போட்றா ஆர்டரை.. 2-ஆ கூட ஆர்டர் போடலாம்.. அவ்வளவு குறைந்த விலை.. OnePlus Nord Buds 3 விற்பனை துவங்கியது..
ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் இந்தியாவில் அதன் புதிய ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 3 (OnePlus Nord Buds 3) TWS இயர்பட்ஸ் சாதனத்தின் விற்பனை இன்று துவங்கியுள்ளது. இந்த புதிய ஒன்பிளஸ் நோர்ட் இயர்பட்ஸ் (New OnePlus Nord Earbuds) சாதனம் அனைவரும் வியக்கும் வகையில், மிக மிக குறைந்த விலையில் அட்டகாசமான அம்சங்களுடன் பேக் செய்யப்பட்டுள்ளது. மிரட்டலான அம்சங்களுடன் விற்பனைக்கு வரும் புதிய ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 3 இயர்பட்ஸ் விலை என்ன? இதன் சிறப்பம்சங்கள் என்ன? என்பதை இப்போது பார்க்கலாம்.
ஒன்பிளஸ் நிறுவனம் அதன் புதிய ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 3 இயர்பட்ஸ் (OnePlus Nord Buds 3 TWS Earbuds) சாதனத்தை இந்தியாவில் விற்பனை செய்கிறது. ஒன்பிளஸ் நிறுவனம் சொன்னது போல, இந்த இயர்பட்ஸ் சாதனத்தை நிறுவனம் 32dB ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (Active Noise Cancellation - ANC) அம்சத்துடன் வெளியிட்டுள்ளது. இது 12.4mm டைட்டானியம் டைனமிக் டிரைவர்ஸ் உடன் பாஸ்வேவ் 2.0 என்ஹான்ஸ்மென்ட் அல்கோரிதம் ஆதரவை கொண்டுள்ளது.

ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 3 இயர்பட்ஸ் (OnePlus Nord Buds 3 TWS Earbuds):
இந்த புதிய ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 3 இயர்பட்ஸ் (OnePlus Nord Buds 3 TWS Earbuds) பெப்பில் வடிவ கேஸ் உடன் க்ளோஸி வைட் மற்றும் மேட் பிளாக் நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது முழுமையான டச் கண்ட்ரோல் ஆதரவை ஆதரிக்கிறது. இந்த இயர்பட்ஸ் ப்ளூடூத் 5.4 உடன் டூயல் கனெக்ட் அம்சத்துடன் இயங்குகிறது. இதனால், இரண்டு சாதனங்களில் உங்களை இந்த இயர்பட்ஸ் டிவைஸை பயன்படுத்த முடியும்.
இது IP55 வாட்டர் மற்றும் ஸ்வெட் ரெசிஸ்டன்ஸ் ஆதரவுடன் வருகிறது. இந்த ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 3 இயர்பட்ஸ் (OnePlus Nord Buds 3 TWS Earbuds) சாதனத்தை நிறுவனம் பலகட்ட தரச்சான்று சோதனைக்கு உட்படுத்தி, தீவிர சோதனைக்கு பிறகே விற்பனைக்கு கொண்டுவந்துள்ளதாக ஒன்பிளஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஒன்பிளஸ் இயர்பட்ஸ் (OnePlus Earbuds) 55℃ வரையிலான கடுமையான வெப்பத்தை தாங்கக்கூடியது.
இதன் சார்ஜிங் கேஸ் ஹிஞ்கள் சுமார் 20,000 முறைகளுக்கு மேல் மடக்கி திறந்து சோதனை செய்யப்பட்டுள்ளதாக ஒன்பிளஸ் தெரிவித்துள்ளது. இதன் சார்ஜிங் கேஸ் 1.5 மீட்டர் உயரத்தில் இருந்து விழுந்தாலும் ஒன்றும் ஆகாது என்றும், மற்றும் இயர்பட்ஸ்களை 1.8 மீட்டர் உயர்தத்தில் இருந்து தவறவிட்டாலும் அதற்கு ஒன்றும் ஆகாது என்று ஒன்பிளஸ் கூறியுள்ளது. இதை நிரூபிக்கும் விதமாக ஒன்பிளஸ் நிறுவனம் பல ட்ராப் டெஸ்ட் சோதனைகளை மேற்கொண்டுள்ளது.
ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 3 இயர்பட்ஸ் விற்பனை (OnePlus Nord Buds 3 TWS Earbuds Sale):
இந்த ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 3 சாதனம் வெறும் 4.2 கிராம் எடையுடன் மிகமிக குறைந்த எடை கொண்ட இயர்பட்ஸ் சாதனமாக வெளிவந்துள்ளது. இது 43 மணி நேரம் பிளேபேக் நேரத்தை வழங்கக்கூடியது என்றும், அதேபோல், 12 மணி நேர ஸ்டாண்ட்அலோன் பிளேபேக் நேரத்தை வழங்கக்கூடியது என்றும் ஒன்பிளஸ் தெரிவித்துள்ளது. இது 10 நிமிடங்களில் 11 மணிநேரம் பிளேடைமை வழங்கும் சார்ஜ்ஜை தருகிறது.
இதன் விலை பற்றி பேசுகையில், புதிய ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 3 இயர்பட்ஸ் (OnePlus Nord Buds 3 TWS Earbuds) சாதனம் இப்போது வெறும் ரூ. 2,299 என்ற மலிவு விலையில் விற்பனைக்கு வாங்க கிடைக்கிறது. அமேசான் (Amazon.in), பிளிப்கார்ட் (Flipkart.in), OnePlus.in, ஒன்பிளஸ் ஸ்டோர் ஆப்ஸ் (OnePlus Store App), ரிலையன்ஸ் டிஜிட்டல் (Reliance Digital), கிரோமா (Croma), விஜய் சேல்ஸ் (Vijay Sales), பஜாஜ் எலக்ட்ரானிக்ஸ் (Bajaj Electronics) மற்றும் சில்லறை விற்பனையாளர் மூலம் வாங்கலாம்.


Click it and Unblock the Notifications