Home
Gadgets

OnePlus Keyboard-ல் இப்படி ஒரு ஸ்பெஷலிட்டியா? இப்போதே வாங்க ரெடியாகும் இந்தியர்கள்.!

OnePlus 11 இந்த மாத தொடக்கத்தில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் பிப்ரவரி 7 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் வெளியீடு தவிர, நிறுவனம் ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி உடன், ஒன்பிளஸ் கீபோர்டு (OnePlus Keyboard) என அழைக்கப்படும் கீபோர்டை உருவாக்கி வருகிறது.

Oneplus நிறுவனம் அறிமுகம் செய்யப் போகும் புது கீபோர்ட்.!

Oneplus நிறுவனம் அறிமுகம் செய்யப் போகும் புது கீபோர்ட்.!

Oneplus நிறுவனம் இதுவரை அதன் பட்டியலில் ஏகப்பட்ட ஸ்மார்ட் கேட்ஜெட்களை (Smart gadgets) விற்பனை செய்து வருகிறது.

ஆனால், முதல் முறையாக யாரும் எதிர்பார்த்திடாத வகையில் OnePlus நிறுவனம் இப்போது புதிதாக ஒரு ஸ்மார்ட் கீ-போர்டை (OnePlus Keyboard) அறிமுகம் செய்ய உள்ளது.

இது பற்றிய சில லீக் தகவல்களை நிறுவனமே சமீபத்தில் அதன் ட்விட்டர் வழியாக வெளியிட்டுள்ளது.

இது சாதாரண கீபோர்ட் இல்லை.! அப்படி இதில் என்ன ஸ்பெஷலிட்டி?

இது சாதாரண கீபோர்ட் இல்லை.! அப்படி இதில் என்ன ஸ்பெஷலிட்டி?

ஒன்பிளஸ் நிறுவனம் அறிமுகம் செய்யப்போகும் இந்த புதிய கீபோர்ட் டிவைஸ் மற்ற கீபோர்ட் டிவைஸ் போல இல்லாமல், புது மாதிரியான அம்சத்துடன் வருகிறது.

அப்படி இதில் என்ன அம்சங்கள் உள்ளது? இதில் நிறுவனம் புதிதாக என்ன விஷயங்களைச் செய்துள்ளது என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க.

ஒன்பிளஸ் கீபோர்ட் சாதனம் பார்ப்பதற்கு அப்படியே ஆப்பிள் நிறுவனத்தின் மேக் புக் கீபோர்ட் (MacBook Keyboard) போலவே உள்ளது.

எது.. கீபோர்டை கஸ்டமைஸ் செய்யலாமா?

எது.. கீபோர்டை கஸ்டமைஸ் செய்யலாமா?

ஆனால், இந்த கீபோர்ட் மைக்ரோசாப்ட் விண்டோஸ் OS (Microsoft Windows) இல் இயங்கும் கணினிகளுடன் இயங்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

ஒன்பிளஸ் நிறுவனம் அறிமுகம் செய்யும் இந்த புதிய கீபோர்ட் சாதனத்தில் இருக்கும் மிகப்பெரிய சிறப்பே, இந்த கீபோர்டை நீங்கள் கஸ்டமைஸ் (Customise) செய்துகொள்ளும் விருப்பத்துடன் வருகிறது.

இதுவரை ஸ்மார்ட்போன், இயர்போன், ஸ்மார்ட் டிவி என்று பலதரப்பட்ட சாதனங்களை உருவாக்கி வந்த நிறுவனம், திடீரென கீபோர்டை உருவாக்கியுள்ளது.

ஓங்கி அடிச்சாலும் சத்தமே வராதா? சைலன்ட் கீபோர்ட் டிவைஸ்.!

ஓங்கி அடிச்சாலும் சத்தமே வராதா? சைலன்ட் கீபோர்ட் டிவைஸ்.!

ஒன்பிளஸ் நிறுவனத்துடன் கீக்ரான் (Keychron) என்ற கீபோர்ட் நிறுவனம் இணைந்து தான் இந்த புதிய கீபோர்ட் சாதனத்தை உருவாக்கியுள்ளது.

இந்த புதிய கீபோர்ட் சாதனத்தில் டபுள் கேஸ்கெட் டிசைன் (double gasket design) வழங்கப்பட்டுள்ளது.

இதனால் நீங்கள் டைப் செய்யும் போது, பொதுவாக ஏற்படும் டைப்பிங் சத்தங்கள் போல இதில் எதுவும் ஏற்படாது என்பதை நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

OnePlus Keyboard டிவைஸை யாரெல்லாம் வாங்கலாம்?

OnePlus Keyboard டிவைஸை யாரெல்லாம் வாங்கலாம்?

இதன் டிசைன் பற்றி பேசுகையில், இந்த புதிய OnePlus Keyboard சாதனம் அலுமினியம் பாடியுடன் மிகவும் லேசான லைட் வெயிட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த கீபோர்ட் சாதனம் மேக் (Mac), விண்டோஸ் (Windows) மற்றும் லினக்ஸ் (Linux) போன்ற பதிப்புகளுடன் சிறப்பாக செயல்படும்.

இந்த புதிய சாதனம் பற்றிய விபரங்கள் இப்போது கொஞ்சம், கொஞ்சமாக இணையத்தில் லீக் செய்யப்பட்டு வருகிறது.

ஓபன் சோர்ஸ் ஃபயர் வேர் கூட இதில் இருக்கிறதா?

ஓபன் சோர்ஸ் ஃபயர் வேர் கூட இதில் இருக்கிறதா?

நாங்கள் முன்பே சொன்னது போல, இந்த கீபோர்ட் சாதனம் கஸ்டமைசபில் ஃப்யூச்சர்களுடன் (Customisable Feature Keyboard) வருகிறது. உதாரணமாக இதில் ஹாட் ஸ்வேப்டபிள் (Hot-swappable) என்ற அம்சம் வழங்கப்படுகிறது.

இது உங்கள் விருப்பத்திற்கு ஏற்றார் போல குறிப்பிட்ட சில கீ சுவிட்சுகளை கஸ்டமைஸ் செய்ய அனுமதிக்கிறது. இந்த கீ போர்டு உங்களுக்கு ஓபன் சோர்ஸ் ஃபயர் வேர் அம்சத்தையும் வழங்குகிறது.

எப்போது இந்த கீபோர்ட் இந்தியாவில் வாங்க கிடைக்கும்?

எப்போது இந்த கீபோர்ட் இந்தியாவில் வாங்க கிடைக்கும்?

இது QMK மற்றும் VIA போன்ற ஓபன் சோர்ஸ் ஃபயர் போன்ற அம்சங்களில் இது சிறப்பாக செயல்படுகிறது. இந்த கீபோர்ட் ரெட் கலர் பவர் பட்டன் உடன் வருகிறது.

இந்த புதிய ஒன்பிளஸ் கீபோர்ட் டிவைஸ் RGB கலர் சப்போர்ட் உடனும் வருகிறது என்பதை சமீபத்திய தகவல் குறிப்பிட்டுள்ளது.

இது வரும் பிப்ரவரி 7ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் நிறுவனத்தின் OnePlus Q2 Pro ஸ்மார்ட் டிவியும் கூட அறிமுகம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Keyboard With Red Power Button Getting Launch On February 7th In India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X