அட்டகாசமான ஒன்பிளஸ் கேமிங் ட்ரிக்கர்கள் இந்தியாவில் அறிமுகம்.. விலை இவ்வளவு தானா?

|

ஒன்பிளஸ் நிறுவனம் மார்ச் மாதத்தில் ஒன்பிளஸ் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. வெளியீட்டு நிகழ்வில் கேமிங் ட்ரிக்கர்களை டீஸ் செய்திருந்தது. இந்த நிகழ்வில் ஒன்ப்ளஸ் பிராண்ட் இதை எப்பொழுது அறிமுகம் செய்யும் என்பது பற்றிய தகவல் எதுதையும் குறிப்பிடவில்லை என்றாலும், தற்பொழுது இந்த கேமிங் ட்ரிக்கர்களை நிறுவனம் இந்தியாவில் கிடைக்கும் படி செய்துள்ளது. இருப்பினும், இந்த நேரத்தில் உலகளாவிய ரீதியில் இந்த சாதனம் வெளியிடப்படும் என்று ஒன்பிளஸ் குறிப்பிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒன்பிளஸ் கேமிங் ட்ரிக்கர்கள்

ஒன்பிளஸ் கேமிங் ட்ரிக்கர்கள்

ஒன்பிளஸ் கேமிங் ட்ரிக்கர்கள் Android மற்றும் iOS தொலைப்பேசிகளில் சிறப்பாகச் செயல்படும் படி உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 11.5 மிமீ தடிமன் குறைவாக இருக்கும் அனைத்து ஸ்மார்ட்போன் மாடல்களுக்கும் இது பொருந்தும். டிஸ்பிளே ப்ரொடெக்ஷன் மற்றும் பின் கேஸ் உடன் கூட இதை நீங்கள் கிளிப் செய்து பயன்படுத்தலாம். ஒவ்வொரு ட்ரிக்கரும் ஓம்ரான் சுவிட்சுடன் ஒரு ஷோல்டர் பொத்தானை கொண்டுள்ளது. இது பீட் லாவின் படி கிளிக் செய்வதற்குச் சிறந்த மகிழ்ச்சியான அனுபவத்தை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அட்டகாசமான டிசைன்

அட்டகாசமான டிசைன்

ஒன்பிளஸ் கேமிங் ட்ரிக்கர்கள் ஒன்றோடொன்று மாறக்கூடியவை, மேலும் தொலைப்பேசியில் நீங்கள் இதை எந்த வகையிலும் வசதியாகப் பொருத்திக்கொள்ளலாம். ஒன்பிளஸ் கேமிங் ட்ரிக்கர்கள் குறிப்பாகக் கால் ஆஃப் டூட்டி, ஃப்ரீ ஃபயர் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பிரபலமான பேட்டில் ராயல் கேம்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது என்று நிறுவனம் கூறுகிறது. டச் ரெஸ்பான்ஸ் உணர்வுடன் இயங்கும் இந்த சாதனத்தின் உதவியுடன் கேமிங்கில் இன்னும் சிறப்பாகவும், வேகமாகவும் நீங்கள் செயல்படமுடியும்.

திருட வந்த பெண்களின் வீட்டில் ஆபாச படங்கள் டவுன்லோட்.. பெண்கள் பயன்படுத்திய 'அந்த' பொருள் அபேஸ்..திருட வந்த பெண்களின் வீட்டில் ஆபாச படங்கள் டவுன்லோட்.. பெண்கள் பயன்படுத்திய 'அந்த' பொருள் அபேஸ்..

விலை இவ்வளவு தானா?

விலை இவ்வளவு தானா?

ஒவ்வொரு ட்ரிக்கர்கலின் பயன்பாடும் அவை வைக்கப்பட்டுள்ள சாதனத்தின் பக்கத்திலிருந்து சுயாதீனமாக இருக்கும், இதன் மூலம் சாதனத்தின் இடது மற்றும் வலது புறங்களில் இரண்டையும் பயன்படுத்த உங்களுக்கு அனுமதி கிடைக்கிறது. ஒன்பிளஸ் ட்ரிக்கர்கள் 37.6 X 28.8 X 25.2 மிமீ மற்றும் 22 கிராம் எடையைக் கொண்டுள்ளது. ஒன்பிளஸ் கேமிங் ட்ரிக்கர்கள் இந்தியாவில் ரூ. 1,099 விலையில் வாங்குவதற்குக் கிடைக்கிறது. தற்போது ஒன்பிளஸ் வலைத்தளம் வழியாக இவை விற்பனைக்குக் கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்பிளஸ் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்

ஒன்பிளஸ் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்

உலகளவில் இந்த சாதனம் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்த தகவலை நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒன்பிளஸ் நிறுவனம் சமீபத்தில் அதன் ஒன்பிளஸ் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ஒன்பிளஸ் 9 சீரிஸ் பிரிவின் கீழ் புதிதாக ஒன்பிளஸ் 9ஆர் என்ற மாடலை நிறுவனம் அதன் ஒன்பிளஸ் 9 மற்றும் ஒன்பிளஸ் 9 ப்ரோ மாடல்களுடன் சேர்த்து அறிமுகம் செய்துள்ளது.

Best Mobiles in India

English summary
OnePlus gaming triggers for Android and iOS now available in India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X