ஒன்பிளஸ் புல்லட்ஸ் வயர்லெஸ் இயர்போன்கள்: 8 மணிநேர பேட்டரி திறன் கொண்டது.!

வெறும் 10 நிமிடங்கள் மட்டும் சார்ஜிங் செய்து, 5 மணிநேரம் வரை பயன்படுத்த முடிகிறது.

|

முன்னணி தயாரிப்பான ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போன் உடன் ஒன்பிளஸ் புல்லட்ஸ் வயர்லெஸ் இயர்போன்களை ஒன்பிளஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. சந்தையில் மிகவும் பிரபலமடைந்த ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பேட்ஸிற்கு அடுத்தப்படியாக, வயர்லெஸ் இயர்போன்களை சந்தையில் அறிமுகப்படுத்தும் புதிய முயற்சியில் ஒன்பிளஸ் நிறுவனம் களமிறங்கி உள்ளது.

ஒன்பிளஸ் புல்லட்ஸ் வயர்லெஸ் இயர்போன்கள் அறிமுகம்.!

ஆப்பிள் வழங்கும் இயர்போன்களைப் போல இல்லாமல், இந்த புல்லட்ஸ் வயர்லெஸ் இயர்போன்களில், இடது மற்றும் வலதுபக்கத்தில் உள்ள இயர்பட்ஸ்களை இணைக்கக் கூடிய ஒரு வயர் அளிக்கப்பட்டு, கழுத்தில் அணியும் பேண்டு போல காட்சி அளிக்கிறது. இந்த இயர்போன்களில் டேஸ் சார்ஜ் விரைவு சார்ஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதால், வெறும் 10 நிமிடங்கள் மட்டும் சார்ஜிங் செய்து, 5 மணிநேரம் வரை பயன்படுத்த முடிகிறது. முழுமையாக சார்ஜ் செய்யும் போது, மொத்தம் 8 மணிநேரம் வரை பேட்டரி திறனை கொண்டு செயல்படுகிறது.

ஒன்பிளஸ் புல்லட்ஸ் வயர்லெஸ் தயாரிப்பின் விலை மற்றும் அறிமுகத் தேதி
ஒன்பிளஸ் புல்லட்ஸ் வயர்லெஸ் இயர்போன்கள் $69 (ஏறக்குறைய ரூ.4,700), ஜிபிபி 69 (ஏறக்குறைய ரூ.6,300) மற்றும் இயூஆர் 69 (ஏறக்குறைய ரூ.5,500) என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் (ஜுன்) 5 ஆம் தேதியில் இருந்து சந்தையில் கிடைக்கும். இந்திய சந்தையில் ஒன்பிளஸ் புல்லட்ஸ் வயர்லெஸின் விலை, இதுவரை வெளியிடப்படவில்லை. மும்பையில் நடைபெற உள்ள ஒன்பிளஸ் 6 தயாரிப்பின் வெளியீட்டு நிகழ்ச்சியில், இதன் விலை அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்பிளஸ் புல்லட்ஸ் வயர்லெஸின் விவரக் குறிப்புகள் மற்றும் அம்சங்கள்
ப்ளூடூத் வி4.1 இணைப்பை பயன்படுத்தும் ஒன்பிளஸ் புல்லட்ஸ் வயர்லெஸ் இயர்போன்கள், குவால்காம் ஏபிடிஎக்ஸ் தொழில்நுட்பத்தை ஆதரித்து, ஒரு ப்ளூடூத் இணைப்பை பயன்படுத்தி உயர்தர ஆடியோவை அளிக்கிறது. இதன் வழியாக செல்லும் ஒலியை தெளிவாகவும் நிலைத்தன்மை கொண்டதாகவும் அளிக்கும் வகையில், 9.2மிமீ டிரைவர்கள் மற்றும் இந்நிறுவனத்தின் இனர்ஜி டியூப் தொழில்நுட்பம் ஆகியவற்றை பயன்படுத்துகிறது. உலோகத் தாது இல்லாத மற்றும் சிலிக்கா ஜெல் மூலம் உருவாக்கப்பட்ட இந்த இனர்ஜி டியூப்கள், அதிர்வெண் திசை திரும்புதல் மற்றும் சத்த உருவாக்கத்தை தவிர்க்கிறது.

இந்த புல்லட்ஸ் வயர்லெஸ் இயர்போன்களில் காந்தத் தன்மை கொண்ட சுவிட்ச்சுகள் காணப்படுகின்றன. மற்ற அம்சங்களுக்கு இடையே இடம்பெறும் இவை, இரு இயர்பட்ஸையும் ஒருங்கிணைத்து ஒலிக்க செய்வதை நிறுத்த பயனர்களுக்கு உதவுகிறது. அதன்பிறகு காந்த முறையில் மீண்டும் இணைந்து கொள்கின்றன. இதன்மூலம் இதை மீண்டும் ஒலிக்க செய்யலாம் என்பதோடு இணைக்கப்பட்ட இயர்பட்ஸை எளிதாக பிரித்துவிட்டு, பயனருக்கு வரும் அழைப்புகளை எடுத்து பேசலாம். இது தவிர, ஒரு இன்-லைன் ரிமோட் கன்ட்ரோலையும் கொண்டுள்ளது. இதன் நெக் பேண்டில், ஆற்றல் மற்றும் இணைப்பிற்கான ஒரு பொத்தானும், டேஸ் சார்ஜ் செய்வதற்கான உள்ளீடு ஆகியவை அளிக்கப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் புல்லட்ஸ் வயர்லெஸ் இயர்போன்கள் அறிமுகம்.!

ஏற்கனவே நாங்கள் குறிப்பிட்டது போல, ஒன்பிளஸ் புல்லட்ஸ் வயர்லெஸ் 8 மணிநேர பேட்டரி திறன் கொண்டுள்ளது. மேலும் டேஸ் சார்ஜ் தொழில்நுட்பம் இருப்பதால், வெறும் 10 நிமிடங்கள் சார்ஜ் செய்து 5 மணிநேரம் வரை இயக்க முடிகிறது. இது குறித்து நிறுவனம் கூறுகையில், இந்த புல்லட்ஸ் வயர்லெஸில் டேஸ் சார்ஜ் தொழில்நுட்பம் அளிக்கப்பட்டுள்ளதன் மூலம் இயர்போன்களை விரைவாக சார்ஜ் செய்யக் கூடிய ஏதாவது இணக்கமான யூஎஸ்பி வகை-சி அடாப்டரை பயன்படுத்த முடியும். மேலும் கூகுள் அசிஸ்டெண்ட்டின் ஆதரவை பெறும் இந்த இயர்போன்கள், வாய்ஸ் அசிஸ்டெண்ட் வசதியை அளிக்கிறது.


இந்த ஒன்பிளஸ் புல்லட்ஸ் வயர்லெஸ் இயர்போன்களில் உள்ள நீர்ம சிலிக்கான மூலம் நினைவக அலாய் இயர்பட்ஸ் அம்சத்தை கொண்டுள்ளது. பயனர் விரும்பும் தன்மைகளைக் கொண்ட இயர்போன்களாக மாற்றுவதற்கான யோசனைகள் மற்றும் வழிகளை நிறுவனம் அளித்துள்ளது. மேலும் காலநிலை பிரச்சனை எதிர்கொள்ளும் திறனை இது கொண்டுள்ளதாக, இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
OnePlus Bullets Wireless Earphones With 8-Hour Battery Life Launched: Price, Specifications ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X