Home
Gadgets

சிங்கிள் சார்ஜில் 54 மணி நேரங்களுக்கு பேக்கப்.. ஸ்பாஷியல் ஆடியோ.. ஏஐ நாய்ஸ் கேன்சலேஷன்.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 3ஆர் மாடலானது ஆரா ப்ளூ (Aura Blue) மற்றும் ஆஷ் பிளாக் (Ash Black) கலர்களில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்போது, ஜேட் மிஸ்ட் (Jade Mist) கலரில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. முந்தைய கலர் வேரியண்ட்களை போலவே ரூ.1,999 ஆக விலை இருக்கிறது. இருப்பினும், அறிமுக சலுகையில் ரூ.1,599 விலைக்கு கிடைக்க இருக்கிறது.

அமேசான் தளத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம். வருகிற அக்டோபர் 8ஆம் தேதி முதல் ஆர்டர் செய்து வாங்கி கொள்ளலாம். இப்போதே வேண்டுமானால், ஆரா ப்ளூ மற்றும் ஆஷ் பிளாக் கலர்களில் வாங்கி கொள்ளலாம். பீச்சர்களில் எந்த மாற்றமும் கிடையாது. ஆகவே, முந்தைய கலர் வேரியண்ட்களில் கிடைத்த அதே பீச்சர்களை பேக் செய்துள்ளது.

சிங்கிள் சார்ஜில் 54 மணி நேரங்களுக்கு பேக்கப்.. ஸ்பாஷியல் ஆடியோ!

ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 3ஆர் அம்சங்கள் (OnePlus Nord Buds 3r Specifications): 12.4 எம்எம் டைட்டானியன் கோடெட் டிரைவர்கள் (Titanium-coated Drivers) கிடைக்கின்றன. ஸ்பாஷியல் ஆடியோ (Spatial Audio) சப்போர்ட் கொடுக்கப்பட்டு உள்ளது. 4 மைக்ரோபோன்கள் கிடைக்கின்றன. ஆகவே, ஒவ்வொரு பட்களிலும் தலா 2 மைக்ரோபோன்கள் பேக் செய்யப்பட்டு உள்ளன.

இதுபோக ஏஐ நாய்ஸ் கேன்சலேஷன் கால் (AI Noise Cancellation Call) கிடைக்கிறது. ஆகவே, கிரிஸ்டல் கிளியர் வாய்ஸ் கால் அனுபவத்தை இந்த ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 3ஆர் மாடல் கொடுக்கும். ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) கனெக்டிவிட்டி கொடுக்கப்பட்டு உள்ளது. ஏஏசி (AAC), எஸ்பிசி (SBC) போன்ற ஆடியோ கோடெக் சப்போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

கூகுள் ஃபாஸ்ட் பேர் (Google Fast Pair) சப்போர்ட் கொண்ட மாடலாக இந்த ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 3ஆர் கிடைக்க இருக்கிறது. டூயல்-டிவைஸ் கனெக்சன் (Dual Device Connection) சப்போர்ட் கொடுக்கிறது. ஒரே நேரத்தில் ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட் அல்லது லேப்டாப்பில் கனெக்ட் செய்து கொள்ள முடியும். ஆனால், ஒரே டிவைஸ் ஆடியோவை மட்டுமே பிளே செய்ய முடியும்.

இந்த ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 3ஆர் மாடலில் ஏஐ டிரான்ஸ்லேஷன் (AI Translation) கொடுக்கப்பட்டு உள்ளது. அக்வா டச் (Aqua Touch) சப்போர்ட் கொடுக்கிறது. டேப் செய்து கன்ட்ரோல் செய்து கொள்ளலாம். ப்ளூடூத் வழியாக கேமரா கன்ட்ரோல்களையும் செய்து கொள்ளலாம். கேமிங் பிரியர்களுக்காக 47எம்எஸ் லோவ் லேட்டன்சி கொடுக்கப்பட்டு உள்ளது.

ஹேய்மெலடி (HeyMelody) ஆப் வழியாகவும் டியூனிங் மற்றும் கன்ட்ரோல்களை செய்யலாம். சவுண்ட் மாஸ்டர் ஈக்குவலைசர் (Sound Master Equalizer) கிடைக்கிறது. IP55 ரேட்டிங் கொண்ட வாட்டர் & ஸ்வெட் ரெசிஸ்டன்ஸ் (Water & Sweat Resistance) கொடுக்கப்பட்டு உள்ளது. பட்களில் 58mAh பேட்டரி மற்றும் சார்ஜிங் கேஸில் 560mAh பேட்டரி கிடைக்கிறது.

ஃபுல் சார்ஜ் செய்தால், 54 மணி நேரங்களுக்கு பேக்கப் பெற்று கொள்ளலாம். ஆன்டி-விண்ட் டிசைன் (Anti-wind Design), கால் நாய்ஸ் கேன்சலேஷன் சிஸ்டம் (Call Noise Cancellation System) கொண்ட மாடல் பட்ஜெட்டில் வேண்டுமானால், இந்த ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 3ஆர் மாடலை ஆப்ஷனில் எடுக்கலாம். அதேநேரத்தில் புதிய கலர் வேரியண்ட் ஆப்ஷனும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

Best Mobiles in India

English summary
OnePlus Nord Buds 3r Jade Mist Color Variant Launched in India Sale From October 8 Check Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X