OnePlus Nord வயர்டு இயர்போன் இன்னும் 2 நாளில் இந்தியாவில் அறிமுகம்.! விலை என்ன தெரியுமா?

|

OnePlus நிறுவனம் இந்த ஆண்டு வெறித்தனமாக வேலை செய்து வருகிறது. காரணம், இந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்து இன்று வரை, ஒன்பிளஸ் நிறுவனம் மடமடவென பல புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்துவிட்டது. ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் வாட்ச், இயர்பட்ஸ், இயர்போன்ஸ் என்று முடிந்தவரை அணைத்து பிரிவுகளிலும் அதன் தயாரிப்புகளை அறிமுகம் செய்து வருகிறது. இந்த வரிசையில் நிறுவனம் இப்போது OnePlus Nord wired earphones சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது.

புதிதாக OnePlus Nord வயர்டு இயர்போன்ஸ் அறிமுகம்

புதிதாக OnePlus Nord வயர்டு இயர்போன்ஸ் அறிமுகம்

ஒன்பிளஸ் நிறுவனம், இந்த வாரம் இந்தியாவில் வயர்டு ஹெட்போன்களின் புதிய மாடலை இன்னும் இரண்டு நாட்களில் அறிமுகப்படுத்தவுள்ளது. ஆம், ஒன்பிளஸ் நிறுவனம் அதன் வயர்டு ஹெட்போன்ஸ் பிரிவில் புதிதாக OnePlus Nord wired என்று அழைக்கப்படும் மாடலை வரும் ஆகஸ்ட் 27 ஆம் தேதி அன்று நாட்டில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த புதிய சாதனத்தின் சிறப்புக்கள் என்ன என்பதை இப்போது தெரிந்துகொள்ளலாம்.

அமேசான் பட்டியல் OnePlus Nord Wired டிவைஸ் பற்றி என்ன சொல்கிறது?

அமேசான் பட்டியல் OnePlus Nord Wired டிவைஸ் பற்றி என்ன சொல்கிறது?

OnePlus Nord வயர்டு இயர்போன் சிறப்பம்சங்கள்
அமேசான் இந்தியா வலைப்பக்கத்தில் இந்த சாதனம் அறிமுகத்திற்கு முன்னதாக காணப்பட்டுள்ளது. அமேசானில் உள்ள பட்டியல் வரவிருக்கும் வயர்டு ஹெட்போனின் வடிவமைப்பு மற்றும் சிறப்பம்ச விபரங்களை வெளிப்படுத்தியுள்ளது. OnePlus Nord Wired டிவைஸ் 0.42cc சவுண்ட் கேவிட்டி மற்றும் 9.2mm டைனமிக் டிரைவர்களைக் கொண்டிருக்கிறது என்று பட்டியல் காண்பிக்கிறது. இது ஸ்வெட் மற்றும் ஸ்பிளாஷ் ப்ரூப் அம்சத்துடன் IPX4 சான்றுடன் வருகிறது.

உங்க WiFi கனெக்ஷன் திடீர் திடீர்னு கட் ஆகுதா? அப்போ இதான் காரணம்! இதை சரி செய்வது எப்படி?உங்க WiFi கனெக்ஷன் திடீர் திடீர்னு கட் ஆகுதா? அப்போ இதான் காரணம்! இதை சரி செய்வது எப்படி?

ஒன்பிளஸ் நார்ட் வயர்டு இயர்போன் பட்டன் ஃபங்க்ஷன்கள்

ஒன்பிளஸ் நார்ட் வயர்டு இயர்போன் பட்டன் ஃபங்க்ஷன்கள்

ஒன்பிளஸ் நார்ட் வயர்டு இயர்போன்கள் இன்-லைன் மைக்ரோபோன் மற்றும் பட்டன்களுடன் வருகிறது. இதில் பவர் பட்டன், வால்யூம் அப் மற்றும் வால்யூம் டவுன் பட்டன்கள், மியூசிக் பிளேபேக், பாஸ் மற்றும் ரெஸ்யூம் பட்டன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. வாய்ஸ் கால்களை அட்டன் செய்வதற்கும், வாய்ஸ் அசிஸ்டன்ட் உதவியாளர்களைப் பயன்படுத்தக் கூடிய கண்ட்ரோலை இந்த பட்டன்கள் வழங்குகிறது.

OnePlus Nord Wired டிவைஸில் மேக்னட் கிளிக் அட்டாச் அம்சம்

OnePlus Nord Wired டிவைஸில் மேக்னட் கிளிக் அட்டாச் அம்சம்

ஒன்பிளஸ் இன் பிரீமியம் இயர்போன்கள் போல இதிலும் இருபுறமும் மேக்னட் பொருத்தப்பட்டுள்ளது. நீங்கள் நடக்கும்போது அவை சுற்றித் தொங்கவிடாதபடி இந்த மேக்னெட்கள் அவற்றை இணைத்துப் பிடித்துக்கொள்கின்றன. இந்த OnePlus Nord Wired Earphones ஆனது 3.5mm ஆடியோ போர்ட் கொண்ட OnePlus போன்களுடன் சிறப்பாக வேலை செய்யும் என்று நிறுவனம் கூறியுள்ளது. இருப்பினும், 3.5 மிமீ ஆடியோ இணைப்பான் கொண்ட எந்த கேஜெட் உடனும் இது சிறப்பாக செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த சாதனத்தின் விலை என்ன?

இந்த சாதனத்தின் விலை என்ன?

இந்த சாதனத்தின் விலையைப் பொறுத்தவரை, இது ரூ.1,500 என்ற விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்பிளஸ் சில சந்தைகளில் 3.5 மிமீ கனெக்டருடன் நார்ட் வயர்டு இயர்போன்களை அறிமுகப்படுத்தியது என்பது கவனிக்கத்தக்கது. இது தற்போது இங்கிலாந்தில் EUR 19.99 (சுமார் ரூ. 1,500) விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இது பிளாக் நிறத்தில் மட்டும் வாங்குவதற்கு இப்போதைக்கு கிடைக்கிறது.

iPhone 14 அறிமுக தேதி உறுதியானது.! ஆப்பிள் Far Out ஈவென்ட் நடக்கும் நேரம் இது தான்.!iPhone 14 அறிமுக தேதி உறுதியானது.! ஆப்பிள் Far Out ஈவென்ட் நடக்கும் நேரம் இது தான்.!

OnePlus Nord Buds CE கூட இந்தியாவில் கிடைக்கிறது தெரியுமா?

OnePlus Nord Buds CE கூட இந்தியாவில் கிடைக்கிறது தெரியுமா?

தெரியாதவர்களுக்கு, இந்த மாத தொடக்கத்தில், OnePlus Nord Buds CE இந்தியாவில் ரூ.2299 விலையில்அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த OnePlus Nord Buds CE சாதனம் ஒரு TWS டிவைஸ் என்பது குறிப்பிடத்தக்கது. இது பெரிய 13.4mm டைட்டானியம் டைனமிக் டிரைவர்களுடன் கூடிய ரிச் பாஸுக்காக டியூன் செய்யப்பட்டுள்ளது. இது முழுமையான டச் கண்ட்ரோல் உடன் வருகிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால் மொத்தம் 20 மணிநேர பிளேபேக் நேரத்தையும், 4.5 மணிநேரம் வரை தனித்தனியாக இயங்கும் நேரத்தையும் வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
OnePlus Nord Wired Earphones To Launch In India Through Amazon On August 27

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X