Home
Gadgets

ஆளுக்கு 4 ஆர்டர்.. ரூ.499-க்கு OnePlus மேக்னட்டிக் கேஸ்.. நேர்ட் 5 & நோர்ட் சிஇ5 மாடல்கள்.. புதுசா 5 டிசைன்!

இந்திய மார்கெட்டில் ஒன்பிளஸ் நோர்ட் 5 (OnePlus Nord 5) மற்றும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ5 (OnePlus Nord CE5) மாடல்கள் களமிறங்கி விற்பனைக்கு தேதிக்காக ஒட்டுமொத்த ஒன்பிளஸ் பிரியர்களையும் வெயிட்டிங் மோடில் வைத்துள்ளது. இப்போது, டபுள் ட்ரீட்டாக பிரீமியம் டிசைன் மற்றும் லுக்கில் மேக்னடிக் கேஸ்கள் (Magnetic Cases) களமிறக்கி இருக்கின்றன. இதுபோக ஒன்பிளஸ் மேக்னடிக் கேபிள் (OnePlus Magnetic Cable) களமிறங்கி இருக்கிறது. இந்த கேஸ் மற்றும் சார்ஜிங் கேபிள் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

ஒன்பிளஸ் நோர்ட் 5 மற்றும் நோர்ட் சிஇ 5 மாடல்களுக்கும் சேர்ந்து 5 டிசைன்களில் மேக்னடிக் கேஸ் வெளியாகி இருக்கிறது. இதில் ஹோலி ஃபிரேம் (Holy Flame), மூன்ரைஸ் (Moonrise), மூட் (Mood), லெட்டர் பேட்டர்ன் (Letter Patten) மற்றும் கிரிக்கெட் (Cricket) ஆகிய டிசைன்கள் அடங்கும். இது பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட கேஸ்களாகும்.

ஆளுக்கு 4 ஆர்டர்.. ரூ.499-க்கு OnePlus மேக்னட்டிக் கேஸ்.. டிசைன்?

அதிலும் லெட்டர் பேட்டர்ன் மற்றும் ஹோலி ஃபிரேம் கேஸ்களின் உருவாக்கத்தில் ஒன்பிளஸ் கம்யூனிட்டி (OnePlus Community) மெம்பர்களும் இடம்பெற்றுள்ளனர். ஆகவே, இது அந்தந்த கலர்களுக்கு ஏற்ப இருக்கும். இதுபோக டைப்-சி டூ டைப்-சி மற்றும் டைப்-சி டூ டைப்-ஏ மேக்னடிக் கேபிள்களும் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன.

இந்த கேபிள்கள் 1.2 மீட்டர் லென்த் கொடுக்கிறது. டியூரபிலிட்டி மற்றும் பிரீமியம் குவாலிட்டி கொடுக்கும்படி ஹை-டென்சிட்டி வூவன் டெக்ச்சர் கிடைக்கிறது. இதில் டைப்-சி டூ டைப்-சி கேபிள் மூலம் 100W சூப்பர்வூக் சார்ஜிங் பெற்று கொள்ளலாம். அதேபோல டைப்-சி டூ டைப்-ஏ கேபிள் மூலம் 120W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் பெற்று கொள்ளலாம்.

விலை எப்படி? ஒன்பிளஸ் நோர்ட் 5 மற்றும் நோர்ட் சிஇ 5 மாடல்களின் மேக்னடிக் கேஸ்களின் விலை ரூ.499ஆக இருக்கிறது. அதேபோல டைப்-சி டூ டைப்-சி மற்றும் டைப்-சி டூ டைப்-ஏ மேக்னடிக் கேபிள்களின் விலை ரூ.1,299ஆக இருக்கிறது. இதில் ஒன்பிளஸ் நோர்ட் 5 மாடலின் மேக்னடிக் கேஸ் மற்றும் கேபிள்கள் விற்பனைக்கு வந்துவிட்டது.

ஆளுக்கு 4 ஆர்டர்.. ரூ.499-க்கு OnePlus மேக்னட்டிக் கேஸ்.. டிசைன்?

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ5 மாடலின் மேக்னடிக் கேஸ் மற்றும் கேபிள்களின் விற்பனை ஜூலை 12ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இப்போது, 2 மாடல்களின் முக்கிய பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை தெரிந்து கொள்ளலாம். ஒன்பிளஸ் நோர்ட் 5 போனில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ புரொடெக்சன் கொண்ட 6.83 இன்ச் அமோலெட் டிஸ்பிளே வருகிறது.

ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் பேஸ்டு ஆக்ஸிஜன் ஓஎஸ் 15 கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 4என்எம் (Octa Core Snapdragon 8s Gen 3 4nm) சிப்செட் கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 50 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா உள்ளது. 80W சூப்பர்வூக் சார்ஜிங் கொண்ட 6800mAh பேட்டரி கிடைக்கிறது.

ரூ.31,999ஆக ஆரம்ப விலை இருக்கிறது. ஒன்பிளஸ் நோர்ட் சிஇ5 போனை பார்க்கையில், 6.77 இன்ச் அமோலெட் டிஸ்பிளே உள்ளது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8450 ஏபெக்ஸ் 4என்எம் (Octa Core MediaTek Dimensity 8350 Apex 4nm) சிப்செட் கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா & 16 எம்பி செல்பீ கேமரா உள்ளது.

இந்த நோர்ட் மாடலில் 80W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 7100mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.24,999ஆக இருக்கிறது. ஜூலை 12ஆம் தேதி அமேசான் பிரைம் டே சேலில் விற்பனைக்கு கிடைக்க இருக்கின்றன. இந்த நாளில் நோர்ட் சிஇ5 மாடலுக்கு கேஸ் மற்றும் கேபிள் கிடைக்க இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Nord 5 OnePlus Nord CE5 Magnetic Case Launched India Check Sale Price Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X