தூங்கி எழுந்த அம்பானிக்கு காத்திருந்த ஷாக்.. 5G தொடர்பான மேட்டரில் சைலன்ட் ஆக நுழைந்த OnePlus!
"யாராச்சும் அவனை நிறுத்த சொல்லுங்க டா!" என்று மற்ற நிறுவனங்கள் கதறும் அளவிற்கு, ஒன்பிளஸ் அதன் க்ளவுட் 11 வெளியீட்டு நிகழ்ச்சில் பல வகையான புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்தது. அந்த வரிசையில் அம்பானியை கதறவிடும் அளவிற்கு புதிய தயாரிப்பு ஒன்றும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதென்ன தயாரிப்பு? அம்பானிக்கு குடைச்சல் கொடுக்கும் அளவிற்கு ஒன்பிளஸ் அப்படி என்ன தயாரிப்பை அறிமுகம் செய்துள்ளது? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

போதும்.. போதும்.. லிஸ்ட் ரொம்ப பெருசா போகுது!
முன்னரே குறிப்பிட்டபடி. சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஒன்பிளஸ், சமீபத்தில் முடிவடைந்த க்ளவுட் 11 வெளியீட்டு நிகழ்வில், "போதும்.. போதும்.. லிஸ்ட் ரொம்ப பெருசா போகுது!" என்று கூறும் அளவிற்கு பல புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்ததது.
நினைவூட்டும் வண்ணம் இந்நிகழ்வில் இரண்டு ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் (ஒன்பிளஸ் 11, ஒன்பிளஸ் 11ஆர்), இரண்டு ஒன்பிளஸ் இயர்பட்ஸ் (ஒன்பிளஸ் பட்ஸ் 2 ப்ரோ, ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2ஆர்), 65 இன்ச் ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி, ஒன்பிளஸின் முதல் டேப்லெட் (ஒன்பிளஸ் பேட்), ஒன்பிளஸின் முதல் கீபோர்ட் (ஒன்பிளஸ் கீபோர்ட் 81 ப்ரோ) போன்றவைகள் அறிமுகமாகின.
தற்போது ஒன்பிளஸின் முதல் ரவுட்டர் அறிமுகமாகி உள்ளது!
க்ளவுட் 11 நிகழ்வு முடிந்த பிறகும் கூட, ஒன்பிளஸ் நிறுவனம் அறிமுகங்களை நிறுத்துவது போல் தெரியவில்லை. ஏனென்றால் ஒன்பிளஸ் அதன் முதல் ரவுட்டரை அறிமுகம் செய்துள்ளது!
அதுவும் சாதாரண ரவுட்டர் அல்ல, ஹப் 5ஜி ரவுட்டரை (Hub 5G Router) அறிமுகம் செய்துள்ளது. இது ஒன்பிளஸ் ஹப் 5ஜி ரவுட்டர் (OnePlus Hub 5G Router) என்று அழைக்கப்படும்.
OnePlus Hub 5G Router எப்படி அம்பானிக்கு ஆப்பு அடிக்கும்?
ஒன்பிளஸ் ஹப் 5ஜி ரவுட்டர், இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் ஹப் ரூட்டர் அல்ல. நினைவூட்டும் வண்ணம், முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ அதன் 5ஜி நெட்வொர்க் அறிமுகத்தின் போது, அதன் ஏர்ஃபைபர் ரவுட்டரையும் 'டீஸ்' செய்திருந்தது.
இருப்பினும், ஜியோவின் 5ஜி ஹப் ரவுட்டரானது (Jio AirFiber router) இன்னும் பெரிய அளவில் அறிமுகம் செய்யப்படவில்லை. எனவே ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஒன்பிளஸ் ஹப் 5ஜி ரவுட்டர், ஜியோவின் ஏர் ஃபைபர் ரவுட்டருக்கு ஒரு பெரிய தலைவலியாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்!
OnePlus Hub 5G Router-ன் விலை மற்றும் விற்பனை!
ஒன்பிளஸ் நிறுவனம் அதன் முதல் ரவுட்டரை வெறுமனே அறிமுகம் மட்டுமே செய்துள்ளது. அதாவது ஒன்பிளஸ் ஹப் 5ஜி ரவுட்டரின் சில முக்கிய அம்சங்கள் மட்டுமே பகிரப்பட்டுள்ளது; அதன் விலை விவரம் இன்னும் பகிரப்படவில்லை.
ஆனால், இது வருகிற 2023 ஜூலை மாத வாக்கில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
OnePlus Hub 5G Router-ன் முக்கிய அம்சங்கள்:
- ஒன்பிளஸின் இந்த புதிய 5ஜி ரவுட்டர், வைப்பை 6 கனெக்டிவிட்டியை ஆதரிக்கும்
- 5ஜி சிம் கார்டு உடன் மட்டுமின்றி 4ஜி சிம் கார்டுகளுடனும் இணக்கமாக இருக்கும்
- மேட்டர் ப்ரோடோகால் (Matter protocol) உடனான ஹோம் ஹப்பிற்கான (Home Hub) ஆதரவை வழங்கும்.
- இது ஹோம் மெஷ் நெட்வொர்க்கை (Home Mesh Network) உருவாக்கவும் பயன்படுத்தப்படலாம். அதாவது 2 அல்லது அதற்கு மேற்பட்ட ரவுட்டர்களை ஒரே நெட்வொர்க்குடன் இணைக்கும்.
- 5ஜி, 4ஜி மற்றும் வைஃபை நெட்வொர்க் செயல்பாட்டிற்கான எல்இடி இண்டிகேட்டர்ஸ் இடம்பெறும்.


Click it and Unblock the Notifications








