OnePlus பிரிச்சி விட்டாப்ல.. சிங்கிள் சார்ஜில் 52 மணி நேர பேக்கப்.. 6 மைக்குகள்.. IP55 ரேட்டிங்.. எந்த மாடல்?
இந்திய மியூசிக் பிரியர்களுக்கு பட்ஜெட்டில் பிரீமியம் ஆடியோ அனுபவத்தை கொடுக்கும்படி ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 4 (OnePlus Nord Buds 4) அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. ஒரு முறை ஃபுல் சார்ஜ் செய்தால் 52 மணி நேர பிளே பேக் முதல் 6 மைக்குகள் வரையில், மியூசிக் மற்றும் வாய்ஸ் கால்களில் பிரீமியம் காட்டி இருக்கிறது.
ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 4 ப்ரோ மாடலானது, இந்திய மார்கெட்டில் ஏற்கனவே வெளியாகிவிட்டது. ஆனால், இதன் விலை ரூ. 3,999ஆக இருக்கிறது. இந்த விலைக்கு ஏற்ப பீச்சர்கள் இருந்தாலும், பிரீமியம் மாடலாக பார்க்கப்பட்டது. இதைவிட கம்மியான விலைக்கு இப்போது, ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 4 மாடல் வெளியாகி இருக்கிறது.

பட்ஜெட் கம்மியாக இருந்தாலும், ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன், ஏஐ டிரான்ஸ்லேஷன், ஏஐ அசிஸ்டன்ட் போன்ற பிரீமியம் பீச்சர்களை கொடுத்து இருக்கிறது. அதேபோல 6 மைக்குகள் கிடைப்பதால், வாய்ஸ் கால் அனுபவம் அல்ட்ரா பிரீமியமாக இருக்கும். ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கிடைப்பதால், சில நிமிட சார்ஜில் அதிக பேக்கப் பெறலாம்.
ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 4 அம்சங்கள் (OnePlus Nord Buds 4 Specifications): 12 எம்எம் டைட்டானியம் கோடெட் டைனாமிக் டிரைவர் கிடைக்கிறது. ப்ளூடூத் 6.1 (Bluetooth 6.1) கனெக்டிவிட்டி கிடைக்கிறது. எஸ்பிசி (SBC), ஏஏசி (AAC) ஆடியோ கோடெக்களுகள் கிடைக்கின்றன. 52dB ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (Active Noise Cancellation) கொண்டுள்ளது.
மேலும், டிரான்ஸ்பரன்ட் மோட் (Transparent Mode) இந்த மாடலுக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. ஆகவே, அவுட்டோர் ஆடியோ அனுபவமானது, அல்ட்ரா பிரீமியமாக இருக்கும். மியூசிக் மட்டுமல்லாமல், வாய்ஸ் கால்களுக்கும் பிரீமியம் காட்டப்பட்டு உள்ளது. மொத்தமாக 6 மைக்குகளை இந்த ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 4 மாடல் கொண்டுள்ளது.
இதில் 3 மைக்குகள் தலா 1 பட்களில் கிடைக்கிறது. இதில் ஏஐ கால் நாய்ஸ் கேன்சலேஷன் (AI Call Noise Cancellation) கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஏஐ அசிஸ்டன்ட் (AI Assistant) கிடைக்கிறது. இந்த அசிஸ்டன்ட் வழியாக அலாரம் செட் செய்து கொள்ள முடியும். அதேபோல வெதர், ரீமைண்டர்கள் உள்ளிட்டவற்றை அணுகவும் முடியும்.
ரியல் டைமில் வாய்ஸ் டிரான்ஸ்லேஷன் செய்து கொள்ள ஏஐ டிரான்ஸ்லேட் (AI Translate) கிடைக்கிறது. இந்த பீச்சர் சப்போர்ட் உள்ள ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களில் மட்டுமே இதை பயன்படுத்தி கொள்ள முடியும். இது டச் கன்ட்ரோல் கொண்ட மாடலாக இருக்கிறது. ஆகவே, டிராக் கன்ட்ரோல்கள், வாய்ஸ் அசிஸ்டன்ட் கன்ட்ரோல்கள், கால் கன்ட்ரோல்கள் கிடைக்கின்றன.
இயர்பட்களுக்கு மட்டுமே ஸ்வெட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் (Sweat & Water Resistant) கொடுக்க IP55 ரேட்டிங் கிடைக்கிறது. பட்கள் வெறும் 4.3 கிராம் எடை மட்டுமே வருகிறது. ஆகவே, லைட் வெயிட்டில் கிடைக்கிறது. 42.5 கிராம் எடையில் இந்த ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 4 மாடலின் சார்ஜிங் கேஸ் இருக்கிறது. பட்களில் 62mAh பேட்டரி உள்ளது.
சார்ஜிங் கேஸில் 530mAh பேட்டரி கிடைக்கிறது. ஏஎன்சி ஆப் செய்யப்பட்டு இருந்தால், 54 மணி நேரத்துக்கு பேக்கப் கிடைக்கும். ஏஎன்சி ஆன் செய்யப்பட்டு இருந்தால், 27 மணி நேரங்களுக்கு பேக்கப் பெற்று கொள்ளலாம். இது சார்ஜிங் கேஸ் ஃபுல் சார்ஜ் செய்யப்பட்டு இருந்தால் கிடைக்கும் பேக்கப்பாக இருக்கிறது. ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது.
ஆகவே, பட்கள் மற்றும் சார்ஜிங் கேஸில் 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் மொத்தமாக 11 மணி நேரங்களுக்கு பேக்கப் பெற்று கொள்ளலாம். ஸ்டெல்லர் பிளாக் (Stellar Black), ஆஸ்ட்ரல் டீல் (Astral Teal) கலர்களில் கிடைக்க உள்ளது. ரூ.3299ஆக விலை உள்ளது. ரூ.3099 அறிமுக விலைக்கு கிடைக்க உள்ளது. ஜூன் 29 முதல் பிளிப்கார்ட், அமேசான் தளங்களில் கிடைக்க உள்ளது.


Click it and Unblock the Notifications