போன வாரம் அறிமுகமான OnePlus நெக்பேண்ட் மீது திடீர் டிஸ்கவுண்ட்.. ஜூலை 8-ல் OnePlus Buds 4 வேற வருது!
ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் வருகிற ஜூலை 8 ஆம் தேதி நடக்கும் அதன் ஒன்பிளஸ் சம்மர் லான்ச் 2025 வெளியீட்டு நிகழ்வில், ஒன்பிளஸ் நோர்ட் 5 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள், புதிய டேப்லெட் மற்றும் புதிய ஸ்மார்ட் வாட்ச் உடன் சேர்த்து, அதன் புதிய இயர்பட்ஸ் ஆக ஒன்பிளஸ் பட்ஸ் 4 (OnePlus Buds 4) மாடலையும் அறிமுகம் செய்ய உள்ளது.
இந்நிலையில் மிகவும் சமீபத்தில் (கடந்த ஜூன் 19 ஆம் தேதி இந்தியாவில்) அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்பிளஸ் புல்லட்ஸ் வயர்லெஸ் இஸட்3 (OnePlus Bullets Wireless Z3) இன்-இயர் இயர்போன்ஸ் மீது திடீர் டிஸ்கவுண்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. உங்களிடம் ஐசிஐசிஐ (ICICI) வங்கி கிரெடிட் கார்டு இருந்தால், ஒன்பிளஸ் நிறுவனத்தின் இந்த வயர்லெஸ் நெக்பேண்ட் மீது ரூ.200 கேஷ்பேக் கிடைக்கும்.

அதாவது ரூ.200 தள்ளுபடிக்கு பின்னர் இதை ரூ.1499 க்கு வாங்க முடியும். இந்த சலுகை பிரபல இகாமர்ஸ் வலைத்தளம் ஆன அமேசான் இந்தியாவில் அணுக கிடைக்கிறது. நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் புல்லட்ஸ் வயர்லெஸ் இஸட்3 ஆனது ரூ.1,699 க்கு கடந்த வாரம் இந்தியாவில் அறிமுகமானது. இது Mambo Midnight மற்றும் Samba Sunset ஆகிய 2 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கிறது .
ஒன்பிளஸ் புல்லட்ஸ் வயர்லெஸ் இஸட்3 முக்கிய அம்சங்கள்:
- 12.4mm டைனமிக் பாஸ் டிரைவர்ஸ்
- அதிவேக 3D ஸ்பேஷியல் ஆடியோ
- ஏஐ ஆதரவு கொண்ட இஎன்சி (ENC)
- 4 ப்ரீசெட் EQ முறைகள்: Balanced, Serenade, Bass மற்றும் Bold
- Hey Melody ஆப் மூலம் பாஸ் கஸ்டமைசேஷன்
- ப்ளூடூத் 5.4
- கூகுள் Fast Pairing ஆதரவு
- AAC மற்றும் SBC ஆடியோ கோடெக் ஆதரவு
- IP55 தூசி மற்றும் நீர் எதிர்ப்பு ரேட்டிங்
- ஒரே சார்ஜில் 36 மணி நேரம் வரை பேட்டரி லைஃப்
- 10 நிமிட குவிக் சார்ஜிங் மூலம் 27 மணிநேரம் வரை பிளேபேக்
- 220mAh பேட்டரி
- USB டைப்-சி சார்ஜிங் போர்ட்
ஜூலை 8 அறிமுகமாகும் ஒன்பிளஸ் பட்ஸ் 4 TWS இயர்போன்ஸ் மாடலில் உறுதி செய்யப்பட்டுள்ள அம்சங்கள்: இது 55dB வரை அடாப்டிவ் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷனை (ANC) ஆதரிக்கும் என்பதை ஒன்பிளஸ் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் இது 3D ஆடியோ அனுபவத்தையும், LHDC 5.0 ஆடியோ கோடெக் ஆதரவையும் வழங்குவதாகவும் கூறப்படுகிறது.
ஒன்பிளஸ் பட்ஸ் 4 ஹெட்செட்டுகள் ஆனது டூயல் AC ட்ரைவர் யூனிட்களுடன் வரும் மற்றும் 47ms வரை அல்ட்ரா-லோ லேட்டன்சியை வழங்குவதாக கூறப்படும் கேமிங் மோட்-ஐயும் ஆதரிக்கும். கடைசியாக ஒன்பிளஸ் பட்ஸ் 4 இயர்போன்ஸ் ஆனது ஸ்டார்ம் கிரே மற்றும் ஜென் கிரீன் ஆகிய 2 கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்படலாம்.
ஒன்பிளஸ் பட்ஸ் 4 மாடலின் முக்கிய அம்சங்களோடு சேர்த்து ஒன்பிளஸ் நோர்ட் 5 ஸ்மார்ட்போனின் ரியர் மற்றும் செல்பீ கேமரா குறித்த விவரங்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் நோர்ட் 5 ஸ்மார்ட்போனின் கேமரா விவரங்கள்: இது டூயல் ரியர் கேமரா யூனிட் உடன் வரும் என்பதையும், அதில் 50-மெகாபிக்சல் சோனி LYT-700 ப்ரைமரி சென்சார் மற்றும் 8-மெகாபிக்சல் 116-டிகிரி அல்ட்ரா-வைட் ஷூட்டர் இடம்பெறும் என்பதையும் ஒன்பிளஸ் ஒன்பிளஸ் நிறுவனம் ஒரு செய்திக்குறிப்பில் உறுதிப்படுத்தியுள்ளது.
ஒன்பிளஸ் நோர்ட் 5 ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 50-மெகாபிக்சல் சாம்சங் JN5 சென்சாரை கொண்ட செல்பீ கேமரா இருக்கும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒன்பிளஸ் நோர்ட் 5 ஸ்மார்ட்போனின் முன் மற்றும் பின்புற கேமராக்கள் இரண்டுமே 60fps இல் 4K வீடியோ ரெக்கார்டிங்கை ஆதரிக்கும். மேலும் ஸ்மார்ட்போன் லைவ் போட்டோ (LivePhoto) அம்சத்தையும் ஆதரிக்கும்.


Click it and Unblock the Notifications