Home
Gadgets

தர லோக்கலுக்கு இறங்கியது! OnePlus -கிட்ட இப்படி ஒரு Product யாரும் எதிர்பார்க்கல.. ஜூன் 27 மொத்தம் 5 அறிமுகம்!

ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் வருகிற ஜூன் 27 ஆம் தேதி அன்று, சீனாவில் வெளியீட்டு நிகழ்வு (Launch Event) ஒன்றை நடந்த திட்டமிட்டுள்ளது. அந்த நிகழ்வில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன், புதிய ஸ்மார்ட் வாட்ச், புதிய டேப்லெட், ஒன்பிளஸ் 3 பட்ஸ்-ன் புதிய கலர் ஆப்ஷன் என மொத்தம் 4 புதிய அறிமுகங்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்.. ஒன்பிளஸ் நிறுவனம் ஐந்தாவதாக இன்னொரு தயாரிப்பையும் அறிமுகம் செய்யவுள்ளது. இப்படி ஒரு தயாரிப்பை ஒன்பிளஸ் நிறுவனம் அறிமுகம் செய்வது - இதுவே முதல்முறை ஆகும்!

அதென்ன தயாரிப்பு? ஜூன் 27 ஆம் தேதியன்று ஒன்பிளஸ் நிறுவனம் அதன் முதல் பவர் பேங்க்-ஐ அறிமுகம் செய்யவுள்ளது. அது ஒன்பிளஸ் 100வாட் சூப்பர் பிளாஷ் சார்ஜிங் பவர் பேங்க் (OnePlus 100W Super Flash Charging Power Bank) என்று அழைக்கப்படும்.

OnePlus -கிட்ட இப்படி ஒரு Product யாரும் எதிர்பார்க்கல!

அறிமுகத்திற்கு முன்னதாகவே வரவிருக்கும் இந்த போர்ட்டபிள் பவர் பேங்கின் டிசைன் மற்றும் பிற முக்கிய விவரங்கள் சீன இ-காமர்ஸ் தளமான ஜேடி.காம் (JD.com) வழியாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி ஒன்பிளஸ் 100வாட் சூப்பர் பிளாஷ் சார்ஜிங் பவர் பேங்க் ஆனது 12000mAh திறன் கொண்டதாக இருக்கும். இது இரண்டு வண்ணங்களில் கிடைக்கும்: கிளவுட் கிரீன் மற்றும் சில்வர் விங் ஒயிட்.

ஒன்பிளஸ்-ன் இந்த பவர் பேங்க் டூயல்-டோன் பினிஷ் கொண்ட நேர்த்தியான ரெக்டாங்குலர் ஸ்லாப் வடிவமைப்பை கொண்டுள்ளது மற்றும் ஒரு யூஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் ஒரு யூஎஸ்பி-ஏ போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ளது. மேலும் மிகவும் எளிதான பயன்பாட்டிற்காக இதில் ஒரு பவர் பட்டனும் உள்ளது.

பெயர் குறிப்பிடுவது போல, ஒன்பிளஸ் 100வாட் சூப்பர் பிளாஷ் சார்ஜிங் பவர் பேங்க் ஆனது அதிகபட்சமாக 100வாட் அவுட்புட்டையும், ரீசார்ஜ் செய்வதற்கு 45வாட் இன்புட்டையும் ஆதரிக்கிறது. சுவாரசியமாக இது ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் வாட்சுகள் மற்றும் இயற்பட்களை மட்டுமின்றி லேப்டாப்களை சார்ஜ் செய்யும் திறன் கொண்டதாகவும் இருக்கும். விலை நிர்ணயம் குறித்து எந்த தகவலும் இல்லை!

அதே ஜூன் 27-ல் அறிமுகமாகும் ஒன்பிளஸ் ஏஸ் 3 ப்ரோ என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? இது 6100எம்ஏஎச் பேட்டரி உடன் வரும் முதல் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனாக இருக்கும். இதில் 100வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் இருக்கும். டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 6.78-இன்ச் 1.5கே ரெசல்யூஷன் 8டி LTPO டிஸ்பிளேவை பேக் செய்யலாம். இது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் (Snapdragon 8 Gen 3 SoC) மூலம் இயங்குமென்று கூறப்படுகிறது.

கேமராக்களை பொறுத்தவரை, ஒன்பிளஸ் ஏஸ் 3 ப்ரோ ஸ்மார்ட்போனில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் இடம்பெறலாம். அதில் 50 மெகாபிக்சல் மெயின் சென்சார், 8 மெகாபிக்சல் மற்றும் 2 மெகாபிக்சல் சென்சார்கள் பேக் செய்யப்படலாம். முன்பக்கத்தில் இது 16 மெகாபிக்சல் செல்பீ கேமராவை கொண்டிருக்கலாம்.

முன்னரே குறிப்பிட்டபடி, ஒன்பிளஸ் நிறுவனம் ஜூன் 27 வெளியீட்டு நிகழ்வில் மேலும் பல புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்யும். அதில் ஒன்பிளஸ் பேட் ப்ரோ (OnePlus Pad Pro) டேப்லெட்டும் அடங்கும். இது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப் உடன் வரும் நிறுவனத்தின் முதல் ப்ரோ டேப்லெட் ஆக இருக்கும்.

இது தவிர்த்து ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் ஆக ஒன்பிளஸ் வாட்ச் 2 (OnePlus Watch 2) மற்றும் ஒன்பிளஸ் பட்ஸ் 3 (OnePlus Buds 3) மாடலின் புதிய காக்கி கிரீன் கலர் ஆப்ஷன் (Khaki Green color) போன்றவைகளும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
OnePlus June 27 Launch Event 12000mAh Power Bank Ace 3 Pro Watch 2 Pad Pro What to Expect
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X