Home
Gadgets

ஆளுக்கு 2 ஆர்டர்! OnePlus இயர்பட்ஸ் மீது திடீர் விலை குறைப்பு.. 38 மணிநேர பேட்டரி, IP55 ரேட்டிங்.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய பட்ஜெட் விலை இயர்பட்ஸ் ஆக ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 3ஆர் (OnePlus Nord Buds 3r) அறிமுகம் செய்யப்பட்ட வேகத்தில், பிளிப்கார்ட் (Flipkart) வலைத்தளத்தில் ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 2ஆர் (OnePlus Nord Buds 2r) மாடலின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

நினைவூட்டும் வண்ணம் இது கடந்த ஜூலை 2023 இல் ரூ.2,199 என்கிற விலைக்கு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இது பில்பிப்கார்ட் வலைத்தளத்தில் நேரடியாக ரூ.400 விலைக்குறைப்பை பெற்று ரூ.1799 க்கு வாங்க கிடைக்கிறது. இந்த விலை குறைப்பு - டீப் கிரே, மிஸ்டி க்ரே மற்றும் டிரிபிள் ப்ளூ 3 ஆகிய கலர் ஆப்ஷன்கள் மீதும் கிடைக்கிறது.

ஆளுக்கு 2 ஆர்டர்! OnePlus இயர்பட்ஸ் மீது திடீர் விலை குறைப்பு!

ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 2ஆர் விரிவான அம்சங்கள்: இது பிளாஸ்டிக் இயர்பட் கேஸிங்கில் பொருத்தப்பட்டுள்ள 12.4மிமீ டைனமிக் டிரைவர்களுடன் வருகிறது. இந்த இயர்பட்ஸ் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) ஆதரவுடன் வருகிறது. கூடவே ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களில் வேலை செய்யும் டைரக் ஆடிடோ ட்யூனர் (Dirac Audio Tuner) அம்சத்தையும் கொண்டுள்ளது.

மேலும் இந்த இயர்பட்ஸில் இரண்டு மைக்ரோஃபோன்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவைகள் நிறுவனத்தின் ஏஐ கிளியர் கால் அல்காரித்துடன் (AI Clear Call Algorithm) ஆகியவற்றுடன் இணைந்து வாய்ஸ் கால்களின் போது சத்தத்தை குறைக்கும் வகையில் சுற்றுப்புற சத்தத்தை ஃபில்டர் செய்வது மற்றும் மனித குரல்களை கண்டறிவது போன்ற செயல்பாடுகளை செய்யும்.

ஒவ்வொரு இயர்பட்டும் 36எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளன. அவைகள் எட்டு மணிநேரம் வரையிலான பேட்டரி லைஃப்பை வழங்குகின்றன. மறுகையில் உள்ள சார்ஜிங் கேஸில் 480எம்ஏஎச் செல் உள்ளது, இப்படியாக மொத்தம் 38 மணிநேர பேட்டரி லைஃப்பை சேர்க்கும் என்று ஒன்பிளஸ் நிறுவனம் கூறுகிறது.

ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 2ஆர் கேஸில், சார்ஜ் செய்வதற்கான யூஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளது. இது ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டி உடன் வருகிறது. மேலும் ஒன்பிளஸ் 6 மற்றும் அதன் பிறகு வந்த புதிய ஸ்மார்ட்போன்களில் உள்ள ஒன்பிளஸ் ஃபாஸ்ட் பேர் (OnePlus Fast Pair) அம்சத்தை பயன்படுத்தியும் இதை கனெக்ட் செய்ய முடியும்.

ஒன்பிளஸ் போன்கள் இல்லாத பயனர்கள் ஆண்ட்ராய்டில் உள்ள ஹேமெலடி (HeyMelody) ஆப் வழியாகஇந்த இயர்பட்களை கனெக்ட் செய்ய முடியும். இந்த இயர்பட்ஸ் ஐஓஎஸ் வெர்ஷனை ஆதரிக்காது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. கடைசியாக இது நீர் மற்றும் வியர்வை எதிர்ப்பிற்கான ஐபி55 ரேட்டிங்கை பெற்றுள்ளது. இதன் ஒவ்வொரு இயர்பட்டும் சுமார் 4.3 கிராம் மட்டுமே உள்ளன.

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 3ஆர் விலை: ஆரா பிளாக் (Aura Blue) மற்றும் ஆஷ் பிளாக் (Ash Black) என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 3ஆர் மாடல் ஆனது ரூ.1,799 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் விற்பனையின் போது லிமிடட் டைம் ஆபர் ஆக ரூ.1,599 க்கு வாங்க கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ்-ன் புதிய நோர்ட் பட்ஸ் 3ஆர் மாடல் ஆனது வருகிற செப்டம்பர் 8 ஆம் தேதி முதல் ஒன்பிளஸ்.இன் (OnePlus.in), ஒன்பிளஸ் ஸ்டோர் ஆப் (OnePlus Store App), அமேசான் (Amazon), பிளிப்கார்ட் (Flipkart) வழியாக வாங்க கிடைக்கும்.

ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 3ஆர் முக்கிய அம்சங்கள்: ஒன்பிளஸ்-ன் இந்த ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ (TWS) ஹெட்செட் ஆனது சார்ஜிங் கேஸ் உட்பட மொத்தம் 54 மணிநேரம் வரை பேட்டரி லைஃப்பை வழங்குவதாக கூறப்படுகிறது. மேலும் சி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி55 ரேட்டிங்கையும் கொண்டுள்ளன.

கூடவே 12.4மிமீ டைட்டானியம் டைனமிக் டிரைவர்கள், ஏஐ ஆதரவு உடனான கால் நாய்ஸ் கேன்சலேஷன் மற்றும் டூயல் டிவைஸ் கனெக்டிவிட்டி உடனும் வருகிறது. மேலும் இந்த இயர்போன்கள் நிகழ்நேர ஏஐ மொழிபெயர்ப்பு மற்றும் 360-டிகிரி ஒன்பிளஸ் 3டி ஆடியோ மற்றும் பைண்ட் மை இயர்பட்ஸ் (Find My Earbuds) அம்சத்திற்கான ஆதரவையும் கொண்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Nord Buds 2r Gets Rs 400 Price Cut in Flipkart Ahead New Nord Buds 3r Sale Starts on Sep 8
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X