ஓங்கி அடிச்சாலும் இனி சத்தம் வராது.! Apple நிறுவனத்திற்கே டஃப் கொடுக்கும் OnePlus Keyboard.!

|

Oneplus நிறுவனம் இதுவரை அதன் பட்டியலில் ஏகப்பட்ட ஸ்மார்ட் கேட்ஜெட்களை (Smart gadgets) விற்பனை செய்து வருகிறது. ஆனால், முதல் முறையாக யாரும் எதிர்பார்த்திடாத விதமாக OnePlus நிறுவனம் இப்போது புதிதாக ஒரு ஸ்மார்ட் கீ-போர்டை (OnePlus Keyboard) அறிமுகம் செய்ய உள்ளது. இது பற்றிய சில லீக் தகவல்களை நிறுவனமே சமீபத்தில் அதன் ட்விட்டர் வழியாக வெளியிட்டுள்ளது.

ஒன்பிளஸ் நிறுவனம் அறிமுகம் செய்யப்போகும் இந்த புதிய கீபோர்ட்டில் என்ன அம்சங்கள் உள்ளது? இதில் நிறுவனம் புதிதாக என்ன விஷயங்களைச் செய்துள்ளது? என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம். ஒன்பிளஸ் நிறுவனம் அறிமுகம் செய்யப் போகும் இந்த கீபோர்ட் சாதனம் பார்ப்பதற்கு அப்படியே ஆப்பிள் நிறுவனத்தின் மேக் புக் கீபோர்ட் (MacBook Keyboard) போலவே உள்ளது.

ஓங்கி அடிச்சாலும் இனி சத்தம் வராது.! புது OnePlus Keyboard ரெடி.!

ஆனால், இந்த கீபோர்ட் மைக்ரோசாப்ட் விண்டோஸ் OS (Microsoft Windows) இல் இயங்கும் கணினிகளுடன் இயங்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. ஒன்பிளஸ் நிறுவனம் அறிமுகம் செய்யும் இந்த புதிய கீபோர்ட் சாதனத்தில் இருக்கும் மிகப்பெரிய சிறப்பே, இந்த கீபோர்டை நீங்கள் கஸ்டமைஸ் (Customise) செய்து கொள்ளலாம் என்பது தான்.!

இதுவரை ஸ்மார்ட்போன், இயர்போன், ஹெட்போன், ஸ்மார்ட் டிவி என்று பலதரப்பட்ட சாதனங்களை உருவாக்கி வந்த நிறுவனம் திடீரென கீபோர்டை உருவாக்கி களமிறங்கியது ஏன் என்பது தெளிவாக தெரியவில்லை. இருப்பினும் கேமிங் சந்தையில் (Gaming Market) கீபோர்டுக்கு என்று பெரிய வியாபாரம் இருப்பதினால் நிறுவனம் இதில் கலந்து இருப்பது போல் தெரிகிறது.

ஓங்கி அடிச்சாலும் இனி சத்தம் வராது.! புது OnePlus Keyboard ரெடி.!

ஒன்பிளஸ் நிறுவனத்துடன் கீக்ரான் (Keychron) என்ற கீபோர்ட் நிறுவனம் இணைந்து தான் இந்த புதிய கீபோர்ட் சாதனத்தை உருவாக்கியுள்ளது. இந்த புதிய கீபோர்ட் சாதனத்தில் டபுள் கேஸ்கெட் டிசைன் (double gasket design) வழங்கப்பட்டுள்ளது. இதனால் நீங்கள் டைப் செய்யும் போது, பொதுவாக ஏற்படும் டைப்பிங் சத்தங்கள் போல இதில் எதுவும் ஏற்படாது என்பதை நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த புதிய OnePlus Keyboard சாதனம் அலுமினியம் பாடியுடன் மிகவும் லேசான லைட் வெயிட்டில் உருவாக்கப்பட்டுள்ளது என்று நிறுவனம் கூறியுள்ளது. இந்த புதிய கீபோர்ட் சாதனம் மேக் (Mac), விண்டோஸ் (Windows) மற்றும் லினக்ஸ் (Linux) போன்ற பதிப்புகளுடன் சிறப்பாக செயல்படும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த புதிய சாதனம் பற்றி ஒன்பிளஸ் நிறுவனம் வியாழன் அன்று தனது twitter பக்கத்தில் புதிய பதிவை பதிவிட்டு உறுதி செய்துள்ளது.

ஓங்கி அடிச்சாலும் இனி சத்தம் வராது.! புது OnePlus Keyboard ரெடி.!

நாங்கள் முன்பே சொன்னது போல, இந்த கீபோர்ட் சாதனம் கஸ்டமைசபில் ஃப்யூச்சர்களுடன் (Customisable Feature Keyboard) வருகிறது. உதாரணமாக இதில் ஹாட் ஸ்வேப்டபிள் (Hot-swappable) என்ற அம்சம் வழங்கப்படுகிறது. இது உங்கள் விருப்பத்திற்கு ஏற்றார் போல குறிப்பிட்ட சில கீ சுவிட்சுகளை கஸ்டமைஸ் செய்ய அனுமதிக்கிறது. இதில் இருக்கும் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், இந்த கீ போர்டு உங்களுக்கு ஓபன் சோர்ஸ் ஃபயர் வேர் அம்சத்தையும் வழங்குகிறது. QMK மற்றும் VIA போன்ற ஓபன் சோர்ஸ் ஃபயர் போன்ற அம்சங்களில் இது சிறப்பாக செயல்படுகிறது.

ஒன்பிளஸ் நிறுவனம் எப்போதும் அதனுடைய வாடிக்கையாளர்களின் கருத்தை கேட்பதில் அதிக கவனம் செலுத்துகிறது. அதேபோல, இந்த கீபோர்டை முழுமையாக உருவாக்குவதில் நிறுவனம் அதனுடைய வாடிக்கையாளர்களின் கருத்தையும் இப்பொழுது கேட்க துவங்கியுள்ளது. இந்த புதிய கீபோர்ட் சாதனத்தின் கான்செப்ட் டிசைன் கடந்த நவம்பர் மாதம் உருவாக்கப்பட்டது.

இப்போது டிசம்பர் மாதத்தில் இந்த கீ போர்டின் பேசிக் வடிவமைப்பை நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுடன் சேர்ந்து, மறு வடிவமைப்பு செய்ய உள்ளது. இறுதியாக இந்த சாதனம் 2023 ஜனவரியில் சோதனை செய்யப்பட்டு - பிப்ரவரி மாதத்தில் OnePlus நிறுவனத்தின் முக்கிய சந்தைகளில் அறிமுகம் செய்யப்படும் என்று ஒன்பிளஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
OnePlus Keyboard Looks Similar MacBook keyboard But This Avoid Loud Typing Sounds

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X