ஒன்பிளஸ் சார்ஜிங் ஸ்டேஷன் அம்சம் விமான நிலையத்தில் அறிமுகம்.. எங்கே தெரியுமா?

|

ஒன்பிளஸ் நிறுவனம் தனது பயனர்களுக்காக ஒரு புத்தம் புதிய அம்சத்தை அறிமுகம் செய்யவுள்ளது, இதன்படி ஒன்பிளஸ் நிறுவனத்தின் இந்த புதிய அம்சமானது ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் உரிமையாளர்களுக்கு இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட விமான நிலையங்களில் - அருகிலுள்ள ஒன்பிளஸ் சார்ஜிங் ஸ்டேஷன் பற்றிய தகவல்களை இந்த அம்சம் தெரியப்படுத்தும்.

ஒன்பிளஸ் சார்ஜிங் ஸ்டேஷன் அம்சம் விமான நிலையத்தில் அறிமுகம்..

மேலும் இதன் முக்கிய அம்சம் என்னவென்றால், நீங்கள் ஒன்பிளஸ் சார்ஜிங் ஸ்டேஷனை எளிதாக டிராக் செய்யலாம் மற்றும் அருகாமையில் இருக்கும் ஸ்டேஷனுக்கு இடையிலான தூரத்தையும் கூட நொடியில் கண்காணிக்கலாம்.

குறிப்பாக ஒன்பிளஸ் சார்ஜிங் ஸ்டேஷன்களில் ஒருங்கிணைகப்பட்ட beacon உதவியுடன், உங்கள் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் அருகிலுள்ள சார்ஜிங் நிலையங்களை அடையாளம் காட்டுகிறது. பின்பு இது ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களை அருகிலுள்ள சார்ஜிங் ஸ்டேஷனை அடையாளம் காணவும், அது சார்ந்த அறிவிப்பை உருவாக்கவும் அனுமதிக்கிறது.

சுருக்கமாக கூற வேண்டும் என்றால் விமான நிலையங்களில் நீண்ட நிறுத்தங்களில் நீங்கள் சிக்கிக்கொள்வது போன்ற நேரங்களில், இந்த அம்சத்தினை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் ம்யூட் செய்யலாம். குறிப்பாக இந்த சேவையை 6 மணி நேரம் வரை நீங்கள் ம்யூட் செய்யலாம். தற்சமயம் இந்த சார்ஜிங் ஸ்டேஷன்கள் பெங்களூர் விமான நிலையத்தில் அணுக கிடைக்கிறது, விரைவில் டெல்லி விமான நிலையத்தில் தொடங்கப்படும் எனத் தகவல் வெளிவந்துள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
OnePlus Charging Stations feature rolling out in Bengaluru airport soon : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X