ஜூன் 25 குறிச்சாச்சு.. சிங்கிள் சார்ஜில் 54 மணி நேர பிளேபேக்.. 3D ஸ்பாஷியல் ஆடியோ.. வருகிறது புது Nord பட்ஸ்!
இந்திய மார்கெட்டில் எப்போது வெளியாகும் என்று வெயிட்டிங் மோடில் காக்க வைத்த ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 4 (OnePlus Nord Buds 4) மாடலின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக உறுதியாகி இருக்கிறது. கூடவே, முக்கிய பீச்சர்களும் உறுதி செய்யப்பட்டுள்ளன. இந்த ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 4 மாடலின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் இயர்பட்ஸ் மாடல்களுக்கு தனி வரவேற்பு இருக்கிறது. ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் பீச்சரில் பட்டையை கிளப்பும் ஆடியோ அனுபவத்தை இந்த மாடல்கள் கொடுக்கின்றன. கேமிங் பிரியர்களுக்கும் விரும்பும்படி லோவ் லேட்டன்சி மோட் உள்ளிட்ட பீச்சர்களும் ஒன்பிளஸ் இயர்பட்ஸ் மாடல்களில் கிடைக்கின்றன.

இப்போது, கேமிங் பிரியர்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த மியூசிக் பிரியர்களையும் தட்டித்தூக்கும்படி ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 4 வெளியாக இருக்கிறது. வருகிற ஜூன் 25ஆம் தேதியன்று இந்திய மார்கெட்டில் வெளியாக இருக்கிறது. ஜூன் 30ஆம் தேதி இந்த மாடல் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்னதாகவே வெளியாக இருப்பதை ஒன்பிளஸ் உறுதி செய்துள்ளது.
ஏனென்றால், பட்ஜெட் விலை ஒன்பிளஸ் மாடலாக ஒன்பிளஸ் என்6 (OnePlus N6) ஸ்மார்ட்போன் ஜூன் 30ஆம் தேதி வெளியாகிறது. இதே தேதியில் ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 4 வெளியாகும் என்று மார்கெட் வட்டாரங்களில் பேசப்பட்டன. ஆனால், முன்கூட்டியே வெளியாக இருப்பதும், சிங்கிள் சார்ஜில் 54 மணி நேரங்களுக்கு பிளேபேக் கொடுக்க இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 4 மாடலானது அமேசான் (Amazon) தளத்தில் கிடைக்க இருக்கிறது. ஆகவே, பிரத்யேக மைக்ரோசைட் ஓப்பன் செய்யப்பட்டு முக்கிய பீச்சர்கள் உறுதி செய்யப்பட்டு உள்ளன. அதே நேரத்தில் டிசைன் மற்றும் கலர் விவரங்களும் உறுதி செய்யப்பட்டு இருக்கின்றன. முதலில் இதில் கிடைக்க இருக்கும் பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.
ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 4 அம்சங்கள் (OnePlus Nord Buds 4 Specifications): டீப் பேஸ் ஆடியோவை விரும்பும் கஸ்டமர்களுக்கு ஏற்ப 12 எம்எம் டைட்டானியம் கோடெட் டிரைவர்களை இந்த ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 4 கொடுத்துள்ளது. ஏஐ கிளியர் கால் (AI Clear Call) சப்போர்ட் கொண்ட 6 மைக்குகள் கொடுத்து இருக்கிறது. ஆகவே, கிரிஸ்டல் கிளியர் வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம்.
25 கி.மீ. வேகத்தில் காற்று அடித்தாலும், கிளியரான வாய்ஸ் கால்களின் அனுபவம் கிடைக்கும். மேலும், 53 dB ரியல் டைம் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (Real-time Active Noise Cancellation) கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் 5000Hz ரேஞ்ச் கிடைக்கும். டியூவி ரெய்ன்லேண்ட் பேட்டரி ஹெல்த் சர்டிபிகேஷன் கொண்ட பேட்டரியை இந்த ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 4 மாடல் பேக் செய்துள்ளது.
ஆகவே, ஹீட், ஓவர் சார்ஜ் உள்ளிட்ட கன்ட்ரோல்கள் கிடைக்கும். பட்ஸ் மற்றும் சார்ஜிங் கேஸ் வழியாக 54 மணி நேரங்களுக்கு பிளேபேக் பெற்று கொள்ளலாம். ஸ்டீரியோ அனுபவத்தை கொடுக்க 3டி ஸ்பாஷியல் ஆடியோ (3D Spatial Audio) கிடைத்து இருக்கிறது. மேலும், கேமிங் பிரியர்களுக்காக கேம் சவுண்ட் ஸ்பாஷியல் ஆடியோ (Game Sound Spatial Audio) கிடைத்துள்ளது.
4.3 கிராம் மட்டுமே பட்களில் எடை வருகிறது. ஆகவே, லைட் வெயிட் அனுபவம் கிடைக்கும். ஸ்டெல்லர் பிளாக் (Stellar Black) மற்றும் ஆஸ்ட்ரல் டீல் (Astral Teal) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது. இந்த பீச்சர்கள் மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளன. மற்ற பீச்சர்கள் மற்றும் விலை விவரங்கள் அடுத்தடுத்து வெளியாக வாய்ப்புகள் இருக்கின்றன.


Click it and Unblock the Notifications