Home
Gadgets

OnePlus நோர்ட் போன் வெச்சுருந்தா! ஜூலை 5ஆம் தேதி ரெடியா இருங்க!

ஒன்பிளஸ் நோர்ட் சீரிஸ் போன்களுக்கான தொழில்நுட்பங்களுடன் உருவாக்கப்பட்ட ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 2 ஆர் (OnePlus Nord Buds 2R) இயர்பட்ஸ் வெளியீட்டு தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. இது, முன்னதாக வெளியான ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 2 இயர்பட்ஸை விட மலிவான விலையில், வெளியாக உள்ளது.

ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு, ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 2 இயர்பட்ஸ் மிகுந்த விருப்பமானதாக இருக்கும். இருப்பினும், இதன் விலை சற்று அதிகமாக இருப்பதால், காத்திருந்து வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கலாம். ஆனால், இப்போது, அதே அம்சங்களுடன் கூடிய ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 2ஆர் இயர்பட்ஸ் ஜூலை 5ஆம் தேதி மலிவான விலையில் வெளியாக இருக்கிறது.

OnePlus நோர்ட் போன் வெச்சுருந்தா! ஜூலை 5ஆம் தேதி ரெடியா இருங்க!

ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 2 ஆரில் என்ன எதிர்பார்க்கலாம்: இந்த இயர்பட்ஸ் ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 2 (OnePlus Nord Buds 2) பதிப்பில் கொடுக்கப்பட்ட பெரும்பாலான அம்சங்களை கொண்டிருக்க வாய்ப்புள்ளது. அந்த இயர்பட்ஸ் ரூ. 2,999 விலைக்கு விற்பனைக்கு வந்த நிலையில், இந்த இயர்பட்ஸ் மலிவான விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

அதேபோல, டிசைனிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இப்போது அமேசானில், வெளியீட்டு தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் ஜூலை 5ஆம் தேதி வெளியாகிறது. டீப் கிரே (Deep Gray) மற்றும் டிரிபிள் ப்ளூ (Triple Blue) கலர்களில் உருவாக்கப்பட்டுள்ளது. மேட் பினிஷிங் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் இஎன்சி தொழில்நுட்பம், பேட்டரி, ப்ளூடூத் கனெக்டிவிட்டி குறித்த தகவல்கள் முறையே ஜூன் 27, 29 மற்றும் ஜூலை 1ஆம் தேதிகளில் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த நேரத்தில் ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 2 இயர்பட்ஸில் கொடுக்கப்பட்ட அம்சங்களை தெரிந்துகொள்வது நல்லது. இந்த ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 2 இயர்பட்ஸ், 12.4மிமீ டைனமிக் டிரைவர்கள் (Dynamic Driver) கொண்டுள்ளது. சிறந்த பேஸ் சவுண்டிங் அனுபத்திற்காக பேஸ்வேவ் அல்கோரிதம் (BassWave Algorithm) பயன்படுத்தப்பட்டுள்ளது. இயர்பட்ஸ்களிலும் தலா இரண்டு 20Hz மைக்ரோபோன் கொடுக்கப்பட்டுள்ளது.

இயர்பட்ஸ் கேஸில் டைப்-சி சார்ஜிங் போர்ட் வருகிறது. இயர்பட்ஸ்களில் தலா 41 mAh பேட்டரியும், சார்ஜிங் கேஸில் 480 mAh பேட்டரியும் கொடுக்கப்பட்டுள்ளது. ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இருக்கிறது. 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால், 5 மணி நேரம் பயன்படுத்த முடியும். இதில் 25bB ஏஎன்சி தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. IP55 வாட்டர் மற்றும் ஸ்வெட் ரெஸிஸ்டென்ட் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

5.3 ப்ளூடூத் இணைப்புத்திறன் கொண்டுள்ளது. 10 மீட்டர்கள் வரையில் வயர்லெஸ் ரேன்ஞ் கிடைக்கும். இதில் சிறப்பு அம்சங்களாக, ஒன்பிளஸ் ஃபாஸ்ட் பேர் (OnePlus Fast Pair), டால்பி அட்மோஸ் சப்போர்ட் (Dolby Atmos support), டைராக் டோனர் (Dirac Toner), சவுண்ட் மாஸ்டர் ஈக்குலைசர் (Sound Master Equalizer), ஹேமெலோடி ஆப் (HeyMelody app) ஆகியவை உள்ளன.

இவற்றில் பெரும்பாலான அம்சங்கள், ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 2 ஆரில் கொடுக்கப்படும். மேலும், தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
OnePlus Nord Buds 2R Price, Specifications And Launch Date in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X