OnePlus முதல் முறையாக வெளியிடும் ட்ரூலி வயர்லெஸ் இயர்பட்ஸின் பெயர் என்ன தெரியுமா?
ஒன்பிளஸ் நிறுவனம் வரும் ஜூலை 21ம் தேதி தனது புதிய ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஒன்பிளஸ் நிறுவனம் முதல் முறையாக அதன் ட்ரூலி வயர்லெஸ் இயர்பட்ஸ் சாதனத்தை அறிமுகம் செய்யவுள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஒன்பிளஸ் நிறுவனம் ஜூலை 21 ஆம் தேதி தனது முதல் ட்ரூலி வயர்லெஸ் இயர்பட்ஸை அறிமுகப்படுத்தவுள்ளது என்பதை ஒன்பிளஸ் உறுதிப்படுத்தியுள்ளது. இது ட்ரூலி வயர்லெஸ் இயர்பட்ஸ் பற்றி ஒன்பிளஸிடமிருந்து வரும் முதல் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் ஆகும். மேலும் இது ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போனுடன் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய ட்ரூலி வயர்லெஸ் இயர்பட்ஸ்கள் 'ஒன்பிளஸ் பட்ஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த புதிய ட்ரூலி வயர்லெஸ் இயர்பட்ஸ் பற்றிய விபரங்களை இன்னும் ஒன்பிளஸ் வெளியிடவில்லை. இதில் நாய்ஸ் கேன்சலேஷன் உள்ளதா, எந்த வகையான பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது, இதன் விலை என்ன என்ற கேள்விகளுக்கு இன்னும் சரியான பதில் கிடைக்கவில்லை.

இந்த புதிய ஒன்பிளஸ் பட்ஸ் என்ன சிறப்பம்சங்களுடன் வெளிவரும் என்பது இன்னும் புதிராக இருக்கிறது. இதுவரை இந்த சாதனத்தைப் பற்றி எந்தவித லீக் தகவல்கள் கூட வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒன்பிளஸ் நிறுவனம் 'ஒன்பிளஸ் பட்ஸ்' என்ற பெயரை குறிப்பிட்டு, இப்போது உங்களுக்கு பெயர் தெரியும், எங்களுடைய முதல் ட்ரூலி வயர்லெஸ் இயர்பட்ஸ்களை ஜூலை 21ம் தேதி பாருங்கள் என்று #OnePlusBuds உடன் ட்விட்டரில் ஒன்பிளஸ் கூறியுள்ளது.

இந்த புதிய ஒன்பிளஸ் பட்ஸ், ட்ரூலி வயர்லெஸ் இயர்பட்ஸ் வடிவமைப்பு ஆப்பிள் ஏர்போட்களுக்கு நெருக்கமான தோற்றத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் இயர்போன்களை உருவாக்குவது இதுவே முதல் முறை அல்ல, ஏனெனில் ஒன்பிளஸ் வயர்லெஸ் இயர்போன்களின் திடமான சீரிஸ் மாடல்களை கொண்டுள்ளது. ஒன்பிளஸ் புல்லட் வயர்லெஸ் இசட் (ரூ. 1,999), ஒன்பிளஸ் புல்லட் வயர்லெஸ் 2 (ரூ .4,490) மற்றும் ஒன்பிளஸ் புல்லட் வயர்லெஸ் (ரூ. 2,999) ஆகியவை இதில் அடங்கும்.

அனைவரின் கண்களும் ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போனில் உள்ளது, இந்த ஸ்மார்ட்போன் உண்மையிலேயே மிக மலிவான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்போன், 6 ஜிபி ரேம் கொண்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 ஜி சிப்செட் உடன், 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய 6.55' இன்ச் டிஸ்ப்ளே மற்றும் 48 மெகாபிக்சல் கேமரா தலைமையிலான குவாட் கேமரா அமைப்பு மூலம் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications