ரெண்டு 2-ஆ ஆர்டர் போடும் விலை.. 10 நிமிட சார்ஜில் 27 மணிநேர பேட்டரி.. புது காம்பினேஷனில் OnePlus நெக்பேண்ட்!
ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் அதன் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அதன் பட்ஜெட் விலை நெக்பேண்ட் ஒன்றிற்கு புதிய கலர் ஆப்ஷனை சேர்த்துள்ளது. அது ஒன்பிளஸ் புல்லட்ஸ் வயர்லெஸ் இஸட்3 (OnePlus Bullets Wireless Z3) மாடல் ஆகும்.
நினைவூட்டும் வண்ணம் இது முதன்முதலில் கடந்த ஜூன் மாதம் இந்தியாவில் அறிமுகமானது. இப்போது இது புதிய கிரிம்சன் எக்லிப்ஸ் (Crimson Eclipse) என்கிற கலர் ஆப்ஷனை பெற்றுள்ளது. நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் நிறுவனத்தின் இந்த லேட்டஸ்ட் வயர்லெஸ் நெக்பேண்ட் இயர்போன்ஸ் ஆனது ஆரம்பத்தில் இரண்டு கலர் ஆப்ஷன்களில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டன - ரெட் கலரிலான சாம்பா சன்செட் (Samba Sunset) மற்றும் பிளாக் கலரிலான ராம்போ மிட்நைட் (Mambo Midnight).

இதற்கிடையில் தற்போது புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள கலர் ஆப்ஷன் ஆனது - அடிப்படையில் முன்னதாக இருந்த 2 கலர் ஆப்ஷன்களின் கலவையாகத் தெரிகிறது. அதாவது கிரிம்சன் எக்லிப்ஸ் கலர் ஆப்ஷன் ஆனது கருப்பு நிறத்திலான இயர்பீஸ்களை கொண்டுள்ளது. அதே நேரத்தில் நெக்பேண்டை இணைக்கும் வயர் சிவப்பு நிறத்தில் உள்ளது.
புதிய கலரை தவிரத்து, முன்னதாக அறிமுகமான ஒன்பிளஸ் புல்லட்ஸ் வயர்லெஸ் இஸட்3 மாடலுக்கும் இதற்கும் அம்சங்கள் அடிப்படையில் எந்த மாறுபாடும் இல்லை. அதாவது ஏற்கனவே உள்ள ரெட் மற்றும் பிளாக் கலர் ஆப்ஷன்களில் உள்ள அதே அம்சங்கள் தான் புதிய கலர் ஆப்ஷனிலும் உள்ளது.
ஒன்பிளஸ் புல்லட்ஸ் வயர்லெஸ் இஸட்3 முக்கிய அம்சங்கள்:
- 12.4மிமீ ஆடியோ டிரைவர்
- 3டி ஸ்பேஷியல் ஆடியோ
- மேம்பட்ட கால் தரத்திற்கான AI அடிப்படையிலான ENC
- ப்ளூடூத் 5.4 ஆதரவு
- 36 மணிநேர ஆடியோ பிளேபேக்கை வழங்கும் 220mAh பேட்டரி
- 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் சுமார் 27 மணிநேர பேட்டரி லைஃப்
- சருமத்திற்கு ஏற்ற சிலிக்கான் பாடி
- நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான IP55 ரேட்டிங்
- கூகுள் ஃபாஸ்ட் பேர் ஆதரவு
- நெக்பேண்ட் இயர்போன்களை ஆன் மற்றும் ஆஃப் செய்யும் மேக்னட்டிக் டிப்ஸ்
ஒன்பிளஸ் புல்லட்ஸ் வயர்லெஸ் இஸட்3 விலை: இந்திய சந்தையில் இது ரூ.1,399 க்கு வாங்க கிடைக்கிறது. ஒன்பிளஸ் நிறுவனத்தின் இந்த நெக்பேண்ட் இயர்போன்ஸ் ஆனது ஒன்பிளஸ் பிராண்டின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான அமேசான் இந்தியா (Amazon India) மற்றும் பிளிப்கார்ட் (Flipkart) வழியாக வாங்க கிடைக்கிறது
ஒன்பிளஸ் 15 இந்திய அறிமுகம்: ஒன்பிளஸ் நிறுவனம் அதன் ஒன்பிளஸ் 15 (OnePlus 15) ஸ்மார்ட்போனை வருகிற நவம்பர் 13 ஆம் தேதியன்று இந்திய சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளது. இது ஏற்கனவே சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டதால், அம்சங்கள் அடிப்படையில் எந்த குழப்பமும் இல்லை. இது இந்தியாவில் என்ன விலைக்கு அறிமுகமாகும் என்பது மட்டுமே தெரிய வேண்டும்.
ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? சீனாவில் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.50,000 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இதன் விலை ரூ.65,000 - ரூ.75,000 க்குள் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications