இவ்ளோ கம்மி விலைக்கு ANC, 44 மணி நேர பேட்டரி, Google Fast Pairing-ஆ.. OnePlus-ன் புதிய Buds சும்மா மிரட்டுதே!
OnePlus Nord Buds 3: பட்ஜெட் விலை தயாரிப்புகளை அறிமுகம் செய்வதற்காகவே உருவாக்கப்பட்ட நோர்ட் சீரீஸின் (Nord Series) கீழ், ஒன்பிளஸ் நிறுவனம் ஒரு புதிய இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்ய உள்ளது. அது ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 3 (OnePlus Nord Buds 3) மாடலாகும். ஒன்பிளஸ் நிறுவனத்தின் இந்த புதிய இயர்பட்ஸ் சரியாக எந்த தேதியில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும்? இது என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? என்ன விலைக்கு வரும்? இதோ விவரங்கள்:
ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 3 வெளியீட்டு தேதி: இந்தியாவில் இந்த இயர்பட்ஸ் வருகிற செப்டம்பர் 17 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அறிமுகம் செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒன்பிளஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 3-க்கான மைக்ரோசைட்டையும் உருவாகியுள்ளது.

ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 3 அம்சங்கள்: இந்த இயர்பட்ஸின் முக்கிய அம்சங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும் கூட, இது பெரும்பாலும் முந்தைய மாடலான ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 3 ப்ரோவில் (OnePlus Nord Buds 3 Pro) நாம் கண்ட பல அம்சங்களை பகிர்ந்துகொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டீஸர் போட்டோ வழியாக இந்த இயர்பட்ஸ் - ஓவல் வடிவ சார்ஜிங் கேஸுடன் வரும் மற்றும் 2 கலர் ஆப்ஷன்களில் விருப்பங்களில் கிடைக்கும் என்பதையும், மேலும் ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 3 ப்ரோவை போலவே, இதன் வடிவமைப்பும் க்ளீன் மற்றும் மாடர்ன் லுக்கில் இருக்கும் என்பதையும் அறிந்துகொள்ள முடிகிறது.
செயல்திறன் அடிப்படையில், நோர்ட் பட்ஸ் 3 மாடலானது டைனமிக் டிரைவர்களுடன் நல்ல சவுண்ட் குவாலிட்டியை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பேக்கிரவுண்ட் நாய்ஸ்-ஐ குறைக்க, ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (ANC) ஆகியவைகளையும் இதில் எதிர்பார்க்கலாம். மேலும் குவிக் கனெக்ஷன்களுக்காக இது கூகுள் பாஸ்ட் பேரிங் (Google Fast Pairing) மற்றும் நிலையான வயர்லெஸ் இணைப்புக்கு ப்ளூடூத் 5.4 ஆகியவற்றை ஆதரிக்கலாம்.
பேட்டரி லைஃப்பை பொறுத்தவரை, ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 3 ப்ரோ மாடலை போலவே ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 3 மாடலும் இருக்கலாம். அதாவது இதை ஒருமுறை சார்ஜ் செய்தால் 12 மணிநேரம் வரை (ஏஎன்சி ஆஃப் செய்யப்பட்டிருக்கும் போது) மற்றும் சார்ஜிங் கேஸ் உடன் சேர்த்து 44 மணிநேரம் வரையிலான பேட்டரி லைஃப்பை வழங்கலாம்.
ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 3 விலை: இந்தியாவில் இஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 3 ப்ரோ மாடலானது ரூ.3,299 க்கு அறிமுகமானது. ஆக ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 3 மாடலின் விலை ரூ.3,000 க்கு கீழே தான் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். அசல் விலை, விற்பனை தேதி மற்றும் அம்சங்கள் குறித்த விவரங்களை வெளியீட்டு நாளின் போது (செப்டம்பர் 17) உடனுக்குடன் பகிர்ந்து கொள்கிறோம்.
இதற்கு முன்பாக இந்தியாவில், நோர்ட் சீரீஸின் கீழ் ஒன்பிளஸ் நோர்ட் 4 என்கிற புதிய ஸ்மார்ட்போன் அறிமுகமானது. இது மொத்தம் 3 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டது. பேஸிக் 8GB ரேம் + 128GB ஆப்ஷன் ரூ.29,999 க்கும், 8GB ரேம் + 256GB ஆப்ஷன் ரூ.32,999 க்கும் மற்றும் ஹை-எண்ட் வேரியண்ட் ஆன 12GB ரேம் + 256GB ஆப்ஷன் ரூ.35,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஒன்பிளஸ் நோர்ட் 4 ஸ்மார்ட்போனின் அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 2150 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.74-இன்ச் 1.5கே அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது ProXDR மற்றும் AquaTouch தொழில்நுட்பங்களையும் பேக் செய்கிறது. இதன்கீழ் உங்கள் விரல்கள் ஈரமாக இருந்தாலும் கூட இதன் டிஸ்பிளே ரெஸ்பான்சிவ் ஆக இருக்கும்.
ப்ராசஸரை பொறுத்தவரை, இது அட்ரெனோ 732 ஜிபியு (Adreno 732 GPU) உடனான குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3சிப்செட் (Qualcomm Snapdragon 7+ Gen 3 SoC) கொண்டு இயங்குகிறது. இந்த சிப்செட் ஸ்னாப்டிராகன் 7ஜென் 3-ஐ விட 65 சதவீதம் வேகமான சிபியு, 130 சதவீதம் வேகமான ஜிபியு-வை வழங்கும் என்று கூறப்படுகிறது.
ரேம் மற்றும் ஸ்டோரேஜை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன் 12ஜிபி வரையிலான RAM மற்றும் 256ஜிபி வரையிலான UFS 4.0 இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 128ஜிபி ஆப்ஷனில் UFS 3.1 ஸ்டோரேஜ் உள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
கேமராக்களை பொறுத்தவரை, இது ஓஐஎஸ் (OIS) மற்றும் இஐஎஸ் (EIS) ஆதரவு கொண்ட 50 எம்பி Sony LYT-600 ப்ரைமரி கேமரா + 112 டிகிரி ஃபீல்ட் ஆஃப் வியூவை வழங்கும் 8 எம்பி அல்ட்ரா வைட் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. முன்பக்கத்தில், செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்கான தேவைகளை 16எம்பி செல்பீ கேமரா பூர்த்தி செய்யும். பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங்கை பொறுத்தவரை, ஒன்பிளஸ் நோர்ட் 4 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 100W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் 5,500mAh பேட்டரியை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications