Home
Gadgets

சீனாக்காரனே மிரண்டுட்டான்.. கம்மி விலையில் OnePlus Nord Buds 3.. ஆளுக்கு ஒன்னு வாங்கி போடுங்க.. விலை என்ன?

ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் இந்தியாவில் அதன் புதிய ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 3 (OnePlus Nord Buds 3) TWS இயர்பட்ஸ் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஒன்பிளஸ் நோர்ட் இயர்பட்ஸ் (New OnePlus Nord Earbuds) சாதனம் அனைவரும் வியக்கும் வகையில், மிக மிக குறைந்த விலையில் அட்டகாசமான அம்சங்களுடன் பேக் செய்யப்பட்டுள்ளது. மிரட்டலான அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்ட இந்த புதிய ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 3 இயர்பட்ஸ் விலை என்ன? இதன் சிறப்பம்சங்கள் என்ன? என்பதை இப்போது பார்க்கலாம்.

ஒன்பிளஸ் நிறுவனம் அதன் புதிய ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 3 இயர்பட்ஸ் (OnePlus Nord Buds 3 TWS Earbuds) சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ஒன்பிளஸ் நிறுவனம் சொன்னது போல, இந்த இயர்பட்ஸ் சாதனத்தை நிறுவனம் 32dB ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (Active Noise Cancellation - ANC) அம்சத்துடன் வெளியிட்டுள்ளது. இது 12.4mm டைட்டானியம் டைனமிக் டிரைவர்ஸ் உடன் பாஸ்வேவ் 2.0 என்ஹான்ஸ்மென்ட் அல்கோரிதம் ஆதரவை கொண்டுள்ளது.

சீனாக்காரனே மிரண்டுட்டான்.. கம்மி விலையில் OnePlus Nord Buds 3..

சீனாக்காரனே மிரண்டுட்டான்.. கம்மி விலையில் ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 3 இயர்பட்ஸ் (OnePlus Nord Buds 3 TWS Earbuds):

இந்த புதிய ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 3 இயர்பட்ஸ் (OnePlus Nord Buds 3 TWS Earbuds) பெப்பில் வடிவ கேஸ் உடன் க்ளோஸி வைட் மற்றும் மேட் பிளாக் நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது முழுமையான டச் கண்ட்ரோல் ஆதரவை ஆதரிக்கிறது. இந்த இயர்பட்ஸ் ப்ளூடூத் 5.4 உடன் டூயல் கனெக்ட் அம்சத்துடன் இயங்குகிறது. இதனால், இரண்டு சாதனங்களில் உங்களை இந்த இயர்பட்ஸ் டிவைஸை பயன்படுத்த முடியும்.

இது IP55 வாட்டர் மற்றும் ஸ்வெட் ரெசிஸ்டன்ஸ் ஆதரவுடன் வருகிறது. இந்த ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 3 இயர்பட்ஸ் (OnePlus Nord Buds 3 TWS Earbuds) சாதனத்தை நிறுவனம் பலகட்ட தரச்சான்று சோதனைக்கு உட்படுத்தி, தீவிர சோதனைக்கு பிறகே விற்பனைக்கு கொண்டுவந்துள்ளதாக ஒன்பிளஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஒன்பிளஸ் இயர்பட்ஸ் (OnePlus Earbuds) 55℃ வரையிலான கடுமையான வெப்பத்தை தாங்கக்கூடியது.

இதன் சார்ஜிங் கேஸ் ஹிஞ்கள் சுமார் 20,000 முறைகளுக்கு மேல் மடக்கி திறந்து சோதனை செய்யப்பட்டுள்ளதாக ஒன்பிளஸ் தெரிவித்துள்ளது. இதன் சார்ஜிங் கேஸ் 1.5 மீட்டர் உயரத்தில் இருந்து விழுந்தாலும் ஒன்றும் ஆகாது என்றும், மற்றும் இயர்பட்ஸ்களை 1.8 மீட்டர் உயர்தத்தில் இருந்து தவறவிட்டாலும் அதற்கு ஒன்றும் ஆகாது என்று ஒன்பிளஸ் கூறியுள்ளது. இதை நிரூபிக்கும் விதமாக ஒன்பிளஸ் நிறுவனம் பல ட்ராப் டெஸ்ட் சோதனைகளை மேற்கொண்டுள்ளது.

ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 3 இயர்பட்ஸ் விலை (OnePlus Nord Buds 3 TWS Earbuds Price):

இந்த ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 3 சாதனம் வெறும் 4.2 கிராம் எடையுடன் மிகமிக குறைந்த எடை கொண்ட இயர்பட்ஸ் சாதனமாக வெளிவந்துள்ளது. இது 43 மணி நேரம் பிளேபேக் நேரத்தை வழங்கக்கூடியது என்றும், அதேபோல், 12 மணி நேர ஸ்டாண்ட்அலோன் பிளேபேக் நேரத்தை வழங்கக்கூடியது என்றும் ஒன்பிளஸ் தெரிவித்துள்ளது. இது 10 நிமிடங்களில் 11 மணிநேரம் பிளேடைமை வழங்கும் சார்ஜ்ஜை தருகிறது.

இதன் விலை பற்றி பேசுகையில், புதிய ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 3 இயர்பட்ஸ் (OnePlus Nord Buds 3 TWS Earbuds) சாதனம் இந்தியாவில் ரூ. 2,299 என்ற மலிவு விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது வரும் செப்டம்பர் 20, 2024 ஆம் தேதி முதல் வாங்க கிடைக்கும்.

இது அமேசான் (Amazon.in), பிளிப்கார்ட் (Flipkart.in), OnePlus.in, ஒன்பிளஸ் ஸ்டோர் ஆப்ஸ் (OnePlus Store App), ரிலையன்ஸ் டிஜிட்டல் (Reliance Digital), கிரோமா (Croma), விஜய் சேல்ஸ் (Vijay Sales), பஜாஜ் எலக்ட்ரானிக்ஸ் (Bajaj Electronics) மற்றும் சில்லறை விற்பனையாளர் மூலம் வாங்க கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
OnePlus Nord Buds 3 TWS Earbuds 32dB ANC 43 Hours Of Total Playback Price Rs 2299 In India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X