Home
Gadgets

10 நிமிட சார்ஜ்.. 27 மணி நேர பேக்கப்.. ரூ.1699-க்கு OnePlus புல்லட்ஸ் பட்ஸ்.. 3D ஸ்பாஷியல் ஆடியோ.. எந்த மாடல்?

இந்தியாவில் இருக்கும் ஒட்டுமொத்த மியூசிக் பிரியர்களையும் தட்டித்தூக்கும்படி அடிமட்ட பட்ஜெட்டில் 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 27 மணி நேரங்களுக்கு பேக்கப் கொடுக்கும்படியான பேட்டரி சிஸ்டம், 12.4எம்எம் டைனாமிக் டிரைவர்கள், சவுண்ட் மாஸ்டல் ஈகியூ, 3டி ஸ்பாஷியல் ஆடியோ, ஏஐ நாய்ஸ் கேன்சலேஷன், வாய்ஸ் அசிஸ்டன்ட், கூகுள் ஃபாஸ்ட் பேர் போன்ற பக்கா பீச்சர்களுடன் ஒன்பிளஸ் புல்லட்ஸ் வயர்லெஸ் இசட்3 (OnePlus Bullets Wireless Z3) வெளியாகி இருக்கிறது. இந்த ஒன்பிளஸ் நெக்பேண்ட் மாடலின் விவரங்கள் இதோ.

ஒன்பிளஸ் புல்லட்ஸ் வயர்லெஸ் இசட்3 அம்சங்கள் (OnePlus Bullets Wireless Z3 Specifications): இந்த புல்லட்ஸ் மாடலில் ஸ்டுடியோ குவாலிட்டி பேஸ் அவுட்புட் கொடுக்கும்படி 12.4என்எம் டைனாமிக் பேஸ் டிரைவர்கள் (Dynamic Bass Drivers) கிடைக்கின்றன. ஒன்பிளஸ் 3டி ஆடியோ (3D Audio) சப்போர்ட் கொண்ட 3டி ஸ்பாஷியல் ஆடியோ (3D Spatial Audio) கிடைக்கிறது.

10 நிமிட சார்ஜ்.. 27 மணி நேர பேக்கப்.. ரூ.1699-க்கு OnePlus புல்லட்ஸ்!

ஆகவே, 360 டிகிரி சவுண்ட் பீல்டு எதிர்பார்க்கலாம். இதன் மூலம், அல்ட்ரா-ரியாலிஸ்டிக் ஆடியோ அனுபவம் கிடைக்கும். இதுபோக சவுண்ட் மாஸ்டர் ஈகியூ (Sound Master EQ) கிடைக்கிறது. இதில் பேஸ் பூஸ்ட் கொடுக்க பேஸ்வேவ் (BassWave) சப்போர்ட் கிடைக்கிறது. அதேபோல போல்டு (Bold), பேலன்ஸ்டு (Balanced), செருனேட் (Serenade) போன்ற ஈகியூ மோட்கள் கிடைக்கின்றன.

கிரிஸ்டல் கிளியர் வாய்ஸ் கால்களுக்காக ஏஐ கால் நாய்ஸ் கேன்சலேஷன் (AI Call Noise Cancellation) கிடைக்கிறது. அதேபோல அவுட்டோர் மற்றும் நாய்ஸ் அதிகமாக இருக்கும் பகுதிகளிலும் பக்கா அவுட்புட் கொடுக்க என்விரான்மெண்டல் நாய்ஸ் கேன்சலேஷன் (Environmental Noise Cancellation) சப்போர்ட் கிடைக்கிறது. இதில் ரியல்-டைம் நாய்ஸ் கேன்சலேஷன் கிடைக்கிறது.

ஏஐ வாய்ஸ் அசிஸ்டன்ட் (AI Voice Assistant) கிடைக்கிறது. சென்டர் பட்டனை அழுத்தி பிடித்தால், இந்த வாய்ஸ் அசிஸ்டன்ட் ஆக்டிவேட் செய்யப்படும். மேக்னடிக் ஆன்/ஆஃப் (Magnetic On/Off) கிடைக்கிறது. ஆகவே, 2 பட்களிலும் மேக்னட் இருக்கும். இதை பிரித்தால் மொபைல் அல்லது மற்ற டிவைஸ்களுடன் கனெக்ட் செய்யப்படும். ஒட்டினால் டிஸ்கனெக்ட் செய்யப்படும்.

10 நிமிட சார்ஜ்.. 27 மணி நேர பேக்கப்.. ரூ.1699-க்கு OnePlus புல்லட்ஸ்!

இதுபோக கூகுள் ஃபாஸ்ட் பேர் (Google Fast Pair) கனெக்டிவிட்டி கிடைப்பதால், நொடியில் கனெக்ட் செய்து கொள்ளலாம். ஜிம், ரன்னிங், ஜாக்கிங் போன்ற ஆக்டிவிட்டிகளை செய்வோருக்கு ஏற்றபடி ஸ்வெட் மற்றும் ஸ்பிளாஷ் பாதுகாப்பு கொடுக்கும்படி IP55 ரேட்டிங் வாட்டர் & ஸ்வெட் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. கர்வ் டிசைனில் ஸ்கின் ஃப்ரென்ட்லி சிலிகான் பாடி கொடுக்கிறது.

இந்த ஒன்பிளஸ் புல்லட்ஸ் வயர்லெஸ் இசட்3 மாடலில் அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 220mAh பேட்டரி கிடைக்கிறது. இந்த ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் போதும் 27 மணி நேரங்களுக்கு பிளேபேக் பெறலாம். ஆனால், 50 சதவீத வால்யூமில் கேட்க வேண்டும். ஒரு முறை ஃபுல் சார்ஜ் செய்தால், 36 மணி நேரங்களுக்கு பேக்கப் பெற்று கொள்ளலாம்.

ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.4) கனெக்டிவிட்டி மற்றும் ஏஏசி (AAC), எஸ்பிசி (SBC) கோடெக்ஸ் சப்போர்ட் கிடைக்கிறது. இதன் மூலம் மூலம் 10 மீட்டர்கள் வரையில் ப்ளூடூத் கனெக்சன் ரேஞ்ச் கிடைக்கிறது. இந்த மாடலுக்கு யுஎஸ்பி டைப்-சி (USB Type-C) சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. மாம்போ மிட்நைட் (Mambo Midnight), சாம்பா சன்செட் (Samba Sunset) கலர்களில் கிடைக்க இருக்கிறது.

ஒன்பிளஸ் புல்லட்ஸ் வயர்லெஸ் இசட்3 இந்திய விற்பனை (OnePlus Bullets Wireless Z3 India Sale): இந்த மாடலின் மார்கெட் விலை ரூ.1,999ஆக இருக்கிறது. இருப்பினும், அறிமுக சலுகையில் ரூ.1,699 பட்ஜெட்டில் கிடைக்க இருக்கிறது. அமேசான் (Amazon), பிளிப்கார்ட் (Flipkart) மற்றும ஒன்பிளஸ் ஸ்டோர்களில் கிடைக்க இருக்கிறது. ஜூன் 24ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது.

Best Mobiles in India

English summary
OnePlus Bullets Wireless Z3 With 10 Minute For 27 Hours Playback Launched India Sale From June 24
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X