OnePlus சாரே கொல மாஸ்.. புது N6 போன் மட்டுமல்ல, கூடவே Nord Buds 4 வருது.. அமேசானில் உறுதியாச்சு!
இந்திய மார்கெட்டில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதலாவது என் சீரிஸ் ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் வெளியீட்டை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்ததை அடுத்து ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 4 (OnePlus Nord Buds 4) மாடலின் வெளியீடும் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால், ஒன்பிளஸ் பிரியர்கள் டபுள் குஷியில் இருக்கின்றனர்.
2025ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 3 (OnePlus Nord Buds 3) மாடல் வெளியாகியது. ஆகவே, இந்த அக்டோபர் மாதத்தில் ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 4 வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எதிர்பார்த்ததைவிட முன்னதாகவே வெளியாக இருப்பது இப்போது உறுதியாகி இருக்கிறது. அமேசான் தளத்தில் மைக்ரோ சைட் ஓப்பன் செய்யப்பட்டுள்ளது.

ஆகவே, ஓரிரு வாரங்களில் வெளியாகும் என்பதில் சந்தேகமில்லை. ஏனென்றால், ஜூலை மாத தொடக்கத்தில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதலாவது என் சீரிஸ் ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுடன் ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 4 வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனாலேயே ஒன்பிளஸ் பிரியர்கள் வெயிட்டிங் மோடில் இருக்கின்றனர்.
அமேசான் மைக்ரோசைட்டில் பீச்சர்கள் ஏதும் உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும், இன்-இயர் டிசைனில் கிடைக்க இருப்பதை போஸ்டர் வழியாக உறுதி செய்துள்ளது. சார்ஜிங் கேஸை ஸ்குவார் (Square) டிசைனில் பார்க்க முடிகிறது. இது பட்ஜெட் விலை மாடலாக இருக்கும். ஏனென்றால், கடந்த மார்ச் மாதத்தில் ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 4 ப்ரோ (OnePlus Nord Buds 4 Pro) வெளியாகியது.
இதன் விலை ரூ.3,799ஆக இருந்தது. ஆகவே, ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 4 மாடலின் விலை இதைவிட மலிவாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ரூ.2000 அல்லது ரூ.2500 பட்ஜெட்டில் கிடைக்கலாம். அதேபோல பீச்சர்களும் பெரும்பாலும் ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 4 ப்ரோவில் கிடைத்ததை எதிர்பார்க்கலாம். ஆகவே, இதன் பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 4 ப்ரோ அம்சங்கள் (OnePlus Nord Buds 4 Pro Specifications): 12 எம்எம் டைட்டானியம் கோட்டெட் டைனாமிக் டிரைவர்கள் கிடைக்கின்றன. 55dB ஆக்டிக் நாய்ஸ் கேன்லேஷன் (Active Noise Cancellation) மற்றும் டிரான்பரன்ட் மோட் (Transparent Mode) கிடைக்கிறது. ப்ளூடூத் 6.0 (Bluetooth 6.0) கனெக்டிவிட்டி கிடைக்கிறது. எல்எச்டிசி 5.0 (LHDC 5.0) கோடெக் உள்ளது.
மேலும், எஸ்பிசி மற்றும் ஏஏசி கோடெக்குகளும் கிடைக்கின்றன. பிரீமியம் வாய்ஸ் கால்கள் அனுபவம் கொடுக்க ஒவ்வொரு பட்களிலும் 3 மைக்குகள் கிடைக்கின்றன. இதில் ஏஐ கால் நாய்ஸ் கேன்சலேஷன் (AI Call Noise Cancellation) கிடைக்கிறது. ஏஐ அசிஸ்டன்ட் (AI Assistant), ஏஐ டிரான்ஸ்லேட் (AI Translate) உள்ளிட்ட ஏஐ பீச்சர்களையும் கொடுத்து இருக்கிறது.
டச் கன்ட்ரோல் கொண்ட மாடலாக இந்த ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 4 ப்ரோ இருக்கிறது. IP55 ரேட்டிங் கொண்ட ஸ்வெட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. 4.4 கிராம் எடையில் பட்கள் வருகின்றன. 43 கிராம் எடையுடன் சார்ஜிங் கேஸ் கிடைக்கிறது. அதேபோல பட்களில் 62mAh பேட்டரி மற்றும் 530mAh பேட்டரியானது சார்ஜிங் கேஸில் கிடைக்கிறது.
ஏஎன்சி மோடில் பட்களில் 7 மணி நேரங்களுக்கும், சார்ஜிங் கேஸில் 26 மணி நேரங்களுக்கும் பேக்கப் கிடைக்கும். ஏஎன்சி மோட் ஆப் செய்யப்பட்டால் பட்களில் 13 மணி நேரங்களுக்கும், கேஸில் 54 மணி நேரங்களுக்கும் பேக்கப் பெற்று கொள்ளலாம். ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. ஆகவே, 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால், 13 மணி நேரங்களுக்கு பேக்கப் பெற்று கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications