டிவிக்கு முன்னே ரீமோட் புகைப்படத்தை வெளியிட்ட ஒன்பிளஸ் நிறுவனம்.!

|

ஒன்பிளஸ் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய சாதனங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, அதன்படி இந்நிறுவனம் விரைவில் புதிய ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்நிலையில்ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி-க்கு முன்பே ஒன்பிளஸ் ரிமோட் மாடல் புகைப்படத்தை வெளயிட்டுள்ளது அந்நிறுவனம்.

ப்ரீமியம் வடிவமைப்பு மற்றும் மெட்டல் பூச்சு

இந்த ஒன்பிளஸ் ரிமோட் பார்ப்பதற்கு ஆப்பிள் ரிமோட் போலவே இருக்கிறது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ப்ரீமியம் வடிவமைப்பு மற்றும் மெட்டல் பூச்சு ஆகியவை கொண்டு வெளிவரும். ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி ரிமோட் சிறப்பம்சம் ஒன்பிளஸ் ரிமோட்டின் மேல் பக்கத்தில் ஒரு கன்ட்ரோல் பேட் உள்ளது, இது பயனர்கள் தங்கள் ஒன்பிளஸ் டிவியின் UI-க்குள் செல்ல உதவும். பின்பு கூகுள் அசிஸ்டென் வசதி, வால்யூம் கட்டுப்பாடு பொத்தான்கள், கன்ட்ரோல் பேட்டிற்கு கீழே உள்ள மற்ற பொத்தான்கள் அனைத்தும் கண்டிப்பாக பயனுள்ள வகையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ரீமோட்டில் Hamburger menu icon-ஐ கொண்ட ஒரு பொத்தானையும் காண முடிகிறது, இது மெனுக்களை அணுக உதவலாம்.

எட்டு ஸ்பீக்களை கொண்டிருக்கும்

ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி எட்டு ஸ்பீக்களை கொண்டிருக்கும் என்று தெரவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த ஸ்பீக்கர்கள் அனைத்து 50வாட்ஸ் அவுட்புட்-ஐ உருவாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த அம்சங்கள் சியோமி ஸ்மார்ட் டிவிகளில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

55' இன்ச், 64' இன்ச் மற்றும் 75' இன்ச்

வெளியாகவுள்ள மாடல்கள் ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி பற்றி வெளியாகியுள்ள தகவலின்படி, புதிய ஸ்மார்ட் டிவிகள் 43' இன்ச், 55' இன்ச், 64' இன்ச் மற்றும் 75' இன்ச் டிஸ்பிளேயுடன் வெளியிடப்படும் என்று தெரியவந்துள்ளது. ஒன்பிளஸ் நிறுவனம் 55Q1IN, 43Q2IN, 65Q2CN, 75Q2CN, மற்றும் 75Q2US என்ற மாடல் எண்களுடன் தனது ஸ்மார்ட் டிவிகளை பதிவு செய்துள்ளது என்பதும் தற்பொழுது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பூமியிலிருந்து நிலவிற்கு லிப்ட்! விண்வெளி பயணத்தை எளிதாக்க விஞ்ஞானிகள் திட்டம்.! நடக்குமா குருநாதா?

ஒன்பிளஸ் டிவி வெறும் ஸ்மார்ட் டிவி

ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவிகள், 4K HDR ஆதரவுடன் கூடிய ஒரு இன்பில்ட் ஸ்மார்ட் AI சேவையுடன் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ஒன்பிளஸ் வெளியிடப்போகும் ஸ்மார்ட் டிவி வெறும் ஸ்மார்ட் டிவி அல்ல என்பது உறுதியாகியுள்ளது.

தொல்லியல் அறிஞர்களை குழப்பத்தில் ஆழ்த்திய 1000ஆண்டு பழமையான எலும்புக்கூடு!

மீடியாடெக் செயலி:

வெளியாகும் ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவிகள் ஆனது மாலி ஜி51 ஜி.பீ.யு உடனான மீடியாடெக் எம்டி 5670எஸ்ஒசி செயலி கொண்டு இயங்கும் என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் ஸ்மார்ட்டிவி அறிமுக தேதி

அண்மையில் வெளியான தகவலின்படி, ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்டிவி செப்டம்பர் மாதம் வெளியிடப்படும் என்ற தகவல் தற்பொழுது கிடைத்துள்ளது. இன்னும் துல்லியமாகச் சொல்ல வேண்டும் என்றால் இந்த புதிய ஸ்மார்ட் டிவி வரும் செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதி முதல் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி விலை

ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவிகள் அமேசான் தளத்தில் மற்றும் அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் ரூ.40,000 முதல் ரூ.50,000 என்ற விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக இந்த ஸ்மார்ட் டிவி 5ஜி இணக்கத்துடன் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறது தகவல் வட்டாரம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
OnePlus company releases remote photo before TV: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more