இப்பவே வாங்குனா சலுகை உறுதி.. 105 ஸ்போர்ட் மோட் உடன் OnePlus Nord Watch!

|

AMOLED டிஸ்ப்ளே ஆதரவுடன் ஒன்பிளஸ் நோர்ட் வாட்ச் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ஒன்று இரண்டு இல்லை 105 ஸ்போர்ட்ஸ் மோட்களைக் கொண்டிருக்கிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

இந்த நோர்ட் வாட்ச் டீப் ப்ளூ மற்றும் மிட்நைட் பிளாக் வண்ண விருப்பங்களில் வெளியாகி இருக்கிறது. இதன் விலை மற்றும் அம்சங்கள் குறித்த விவரங்களை பார்க்கலாம்.

பல்வேறு குறிப்பிடத்தக்க அம்சங்கள்

பல்வேறு குறிப்பிடத்தக்க அம்சங்கள்

OnePlus Nord Watch இந்தியாவில் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நார்ட் பிராண்டில் வெளியான முதல் ஸ்மார்ட்வாட்ச் இதுவாகும். இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆனது பல்வேறு குறிப்பிடத்தக்க அம்சங்களைக் கொண்டிருக்கிறது.

இதில் 1.78 இன்ச் AMOLED டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. இதில் 60Hz ரெஃப்ரஷிங் ரேட், 500 நிட்ஸ் உச்ச பிரகாசம் உள்ளிட்ட ஆதரவுகள் இருக்கிறது.

பல்வேறு ஆரோக்கிய ஆதரவுகள்

பல்வேறு ஆரோக்கிய ஆதரவுகள்

OnePlus Nord Watch ஆனது பல்வேறு ஆரோக்கிய ஆதரவுகளைக் கொண்டிருக்கிறது.

இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆனது இதய துடிப்பு, மன அழுத்தம் மற்றும் ரத்த ஆக்ஸிஜன் அளவு (SpO2) உள்ளிட்ட பல்வேறு ஆரோக்கிய கண்காணிப்பு அம்சங்களைக் கொண்டிருக்கிறது.

அதேபோல் இதில் 105 விளையாட்டு முறைமைகளைக் கொண்டிருக்கிறது. அதேபோல் சமீபகாலமாக அறிமுகமாகும் பல்வேறு கேட்ஜெட்களிலும் ஒரு குறிப்பிட்ட அம்சம் இடம்பெற்று வருகிறது. அது பெண்களுக்கான பாதுகாப்பு அம்சமாகும். ஆம் அதே அம்சம் இந்த ஸ்மார்ட்வாட்ச்சிலும் இடம்பெற்றுள்ளது. அது மாதவிடாய் சுழற்சி கண்காணிப்பு மற்றும் சுகாதார உதவிக்குறிப்புகளை வழங்கும் அம்சமாகும்.

10 நாட்கள் வரை பேட்டரி ஆயுள்

10 நாட்கள் வரை பேட்டரி ஆயுள்

இந்த ஸ்மார்ட்வாட்ச் இல் அதீத பேட்டரி ஆயுள் இருக்கிறது. ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்வாட்ச்சை ஒரு முறை சார்ஜ் செய்தால் பயன்பாட்டில் இருக்கும் போது 10 நாட்கள் வரை பேட்டரி ஆயுளையும், 30 நாட்கள் வரை காத்திருப்பு நேரத்தையும் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

OnePlus Nord வாட்ச் விலை

OnePlus Nord வாட்ச் விலை

OnePlus Nord வாட்ச் விலை குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆனது ரூ.4999 என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆனது டீப் ப்ளூ மற்றும் மிட்நைட் பிளாக் என்ற வண்ண விருப்பங்களில் கிடைக்கும்.

இந்த ஸ்மார்ட்வாட்ச்சை ஒன்பிளஸ் ஸ்டோர், ஒன்பிளஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஒன்பிளஸ் பார்ட்னர் ஸ்டோர்களில் வாங்கலாம்.

அதேபோல் அக்டோபர் 4 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் அமேசான் மூலமாகவும் இந்த ஸ்மார்ட்வாட்ச் வாங்கக் கிடைக்கும்.

ஆரம்ப கால சலுகைகள்

ஆரம்ப கால சலுகைகள்

இந்த ஸ்மார்ட்வாட்ச்சிற்கு ஆரம்ப கால சலுகைகளும் இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்வாட்ச்சை ஆக்சிஸ் பேங்க் டெபிட் மற்றும் கிரெடிட் கார்ட் பரிவர்த்தனைகளில் வாங்கும்பட்சத்தில் ரூ.500 உடனடி தள்ளுபடியும், ஐசிஐசிஐ வங்கி கார்ட் மூலம் இந்த ஸ்மார்ட்வாட்ச்சை வாங்கும்பட்சத்திலும் அதே ரூ.500 தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ஒன்பிளஸ் ஸ்டோர், ஒன்பிளஸ் ஸ்டோர் ஆப் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்பிளஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர்களில் இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச்சை வாங்கும் போது இந்த தள்ளுபடிகள் கிடைக்கும்.

OnePlus Nord வாட்ச் சிறப்பம்சங்கள்

OnePlus Nord வாட்ச் சிறப்பம்சங்கள்

OnePlus Nord வாட்ச் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இதில் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் உடன் கூடிய 1.78 இன்ச் எச்டி AMOLED டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்வாட்ச் வலது பக்கத்தில் பவர் பட்டன் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆனது SF32LB555V4O6 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

105 விளையாட்டு முறைகள்

105 விளையாட்டு முறைகள்

ஸ்மார்ட்வாட்ச் இல் உள்ளமைக்கப்பட்ட ஜிபிஎஸ் ஆதரவைக் கொண்டிருக்கிறது. இதய துடிப்பு, மன அழுத்த கண்காணிப்பு, SpO2 மற்றும் தூக்க கண்காணிப்பு ஆதரவுகள் இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்வாட்ச் இல் மொத்தம் 105 விளையாட்டு முறைகளுக்கான ஆதரவுகள் இருக்கிறது. வாக்கிங், ரன்னிங், சைக்கிளிங் உட்பட பல்வேறு உடற்பயிற்சி கண்காணிப்பு அம்சங்களும் இதில் அடக்கம்.

30 நாட்கள் பேட்டரி ஆயுள்

30 நாட்கள் பேட்டரி ஆயுள்

ஒன்பிளஸ் நார்ட் வாட்ச் ஆனது ப்ளூடூத் 5.2 இணைப்பைக் கொண்டிருக்கிறது. இதன்மூலம் இந்த ஸ்மார்ட்வாட்ச்சை ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஐபோன்களில் இணைக்க முடியும்.

ஆண்ட்ராய்டு 6 மற்றும் ஐஓஎஸ் 11 ஆகிய ஓஎஸ்களுக்கு மேலே இயங்கும் சாதனங்கள் மூலம் இதை இயக்கலாம். இந்த ஸ்மார்ட்வாட்ச்சில் 230 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்வாட்ச் ஆனது 30 நாட்கள் பேட்டரி ஆயுளையும் 10 நாட்கள் பயன்பாட்டு நேரத்தையும் வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் மிகவும் திடமானதாக தயாரிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
OnePlus Nord Watch Launched in India With 105 Sports Mode: Price, Discount Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X