Home
Gadgets

ஜன.16 முதல் OnePlus ப்ரீடம் சேல் 2026.. அடிமட்ட ஆபர் விலையில் லேட்டஸ்ட் டேப்லெட், இயர்பட்ஸ்.. இதோ லிஸ்ட்!

ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனமானது 2026 ஆம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு, இந்திய வாடிக்கையாளர்களுக்கான ஒன்பிளஸ் ப்ரீடம் சேல் (OnePlus Freedom Sale) என்கிற சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது. இது வருகிற 2026 ஜனவரி 16 ஆம் தேதி அன்று தொடங்குகிறது

இந்த ஒன்பிளஸ் ப்ரீடம் சேல்-ன் போது ஒன்பிளஸ் நிறுவனத்தின் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மிட்ரேன்ஜ் ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி.. ஒன்பிளஸ் டேப்லெட்மற்றும் ஒன்பிளஸ் இயர்பட்ஸ் மாடல்கள் மீதும் விலை குறைப்புகள், வங்கி டிஸ்கவுண்ட்கள் மற்றும் ஆபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அடிமட்ட ஆபர் விலையில் லேட்டஸ்ட் OnePlus டேப்லெட், இயர்பட்ஸ்!

என்னென்ன ஆடியோ தயாரிப்புகள் மீது என்னென்ன ஆபர்? ஒன்பிளஸ் பட்ஸ் 4 டிடபுள்யூஎஸ் (OnePlus Buds 4 TWS) இயர்போன்ஸ் ரூ.5,999 க்கு பதிலாக தள்ளுபடிக்கு பிறகு ரூ.4,999 க்கு வாங்க கிடைக்கும். இதேபோல ரூ.11,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 3 (OnePlus Buds Pro 3) ரூ.9,999 க்கு வாங்க கிடைக்கும்

ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 3 (OnePlus Nord Buds 3) மாடல் ஆனது ரூ.2,299 க்கு பதிலாக ரூ.1,699 க்கு வாங்க கிடைக்கும். மேலும் ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 3 (OnePlus Buds Pro 3) மற்றும் ஒன்பிளஸ் பட்ஸ் 4 (OnePlus Buds 4) ஆகிய மாடல்கள் நோகாஸ்ட் இஎம்ஐ விருப்பங்களின் கீழும் வாங்க கிடைக்கும்.

இதற்கிடையில் ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 3 ப்ரோ (OnePlus Nord Buds 3 Pro) ரூ.2,999 க்கு பதிலாக ரூ.2,349 க்கு விற்கப்படும். மேலும் ஒன்பிளஸ் நோர்ட் பிட்ஸ் 3ஆர் (OnePlus Nord Buds 3r) ரூ.1,799 க்கு பதிலாக ரூ.1,449 க்கு வாங்க கிடைக்கும்.

ஒன்பிளஸ் புல்லட்ஸ் வயர்லெஸ் இஸட்2 ஏஎன்சி (OnePlus Bullets Wireless Z2 ANC) ரூ.2,099 க்கு பதிலாக ரூ.1,649 க்கு வாங்க கிடைக்கும். கடைசியாக ஒன்பிளஸ் புல்லட்ஸ் வயர்லெஸ் இஸட்3 (OnePlus Bullets Wireless Z3) மாடல் ஆனது ரூ.1,699 க்கு பதிலாக ரூ.1,199 க்கு வாங்க கிடைக்கும்.

டேப்லெட்கள் மீதான சலுகைகளை பொறுத்தவரை, ஒன்பிளஸ் பேட் கோ 2 (OnePlus Pad Go 2) மாடல் ஆனது ரூ.26,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்டது, ரூ.1,000 விலை குறைப்பு மற்றும் ரூ.2,000 வரை வங்கி தள்ளுபடிக்கு பிறகு ரூ.23,999 க்கு வாங்க கிடைக்கும்.

இதேபோல ரூ.47,999க்கு அறிமுகமான ஒன்பிளஸ் பேட் 3 (OnePlus Pad 3) மாடல் ஆனது ரூ.3,000 வரை வங்கி தள்ளுபடிக்கு பிறகு ரூ.44,999க்கு விற்கப்படும். இதற்கிடையில், அறிமுகப்படுத்தப்பட்டபோது ரூ. 36,999 க்கு விற்கப்பட்ட ஒன்பிளஸ் பேட் 2 (OnePlus Pad 2) மாடல் ரூ.2,000 வரை வங்கி தள்ளுபடிக்கு பிறகு ரூ. 34,999 க்கு விற்கப்படும்.

ஒன்பிளஸ் பேட் கோ (OnePlus Pad Go) மாடல் ஆனது ரூ.3,000 விலைக் குறைப்பு மற்றும் ரூ. 1,000 வரை வங்கி தள்ளுபடிக்கு பிறகு ரூ.17,999 இலிருந்து ரூ.13,999 ஆக விலை குறையும். கடைசியாக ஒன்பிளஸ் பேட் லைட் (OnePlus Pad Lite) ரூ.15,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்டது, ரூ.2,000 விலைக் குறைப்பு மற்றும் ரூ. 2,000 வரை வங்கி தள்ளுபடிக்கு பிறகு ரூ. 11,999 க்கு வாங்க கிடைக்கும்.

ஒன்பிளஸ் அறிவித்துள்ள இந்த தள்ளுபடிகள் ஒன்பிளஸ் இந்தியா (OnePlus India) வலைத்தளம், ஒன்பிளஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர்ஸ் (OnePlus Experience Stores), அமேசான் (Amazon), பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் (Reliance Digital), க்ரோமா (Croma), விஜய் சேல்ஸ் (Vijay Sales) போன்ற முக்கிய ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர்கள் வழியாக அணுக கிடைக்கும்

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Freedom Sale 2026 Starts From January 16 Discounts Announced on OnePlus Tablets Earbuds
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X