சிங்கிள் சார்ஜில் 36 மணிநேர பேட்டரி.. வீட்டுக்கு 2 வாங்கும் விலையில் OnePlus-ன் புதிய நெக்பேண்ட்!
ஜூன் 19 ஆம் தேதி இந்தியாவில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் அடுத்த நெக்பேண்ட் வயர்லெஸ் ஹெட்செட் ஆக ஒன்பிளஸ் புல்லட்ஸ் வயர்லெஸ் இசட்3 மாடல் அறிமுகப்படும் என்பதை ஒன்பிளஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. இது என்னென்ன அம்சங்களை வழங்கும்? என்ன விலைக்கு வரும்? இதோ விவரங்கள்:
ஒன்பிளஸ் நிறுவனம் இப்போதைக்கு நிறுத்தப்போவதில்லை என்பது போல் தெரிகிறது. ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனின் இந்திய விற்பனை தொடங்கிய வேகத்தில், அதன் அடுத்த மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன்கள் ஆன ஒன்பிளஸ் நோர்ட் 5 சீரீஸ் குறித்த விவரங்கள் லீக் ஆகி, உடனடி அறிமுகத்தை உறுதிப்படுத்தி உள்ளன.

ஒன்பிளஸ் நோர்ட் 5 ஒன்பிளஸ் நோர்ட் சிஇ5 ஆகிய 2 புதிய ஒன்பிளஸ் மாடல்களும் வருகிற ஜூலை 8 ஆம் தேதியன்று உலகளவில் அறிமுகம் செய்யப்படலாம் என்று அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில் ஒன்பிளஸ் நிறுவனம் ஜூன் 19 ஆம் தேதி ஒரு புதிய தயாரிப்பை அறிமுகம் செய்யவுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது!
ஜூன் 19 ஆம் தேதி இந்தியாவில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் அடுத்த நெக்பேண்ட் வயர்லெஸ் ஹெட்செட் ஆக ஒன்பிளஸ் புல்லட்ஸ் வயர்லெஸ் இசட்3 (OnePlus Bullets Wireless Z3) மாடல் அறிமுகப்படும் என்பதை ஒன்பிளஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. இது என்னென்ன அம்சங்களை வழங்கும்? என்ன விலைக்கு வரும்? இதோ விவரங்கள்:
ஒன்பிளஸ் புல்லட்ஸ் வயர்லெஸ் இசட்3 நெக்பேண்டின் முக்கிய அம்சங்கள்: இது சம்பா சன்செட் மற்றும் மம்போ மிட்நைட் ஆகிய 2 கலர்களில் வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது அதிவேக பாஸ் மற்றும் ஏஐ ஆல் மேம்படுத்தப்பட்ட தெளிவை (AI-enhanced clarity) வழங்கும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஒன்பிளஸ் நிறுவனம் இந்த ஹெட்செட்டை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் - 36 மணிநேர பிளேபேக் அல்லது 21 மணிநேர டால்க்டைம்-ஐ கொடுக்கும் என்பதையும்உறுதி செய்துள்ளது. நினைவூட்டும் வண்ணம் கடந்த 2022 இல் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்பிளஸ் புல்லட்ஸ் வயர்லெஸ் இஸட்2 மாடல் ஆனது ஒரே சார்ஜில் 30 மணிநேர மொத்த பிளேபேக்கை வழங்கியது.

மேலும் முந்தைய மாடலின் 10 நிமிட சார்ஜிங் ஆன 20 மணிநேரத்துடன் ஒப்பிடும்போது, இஸட்3 மாடல் ஆனது வெறும் 10 நிமிட சார்ஜிங்கில் 27 மணிநேர ஆடியோ பிளேபேக்கை வழங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர்த்து புல்லட்ஸ் வயர்லெஸ் இஸட்2 மாடலில் உள்ளதை போலவே, குவிக் சுவிட்ச், வால்யூம், ஸ்கிப் டிராக், போன் கால்ஸ், வாய்ஸ் அசிஸ்டன்ட், மேக்னட் கண்ட்ரோல் மற்றும் ஐபி55 ரேட்டிங் ஆகிய அம்சங்களையும் இதில் எதிர்பார்க்கலாம்.
ஏனென்றால் இந்த ஹெட்செட் ஒரு பழக்கமான வடிவமைப்பை தான் கொண்டுள்ளது. ஆக இதுவும் பழைய மாடலை போலவே ரூ.1999 க்கு இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
அறிமுகத்திற்கு பிறகு, இந்த நெக்பேண்ட் ஹெட்செட் ஆனது அமேசான் இந்தியா (Amazon.in), பிளிப்கார்ட் (Flipkart), ஒன்பிளஸ் இந்தியா வலைத்தளம் (OnePlus.in), ஒன்பிளஸ் ஸ்டோர் ஆப் (OnePlus Store App), ஒன்பிளஸ் எக்ஸ்க்ளூஸிவ் ஸ்டோர்ஸ் (OnePlus Exclusive Stores) மற்றும் பார்ட்னர் கடைகளின் வழியாக விற்பனைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
முன்னதாக அறிமுகமான ஒன்பிளஸ் புல்லட் வயர்லெஸ் இஸட்2 மாடலின் விரிவான அம்சங்கள்: இது ஹைப்ரிட் நாய்ஸ் கேன்சலேஷன் (Hybrid Noise Cancellation) உடன் வருகிறது. ஒன்பிளஸ் நிறுவனத்தின் கூற்றுப்படி இது பேக்கிரவுண்ட்டில் உள்ள இரைச்சலை (Background noise) 45 டெசிபல் (45dB) வரை குறைக்கும்.
இந்த ஹைப்ரிட் நாய்ஸ் கேன்சலேஷன் அம்சமானது மூன்று மைக்ரோஃபோன்கள் (Microphones) மற்றும் ஏஐ கால் நாய்ஸ் கேன்சலேஷன் (AI Call Noise Cancellation) ஆகியவற்றின் மூலம் உங்களுக்கு வரும் அழைப்புகள் இருப்பதை உறுதி செய்கிறது. மேலும் இது 12.4 என்எம் டைனமிக் டிரைவர்ஸ் (12.4 nm Dynamic Drivers) உடன் வருகிறது.
மேலும் இதன் இயர்பட்கள் ஆனது நல்ல சவுண்ட் குவாலிட்டி (Sound quality) மற்றும் வலுவான பாஸையும் (Strong bass) வழங்குகின்றன. ஒன்பிளஸ் புல்லட் வயர்லெஸ் இஸட்2 மாடல் ஆனது ஐபி55 நீர் மற்றும் வியர்வை எதிர்ப்பு மதிப்பீட்டை (IP55 Water and Sweat Resistance Rating) பெற்றுள்ளன.


Click it and Unblock the Notifications








