விட்ராதீங்க ப்ரோ.. ஆஃபர் ரேட்ல OnePlus TWS இயர்பட்ஸ்.. 3டி ஸ்பாஷியல் ஆடியோ.. 54 மணி நேர பேக்கப்.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் நடக்கும் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2026 (Great Indian Festival 2026) என்னும் சிறப்பு விற்பனையில் ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்கள் மட்டுமல்லாமல், இயர்பட்ஸ் மாடல்களுக்கும் தள்ளுபடி கிடைக்கிறது. இதில் ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 3ஆர் (OnePlus Nord Buds 3r) தள்ளுபடி விலையில் பட்டையை கிளப்புகிறது.
இப்போது, அமேசான் தளத்தில் 13 சதவீத தள்ளுபடி போக ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 3ஆர் கிடைக்கிறது. ஆகவே, ரூ.1,749 விலைக்கு வாங்கலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.200 தள்ளுபடி கிடைக்கிறது. இதுபோக ரூ.52 கூப்பன் டிஸ்கவுண்ட் மற்றும் 3 மாதங்களுக்கு நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகையும் இந்த நோர்ட் பட்ஸ் 3ஆர் மாடலுக்கு கிடைக்கிறது.

ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 3ஆர் அம்சங்கள் (OnePlus Nord Buds 3r Specifications): பிரீமியம் ஆடியோ அனுபவத்துக்காக 12.4 எம்எம் டைட்டானியம் கோடெட் டிரைவர்கள் (Titanium-coated Drivers) இந்த இயர்பட்ஸில் இடம்பெற்றுள்ளன. ஸ்பேஷியல் ஆடியோ (Spatial Audio) சப்போர்ட் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு இயர்பட்ஸிலும் 2 மைக்ரோபோன்கள் என 4 மைக்ரோபோன்கள் உள்ளன.
கனெக்டிவிட்டியை பொறுத்தவரையில், கூகுள் ஃபாஸ்ட் பேர் (Google Fast Pair) வசதியுடன் இந்த ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 3ஆர் மாடல் கிடைக்கிறது. குறிப்பாக, டூயல் டிவைஸ் கனெக்சன் (Dual Device Connection) சப்போர்ட் இருப்பதால், ஒரே நேரத்தில் ஸ்மார்ட்போன் மற்றும் லேப்டாப் அல்லது டேப்லெட்டுடன் கனெக்ட் செய்யலாம். ஒரே நேரத்தில் ஒரு டிவைஸின் ஆடியோவை கேட்க முடியும்.
கால் பேசும்போது கிரிஸ்டல் கிளியர் அனுபவத்தை வழங்கும் வகையில் ஏஐ நாய்ஸ் கேன்சலேஷன் கால் (AI Noise Cancellation Call) இதில் இடம்பெற்றுள்ளது. இது தேவையற்ற பேக்கிரவுண்ட் நாய்ஸ்களை குறைத்து, கிளியர் வாய்ஸ் கால் அனுபவத்தை வழங்க உதவுகிறது. மேலும், ப்ளூடூத் 5.4 கனெக்டிவிட்டி மற்றும் ஏஏசி (AAC), எஸ்பிசி (SBC) ஆடியோ கோடெக் வழங்கப்பட்டுள்ளது.
இந்த இயர்பட்ஸில் ஏஐ டிரான்ஸ்லேஷன் (AI Translation) வசதியும் இடம்பெற்றுள்ளது. இதுதவிர, அக்வா டச் (Aqua Touch) சப்போர்ட், டேப் கண்ட்ரோல் மற்றும் ப்ளூடூத் வழியாக கேமராவை கண்ட்ரோல் செய்யும் வசதியும் கிடைக்கிறது. கேமிங் பிரியர்களை கவரும் வகையில் 47எம்எஸ் லோ லேட்டன்சி (Low Latency) வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ஹேய்மெலடி (HeyMelody) ஆப் மூலமாக இயர்பட்ஸின் செட்டிங்ஸ் மற்றும் கண்ட்ரோல்களை மாற்றியமைக்கலாம். ஆடியோ அனுபவத்தை விருப்பத்துக்கு ஏற்ப மாற்ற சவுண்ட் மாஸ்டர் ஈக்குவலைசர் (Sound Master Equalizer) வசதியும் உள்ளது. இதனுடன் IP55 ரேட்டிங் கொண்ட வாட்டர் மற்றும் ஸ்வெட் ரெசிஸ்டன்ஸ் வசதி இருப்பதால், ஓரவுக்கு ரெசிஸ்டன்ஸ் எதிர்பார்க்கலாம்.
பேட்டரியை பொறுத்தவரையில், ஒவ்வொரு இயர்பட்ஸிலும் 58mAh பேட்டரி மற்றும் சார்ஜிங் கேஸில் 560mAh பேட்டரி இடம்பெற்றுள்ளது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால், மொத்தமாக 54 மணி நேரங்கள் வரையிலான பேட்டரி பேக்கப் கிடைக்கும். இதனால், அடிக்கடி சார்ஜ் செய்யாமல் நீண்ட நேரம் பயன்படுத்த விரும்புபவர்களுக்கு இந்த மாடல் கவனிக்கத்தக்க ஆப்ஷனாக இருக்கும்.
ஆன்டி-விண்ட் டிசைன் (Anti-wind Design) மற்றும் கால் நாய்ஸ் கேன்சலேஷன் சிஸ்டம் (Call Noise Cancellation System) உள்ளிட்ட அம்சங்களுடன் இந்த ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 3ஆர் மாடல் வருகிறது. மேலும், கஸ்டமர்களின் விருப்பத்துக்கு ஏற்ப ஆரா ப்ளூ (Aura Blue), ஆஷ் பிளாக் (Ash Black), ஜேட் மிஸ்ட் (Jade Mist) ஆகிய மூன்று கலர் ஆப்ஷன்களில் இந்த இயர்பட்ஸை தேர்வு செய்யலாம்.


Click it and Unblock the Notifications
