ஆளுக்கு 1 வாங்கும் விலை.. 20000mAh கெப்பாசிட்டி, 150W SuperVOOC சார்ஜிங்.. OnePlus-ன் புதிய பவர் பேங்க்!
ஒன்பிளஸ் நிறுவனம் அதன் காம்பாக்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆன ஒன்பிளஸ் 13டி மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் இது அதே ஒன்பிளஸ் 13டி ஆக வருமா அல்லது ஒன்பிளஸ் 13எஸ் ஆக வருமா என்பது குறித்த யூகங்கள் ஒருபக்கம் இருக்க, ஒன்பிளஸ் நிறுவனம் சைலன்ட் ஆக இன்னொரு புதிய தயாரிப்பையும் அறிமுகம் செய்துள்ளது.
அது ஒன்பிளஸ் சூப்பர்வூக் 150W பவர் பேங்க் (OnePlus SuperVOOC 150W Power Bank) ஆகும். இதுவொரு 20,000mAh பவர் பேங் ஆகும். இதன் விலை நிர்ணயம் என்ன? இது என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளது? எப்போது இந்தியாவில் அறிமுகமாகும்? இதோ விவரங்கள்:

ஒன்பிளஸ் சூப்பர்வூக் 150W பவர் பேங்க்கின் முக்கிய அம்சங்கள்: 20,000mAh திறன் கொண்ட இந்த பவர் பேங்க், ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போனில் உள்ள 6,260mAh பேட்டரியை சுமார் 2.36 முறை முழுமையாக சார்ஜ் செய்யும் என்று ஒன்பிளஸ் பிராண்ட் கூறுகிறது. இது மடிக்கக்கூடிய யூஎஸ்பி-சி கேபிள், ஒரு யூஎஸ்பி-சி மற்றும் ஒரு யூஎஸ்பி-ஏ போர்ட் ஆகியவற்றை கொண்டுள்ளது. இது ஒரு போர்ட்டுக்கு 100W வரை அல்லது பல டிவைஸ்களில் 150W வரை வழங்குகிறது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் கூற்றுப்படி, இது 2021 மேக்புக் ப்ரோ மாடலை வெறும் 30 நிமிடங்களில் 54% வரை சார்ஜ் செய்யும். மேலும் இந்த பவர் பேங்க் பிடி 3.0, க்யூசி 3.0 மற்றும் பிபிஎஸ் நெறிமுறைகளை ஆதரிக்கிறது. அதாவது இது ஸ்மார்ட்போன்கள் முதல் லேப்டாப்கள் வரை பெரும்பாலான டிவைஸ்களுடன் இணக்கமானதாக இருக்கும்.
இந்த பவர் பேங்க்கிற்கான பாஸ்ட் சார்ஜர் மூலம் சுமார் 2 மணி நேரத்தில் இதை முழுமையாக ரீசார்ஜ் செய்ய முடியும். பவர் பேங்க்கில் உள்ள பில்ட் இன் டிஸ்பிளே, பேட்டரி திறனை காட்டுகிறது. பாதுகாப்பை பொறுத்தவரை இது பல சார்ஜிங் பாதுகாப்பு நுட்பங்கள், விமான-பாதுகாப்பு சான்றிதழ் மற்றும் ஒருங்கிணைந்த கேபிளுக்கான ஸ்லாட் ஆகியவற்றை கொண்டுள்ளது.
என்ன விலை? சீனாவில் இது இந்தியரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.4098 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் சூப்பர்வூக் 150W பவர் பேங்க்கின் உலகளாவிய வெளியீடு கூடிய விரைவில் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் சரியான வெளியீட்டு விவரங்கள் இல்லை. ஒருவேளை ஒன்பிளஸ் 13எஸ் உடன் சேர்த்து இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம்.
ஒன்பிளஸ் 13டி அல்லது ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போன் எப்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம்? இந்த முறை அனைத்து சந்தைகளிலும் ஒன்பிளஸ்13டி ஸ்மார்ட்போன் ஆனது அதே பெயரின் கீழ் அறிமுகம் செய்யப்பலாமல் போகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது உலகளாவிய சந்தைகளில் - ஒரு புதிய எஸ்-சீரிஸின் (OnePlus New S-Series) கீழ் ஒன்பிளஸ் 13எஸ் (OnePlus 13S) ஆக அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போன் ஆனது ஜூன் 2025 இல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம்.
ஒன்பிளஸ் 13டி விலை விவரங்கள்: சீனாவில் இது மார்னிங் மிஸ்ட் கிரே, ஹார்ட்-த்ரே பிங்க் மற்றும் கிளவுடி இங்க் பிளாக் ஆகிய கலர்களில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.39,805 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆக இந்திய விலை நிர்ணயம் ரூ.45,000 சுற்றி இருக்கலாம்.
ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போனின் 16 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.42,150 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 12 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.44,490 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
16 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.46,835 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடைசியாக உள்ள ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போனின் ஹை-எண்ட் 16 ஜிபி ரேம் + 1 டிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.52,690 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








