Home
Gadgets

இனி ஸ்மார்ட் டிவி எதுக்கு? இந்த கம்மி விலை OnePlus மாணிட்டர் வாங்கிருங்க.. சூப்பரான அம்சங்கள்.!

ஒன்பிளஸ் கடந்த சில வாரங்களில் அருமையான சாதங்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அதாவது ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போன்கள், இயர்பட்ஸ், 65-இன்ச் ஒன்பிளஸ் டிவி உள்ளிட்ட பல அருமையான சாதனங்களை அறிமுகம் செய்தது. குறிப்பாக இந்த சாதனங்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் ஒன்பிஸள் நிறுவனம் ஒரு அசத்தலான மாணிட்டரை விற்பனைக்கு கொண்டுவர உள்ளது. அதாவது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒன்பிளஸ் நிறுவனம் 2K 165Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்பிளே வசதி கொண்ட ஒன்பிளஸ் மாணிட்டர் எகஸ் எக்ஸ்27 மாடலை அறிமுகம் செய்தது. இதனுடன் ஒன்பிளஸ் மாணிட்டர் இ24 என்ற மாடலும் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த கம்மி விலை OnePlus மாணிட்டர் வாங்கிருங்க.. சூப்பரான அம்சங்கள்.!

விற்பனை எப்போது?
தற்போது இந்த ஒன்பிளஸ் மாணிட்டர் இ24 தான் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. அதாவது ஒன்பிளஸ் மாணிட்டர் இ24 மாடலை இன்று முதல் பிளிப்கார்ட், ஒன்பிளஸ், அமேசான் போன்ற வலைத்தளங்களில் வாங்க முடியும். குறிப்பாக ஆஃப்லைன் ஸ்டோர்களில் கூட இந்த ஒன்பிளஸ் மாணிட்டர் E 24 மாடல் விற்பனைக்கு வருகிறது.

ஒன்பிளஸ் மாணிட்டர் E 24 மாணிட்டர் விலை?
குறிப்பாக இந்த ஒன்பிளஸ் மாணிட்டர் இ24 மாடலின் விலை ரூ.11,999-ஆக உள்ளது. ஆனால் விலைக்குத் தகுந்த அனைத்து சிறப்பு அம்சங்களையும் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் மாணிட்டர். இப்போது இந்த சாதனத்தின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

இந்த கம்மி விலை OnePlus மாணிட்டர் வாங்கிருங்க.. சூப்பரான அம்சங்கள்.!

ஒன்பிளஸ் மாணிட்டர் E 24 மாணிட்டர் அம்சங்கள்

ஒன்பிளஸ் மாணிட்டர் E 24 மாணிட்டர் ஆனது 24-இன்ச் ஃபுல் எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 1920x1080 பிக்சல்ஸ், 75 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்பiயாக கொண்டு இந்த மாணிட்டர் வெளிவந்துள்ளது. குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம்.

அதேபோல் ஒன்பிளஸ் மாணிட்டர் இ24 மாடல் ஆனது 8mm அளவில் மூன்று புறங்களில் பெசல்-லெஸ் டிசைன் வசதியைக் கொண்டுள்ளது. எனவே இதைப் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இந்த மாணிட்டர் மெட்டல் ஸ்டாண்ட் மற்றும் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஆங்கில் வசதியுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கம்மி விலை OnePlus மாணிட்டர் வாங்கிருங்க.. சூப்பரான அம்சங்கள்.!

ஒன்பிளஸ் மாணிட்டர் இ24 மாடலின் முக்கிய சிறப்பு அம்சம் என்னவென்றால், அடாப்டிவ் சின்க் தொழில்நுட்பம், TUV ரெயின்லாந்து சான்று, லோ புளூ லைட் மற்றும் தடங்கல் இல்லா விஷூவல்களை வெளிப்படுத்துகிறது. எனவே பயனர்கள் இந்த ஒன்பிளஸ் மாணிட்டரை நம்பி வாங்கலாம்.

குறிப்பாக ஒன்பிளஸ் மாணிட்டர் இ24 மாடலில் பில்ட்-இன் கேபிள் மேனேஜ்மென்ட் வசதி உள்ளது. இதுதவிர யுஎஸ்பி டைப்-சி கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் மாணிட்டர். மேலும் எச்டிஎம்ஐ போர்ட், விஜிஏ (VGA), ஹெட்போன் ஜாக் உள்ளிட்ட அசத்தலான ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய ஒன்பிளஸ் மாணிட்டர்.

இந்த கம்மி விலை OnePlus மாணிட்டர் வாங்கிருங்க.. சூப்பரான அம்சங்கள்.!

நம்பி வாங்கலாம்..
அதேபோல் இப்போது வரும் 24-இன்ச் ஸ்மார்ட் டிவிகளை வாங்குவதை விட இதுபோன்ற அதிநவீன மாணிட்டர் மாடல்களை வாங்குவது நல்லது. அதாவது இதுபோன்ற சாதனங்கள் நீண்ட நாட்கள் பயன்படுத்த முடியும். குறிப்பாக ஸ்மார்ட் டிவிகளை விட இதுபோன்ற மாணிட்டர்கள் தனித்துவமான அனுபவத்தை வழங்கும் என்றே கூறலாம்.

மேலும் ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் பல அசத்தலான சாதனங்களை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக சியோமி, சாம்சங் நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் இந்நிறுவனம் தொடர்ந்து பல அசத்தலான சாதனங்களை அறிமுகம் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
OnePlus Monitor E 24 model goes on sale in India: Specifications, Price and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X