் தலைமுறை டேப்லெட்டை போலவே ஒன்பிளஸ் பேட் 2 மாடலும் வைஃபை வேரியண்ட்டில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கூடவே இது ஆதரிக்கப்படும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனுடன் இணைக்கப்படும் போது செல்லுலார் டேட்டா பகிர்வுக்கான விருப்பத்தை வழங்கும்.

ஒன்பிளஸ் பேட் 2 விற்பனை சலுகைகள்: ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஒன்கார்டு வாடிக்கையாளர்களுக்கு ஒன்பிளஸ் பேட் 2 டேப்லட்டை வாங்கும் போது ரூ.2,000 உடனடி தள்ளுபடி கிடைக்கும். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளில் வாடிக்கையாளர்கள் 9 மாதங்கள் வரையிலான நோ காஸ்ட் இஎம்ஐவிருப்பத்தையும் பெறலாம்.
கூடுதலாக.. வேறு பிராண்டுகளின் பழைய டேப்லெட் அல்லது ஸ்மார்ட்போனிலிருந்து (Other brand Tablet and Smartphone) அப்கிரேட் ஆக விரும்பும் பயனர்களுக்கு ரூ.3,000 எக்ஸ்சேஞ்ச் போனஸும், ஒன்பிளஸ் டேப்லெட் அல்லது ஸ்மார்ட்போனிலிருந்து (OnePlus Tablet and Smartphone) அப்கிரேட் ஆகும் பயனர்களுக்கு ரூ.5,000 எக்ஸ்சேஞ்ச் போனஸும் (Exchange Bonus) கிடைக்கும்.
ரெட் கேபிள் கிளப் உறுப்பினர்களுக்கான சலுகைகளை பொறுத்தவரை, ஒன்பிளஸ் இந்தியா மற்றும் ஒன்பிளஸ் ஸ்டோர் ஆப் வழியாக ஒன்பில்ஸ் பேட் 2 டேப்லெட்டை வாங்கினால் ரூ.1,000 கூப்பனை பெறலாம். மேலும் ஒன்பிளஸ் ஸ்டைல் 2 (OnePlus Style 2), ஒன்பிளஸ் ஸ்மார்ட் கீபோர்ட் 2 (OnePlus Smart Keyboard 2) மற்றும் ஒன்பிளஸ் ஃபோலியோ கேஸ் 2 (OnePlus Folio Case 2) ஆகியவற்ற்றை ஒன்பிளஸ் பேட் 2 உடன் சேர்த்து வாங்கும்போது 50% கூடுதல் தள்ளுபடி கிடைக்கும்.
ஒன்பிளஸ் பேட் 2 மீது அறிவிக்கப்பட்டுள்ள இந்த தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் ஆனது ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 7 வரை மட்டுமே கிடைக்கும் என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறோம். ஒன்பிளஸ் பேட் 2 டேப்லெட் ஆனது ஒன்பிளஸ் இந்தியா, ஒன்பிளஸ் ஸ்டோர் ஆப், ஒன்பிளஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர்ஸ் மற்றும் இ-காமர்ஸ் வலைத்தளமான அமேசான் (Amazon) மற்றும் பிளிப்கார்ட் வழியாகவும் வாங்க கிடைக்கிறது.
ஒன்பிளஸ் பேட் 2 டேப்லெட்டின் முக்கிய அம்சங்கள்: இது 3000 × 2120 ரெசல்யூஷன், 900நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 12.1-இன்ச் எல்சிடி டிஸ்பிளே, 6 ஸ்பீக்கர் செட்டப், ஹை-ரெஸ் சவுண்ட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட், 8 ஜிபி / 12 ஜிபி ரேம், 128 ஜிபி / 256 ஜிபி ஸ்டோரேஜ், 13எம்பி ரியர் கேமரா, 8எம்பி செல்பீ கேமரா மற்றும் 67W SUPERVOOC வயர்டு பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 9510mAh பேட்டரியை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








