Home
Gadgets

சும்மா கிழி ஆடியோ.. 55dB ஏஎன்சி.. 6 மைக்குகள்.. 530mAh பேட்டரி.. IP55 ரேட்டிங்.. புது OnePlus இயர்பட்ஸ்!

ஒன்பிளஸ் நிறுவனத்தின் நோர்ட் இயர்பட்ஸ் சீரிஸ் மாடல்களின் கீழ் ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 4 ப்ரோ (OnePlus Nord Buds 4 Pro) அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன், 6 மைக்குகள், 530mAh பேட்டரி, IP55 ரேட்டிங் பீச்சர்களுடன் பட்டையை கிளப்பி இருக்கிறது. இந்த ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 4 ப்ரோ மாடலின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

நோர்ட் இயர்பட்ஸ்

நோர்ட் இயர்பட்ஸ் மாடல்களுக்கு இந்தியாவில் தனி ரகிகர் பட்டாளம் இருக்கிறது. ஏனென்றால், ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் மட்டுமல்லாமல், வாய்ஸ் கால்களில் ஏஐ நாய்ஸ் கேன்சலேஷன், ஸ்பாஷியல் ஆடியோ உள்ளிட்ட பீச்சர்களுடன் வெளியாகி வருகின்றன. வாய்ஸ் அசிஸ்டன்ட் கிடைக்கிறது. டிசைன் மற்றும் பேட்டரி பேக்கப்பிலும் தனியிடம் பிடித்து வருகின்றன.

சும்மா கிழி ஆடியோ.. 55dB ஏஎன்சி.. 6 மைக்குகள்.. 530mAh பேட்டரி மாடல்!

இதனாலேயே நோர்ட் இயர்பட்ஸ் மாடல்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. இப்போது, 55dB ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் மட்டுமல்லாமல், 6 மைக்குகளுடன் ஏஐ கிளியர் கால் (AI Clear Call) சப்போர்ட் இந்த புதிய மாடலில் கிடைப்பதால் வரவேற்பு பெறுகிறது. மேலும், கேமிங் பிரியர்களுக்கு கேம் சவுண்ட் ஸ்பாஷியல் ஆடியோ கொடுக்கப்பட்டு உள்ளது.

ஏஐ டிரான்ஸ்லேஷன்

ஆக்ஸிஜன்ஓஎஸ் 15.0.1 அல்லது அதற்கு மேலான ஓஎஸ் கொண்ட ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தலாம். ஹேமெலடி ஆப் (HeyMelody App) சப்போர்ட் கொடுத்து உள்ளது. இதில் ரியல் டைம் டிரான்ஸ்லேஷன் (Real-time Translation) சப்போர்ட் கிடைக்கிறது. ஆங்கிலம், இந்தி, ஸ்பானிஷ் மற்றும் பிரெஞ்சு உள்ளிட்ட குறிப்பிட்ட மொழிகளில் டிரான்ஸ்லேஷன் கிடைக்கிறது.

வாய்ஸ் கால்களில் ரியல் டைமில் டிரான்ஸ்லேஷன் செய்து கொள்ளலாம். டிராவல் செய்யும் நபர்களுக்கு இது பக்கா மாடலாக இருக்கும். லைட் வெயிட்டில் அதிக பேக்கப் கொடுத்து உள்ளது. பட்கள் வெறும் 4.4 கிராம் எடை மட்டுமே கொண்டுள்ளது. சார்ஜிங் கேஸ் 43 கிராம் எடை கொண்டதாக இருக்கிறது. இப்போது, முழு பீச்சர்களை பார்த்துவிட்டு, விலை பார்க்கலாம்.

ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 4 ப்ரோ அம்சங்கள் (OnePlus Nord Buds 4 Pro Specifications): 55dB ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (Active Noise Cancellation) மற்றும் டிரான்ஸ்பரன்ட் மோட் கொண்ட 12 எம்எம் டைட்டானியம்-கோட்டெட் டிரைவர் கிடைக்கிறது. மேக்ஸ் பேஸ் (Max Base) மற்றும் ஸ்பாஷியல் ஆடியோ (Spatial Audio) சப்போர்ட் கொடுத்து உள்ளது.

பிரீமியம் மாடல்களில் கிடைக்கும்படி ப்ளூடூத் 6.0 (Bluetooth 6.0) வருகிறது. எல்எச்டிசி 5.0 (LHDC 5.0), எஸ்பிசி (SBC) மற்றும் ஏஏசி (AAC) உள்ளிட்ட கோடெக்குகள் கிடைக்கின்றன. ஆடியோ மட்டுமல்லாமல், வாய்ஸ் கால்களிலும் கவனம் செலுத்தப்பட்டு உள்ளது. 6 மைக்குகள் உள்ளது. தலா 3 மைக்குகள் ஒரு இயர்பட்களில் கிடைக்கின்றன.

ஏஐ கால் நாய்ஸ் கேன்சலேஷன் உள்ளது. ஏஐ அசிஸ்டன்ட் மற்றும் ஏஐ டிரான்ஸ்லேஷன் கிடைக்கிறது. வாய்ஸ் அசிஸ்டன்ட் கன்ட்ரோல் மற்றும் டச் கன்ட்ரோல் கிடைக்கிறது. இயர்பட்களுக்கு மட்டும் IP55 ரேட்டிங் கொண்ட ஸ்வெட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் உள்ளது. 62mAh பேட்டரி பட்களிலும், 530mAh பேட்டரி சார்ஜிங் கேஸிலும் உள்ளது.

ஏஎன்சி ஆன் செய்யப்பட்டிருந்தால், 7 மணி நேரங்களுக்கு பட்களிலும், 26 மணி நேரங்களுக்கு சார்ஜிங் கேஸ் வழியாகவும் பேக்கப் பெற்று கொள்ளலாம். ஏஎன்சி ஆப் செய்யப்பட்டால், 13 மணி நேரங்களுக்கு பட்களிலும், 54 மணி நேரங்களுக்கு சார்ஜிங் கேஸ் வழியாகவும் பேக்கப் பெற்று கொள்ளலாம். 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால், 13 மணி நேரங்களுக்கு பேக்கப் கிடைக்கும்.

ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 4 ப்ரோ விலை (OnePlus Nord Buds 4 Pro Price): இந்திய மார்கெட்டில் ரூ.3,999 விலைக்கு அறிமுகம் செய்யப்பட்ட உள்ளது. ரூ.200 பேங்க் ஆஃபர் போக விற்பனைக்கு கிடைக்க உள்ளது. மார்ச் 23ஆம் தேதி முதல் விற்பனைக்கு வர உள்ளது. ரேடியண்ட் கிரே (Radiant Gray) மற்றும் ரேவன் பிளாக் (Raven Black) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

அமேசான் (Amazon), பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் ஒன்பிளஸ் ஸ்டோர் (OnePlus Store) ஆகியவற்றில் ஆர்டர் செய்து கொள்ளலாம். மேலும், ஆப்லைன் பார்ட்னர் ஸ்டோர்களிலும் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன், அதிக பேட்டரி பேக்கப் கொண்ட இயர்பட்ஸ் வேண்டுமானால், இந்த ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 4 ப்ரோ மாடலை ஆப்ஷனில் எடுக்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Nord Buds 4 Pro With 55dB ANC Launched in India Under Rs 4000 Check Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X