OnePlus Nord Buds CE வாங்கலாமா? வேண்டாமா? உங்களுக்கான குயிக் ரெவியூ இதோ.!

|

மலிவு விலையில் இரு பெஸ்டான ட்ருலி வயர்லெஸ் இயர்பட்ஸ் வாங்க உங்களுக்கு ஆசையா? ஆனால், எந்த பிராண்டில் இருந்து உங்களுக்கான TWS இயர்பட்ஸை வாங்குவது என்று குழப்பமாக இருக்கிறதா? கவலையை விடுங்க, OnePlus பிராண்டில் இருந்து உங்கள் தேவையைப் பூர்த்தி செய்ய கூடிய புதிய OnePlus Nord Buds CE TWS இயர்பட்ஸ் சாதனம் இப்போது விற்பனையில் வாங்கக் கிடைக்கிறது. இந்த டிவைஸின் ரெவியூ பற்றித் தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். இதில் உள்ள பிளஸ் அண்ட் மைனஸ் என்ன? இதை நம்பி வாங்கலாமா? என்பதைப் பார்க்கலாம்.

OnePlus Nord Buds CE மலிவு விலையில் பெஸ்டான கேட்ஜெட்டா?

OnePlus Nord Buds CE மலிவு விலையில் பெஸ்டான கேட்ஜெட்டா?

OnePlus Nord Buds CE என்பது சமீபத்தில் மலிவு விலையில் கிடைக்கும் TWS பாணி இயர்போன் டிவைஸ் ஆகும். இந்தியாவில் இந்த TWS இயர்பட்ஸ் சாதனம் வெறும் ரூ, 2,299 விலையில் வாங்கக் கிடைக்கிறது. நிஜ வாழ்க்கையில் இது எப்படிச் செயல்படுகிறது என்பதை இப்போது அறிந்துகொள்ளலாம். முதலில் சுருக்கமாக இதில் என்ன உள்ளது என்பதைப் பார்க்கலாம். OnePlus Nord Buds CE இன் டிசைன் உண்மையிலேயே ஆடம்பரமாகத் தெரிகிறது. OnePlus Nord Buds CE மிகவும் பிரீமியம் தோற்றமுடையதாக இருக்கிறது. இதன் அசல் டிசைன் ஆப்பிள் ஏர்போட்கள் போல் இருக்கிறது.

OnePlus Nord Buds CE காதில் ஏதேனும் வலியை ஏற்படுத்துகிறதா?

OnePlus Nord Buds CE காதில் ஏதேனும் வலியை ஏற்படுத்துகிறதா?

உண்மையில், இந்த OnePlus Nord Buds CE நம்முடைய காதில் எப்படிச் செயல்படுகிறது என்று பார்க்கலாம். இயர்பட்ஸ் என்றாலே அதைப் பயனர்கள் நீண்ட நேரம் பயன்படுத்த வேண்டியதுள்ளது. ஒரு குறிப்பிட்ட அளவை தாண்டிய பின், காதில் சிறிது வலியை நம்மால் உணர முடிகிறது. இது சிலிக்கான் இல்லாத கடினமான காது முனை வடிவமைப்பு காரணமாக இருக்கலாம். இவை மிகவும் கச்சிதமான பொருத்தத்தை வழங்கினாலும், சிறிது வலியை ஏற்படுத்துகிறது. இது USB டைப்-சி போர்ட் வழியாக பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது என்பது சிறப்பான விஷயம்.

OnePlus Nord Buds CE டிவைஸின் சவுண்ட் தரம் எப்படி இருக்கிறது?

OnePlus Nord Buds CE டிவைஸின் சவுண்ட் தரம் எப்படி இருக்கிறது?

சவுண்ட் தரத்தைப் பொறுத்தவரை, இது நிச்சயமாக அதிக விலையுள்ள நார்ட் பட்ஸைப் போலச் சிறந்தவை அல்ல என்பது தான் வெளிப்படையான உண்மை. நீங்கள் பாஸ்-ஹெவி ட்யூனிங்கை விரும்பினாலும், இந்த விலை வரம்பில் உள்ள மற்ற எல்லா TWS இயர்ஃபோனைப் போலவே இதிலும் சில சிதைவுகள் காணப்படுகிறது. குறிப்பாக அதிக ஒலியில், சில ஒலி சிதைவை நாங்கள் இதில் கவனித்துள்ளோம். ஆனால், வாய்ஸ் காலின் போது அழைப்பின் தரம் சிறப்பாக இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. OnePlus Nord Buds CE ஆனது AI நாய்ஸ் கேன்சலிங் அம்சத்தை ஆதரிக்கிறது. இது ஆடியோ தரத்தை மிகவும் தெளிவாகக் கேட்க அனுமதிக்கிறது.

SBI பயனர்களே அலெர்ட்! இனி ATM-ல் பணம் எடுக்க 'இது' கட்டாயம்!SBI பயனர்களே அலெர்ட்! இனி ATM-ல் பணம் எடுக்க 'இது' கட்டாயம்!

யாரெல்லம் இந்த டிவைஸின் பயன்பாட்டை முழுமையாக அனுபவிக்க முடியும்?

யாரெல்லம் இந்த டிவைஸின் பயன்பாட்டை முழுமையாக அனுபவிக்க முடியும்?

இருப்பினும், இதில் உள்ள நாய்ஸ் ஐசோலேஷன் அம்சம், நார்ட் பட்ஸ் போல் சிறப்பாக இல்லை. இவை கெஸ்ட்சர் கண்ட்ரோல் உடன் வருகிறது. இந்த புதிய டிவைஸ் Android மற்றும் iOS ஆகிய இரண்டு சாதனங்களிலும் நன்றாக வேலை செய்கிறது. நீங்கள் மிதமான சவுண்ட் அளவில் இயர்போன்களைப் பயன்படுத்துபவர் என்றால், ஒன்பிளஸ் நார்ட் பட்ஸ் CE-யின் ஆடியோ டியூனிங்கை நீங்கள் நிச்சயமாகப் பாராட்டுவீர்கள். அதிக ஒலியில் இயர்போன்களைப் பயன்படுத்தும் நபர்களில் நீங்களும் ஒருவர் என்றால், இந்த இயர்போன்களை நீங்கள் விரும்ப வாய்ப்பு குறைவாக இருக்கிறது. காரணத்தை முன்பே சொல்லிவிட்டோம்.

OnePlus Nord Buds CE இன் பேட்டரி ஆயுள் எப்படி இருக்கிறது?

OnePlus Nord Buds CE இன் பேட்டரி ஆயுள் எப்படி இருக்கிறது?

லேப்டாப்கள், ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஆண்ட்ராய்டு டேப்லெட்டுகள் போன்ற பல்வேறு சாதனங்களுடன் OnePlus Nord Buds CE ஐ சோதித்துப் பார்த்தோம், எல்லா நேரத்திலும் முடிவு ஒரே மாதிரியான பேட்டரி ஆயுளை காண்பித்தது. இந்த TWS இயர்பட்ஸ் நான்கரை மணிநேர பேட்டரி ஆயுளை வழங்கக் கூடியது என்று நிறுவனம் கூறுகிறது. ஆனால், எங்களுடைய சோதனையில் இது சுமார் நான்கு மணி நேரம் நீடித்தது என்பது கவனிக்கத்தக்கது. இயர்பட்ஸ்களின் சார்ஜின் அளவு 90 முதல் 100 சதவீதம் இருந்த போது இந்த சோதனை நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

EPFO: உங்கள் PF கணக்கில் ரூ.40000 டெபாசிட்! யாருக்கெல்லாம் இது கிடைக்கும்? Online பேலன்ஸ் செக் செய்வது எப்படி?EPFO: உங்கள் PF கணக்கில் ரூ.40000 டெபாசிட்! யாருக்கெல்லாம் இது கிடைக்கும்? Online பேலன்ஸ் செக் செய்வது எப்படி?

பேட்டரி ஆயுள் எப்படி இருக்கிறது?

பேட்டரி ஆயுள் எப்படி இருக்கிறது?

மலிவு விலை ஜோடி இயர்போன்களாக இருந்தாலும், OnePlus Nord Buds CE ஆனது USB Type-C போர்ட் வழியாக வேகமாக சார்ஜ் செய்வதை ஆதரிக்கிறது என்பதையும் நீங்கள் நிச்சயமாக விரும்புவீர்கள். சார்ஜிங் கேஸ் மொத்தமாக 20 மணிநேர பின்னணி நேரத்தை வழங்குகிறது. எனவே, இவை மூன்று நாட்களுக்குக் கூட நீடித்து செயல்படுகிறது. குறிப்பாக ஒரு நாளைக்கு 6 மணிநேரம் பயன்படுத்தும் பயனர் நீங்கள் என்றால், கட்டாயம் இது 3 நாட்களுக்கு நீடிக்கும். சரி, இப்போது இறுதி முடிவிற்கு வரலாம். இந்த OnePlus Nord Buds CE இயர்பட்ஸை வாங்கலாமா? வேண்டாமா?

OnePlus Nord Buds CE டிவைஸை வாங்கலாமா? வேண்டாமா?

OnePlus Nord Buds CE டிவைஸை வாங்கலாமா? வேண்டாமா?

சமீபத்தில் வெளியான TWS இயர்பட்ஸ் தயாரிப்புகளில் இருந்து ஒரு பிரீமியம் லுக் உடன் பெஸ்டான இயர்பட்ஸை நீங்கள் வாங்க விரும்பினால், நீங்கள் இந்த OnePlus Nord Buds CE ஐ தாராளமாக வாங்கலாம். இது ஒரு நல்ல ஜோடி TWS இயர்போன் டிவைஸ் தான் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. இவை அழகான தோற்றத்துடன், சிறந்த பேட்டரி ஆயுளுடன் சிறந்த-இன்-கிளாஸ் ஆடியோ தரத்தை வழங்குகின்றன. நீங்கள் ஒரு OnePlus ரசிகர் என்றால், குறைந்த விலையில் இதை விட ஒரு பெஸ்ட் கேட்ஜெட்டை உங்களால் வாங்க முடியாது என்பது கவனிக்கத்தக்கது.

Best Mobiles in India

English summary
OnePlus Nord Buds CE Quick Review

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X