61 கிராமில் 43 மணிநேர பேட்டரி லைஃப்.. OnePlus Buds Pro 3 அறிமுகம்.. என்ன விலை? எப்போது முதல் விற்பனை?
ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனத்தின் லேட்டஸ்ட் பிளாக்ஷிப் இயர்பட்ஸ் ஆக ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 3 (OnePlus Buds Pro 3) இன்று இந்தியாவில் அறிமுகமானது. ஒன்பிளஸின் இந்த புதிய ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ (TWS) இயர்பட்ஸ் ஆனது சிலிகான் டிப்ஸ் மற்றும் கூழாங்கல் வடிவிலான, லெதர் பேட்டர்ன் உடனான பிளாஸ்டிக் சார்ஜிங் கேஸ் (Charging Case) உடன் வருகிறது. ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 3 வேறு என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளது? என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது? எப்போது முதல் வாங்க கிடைக்கும்? இதோ விவரங்கள்:
ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 3 இயர்பட்ஸின் சிறப்பம்சங்கள்: இது 11 மிமீ வூஃபர் மற்றும் 6 மிமீ ட்வீட்டர் (11mm woofer and a 6mm tweeter) என்கிற டூயல் டிரைவர் செட்டப்பை (Dual driver setup) கொண்டுள்ளது. மேலும் இதன் ஒவ்வொரு பட்ஸும் பிரத்யேக டூயல் டிஜிட்டல் டூ அனலாக் கன்வெர்ட்டரையும் (Dual digital to analogue converter -DAC) கொண்டுள்ளது.

மேலும் இந்த இயர்பட்ஸ் 50dB வரையிலான ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (Active noise cancellation - ANC), ப்ளூடூத் 5.4 வழியிலான டூயல் டிவைஸ் கனெக்டிவிட்டி (dual-device connectivity) மற்றும் LHDC 5.0 ஆடியோ கோடெக்கிற்கான ஆதரவு போன்றவைகளையும் கொண்டுள்ளது. ஒன்பிளஸின் கூற்றுப்படி, இந்த இயர்பட்ஸின் பேட்டரி லைஃப் ஆனது சார்ஜிங் கேஸ் உடன் சேர்த்து மொத்தம் 43 மணிநேரம் ஆகும்!
ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 3 இயர்பட்ஸின் விரிவான அம்சங்கள்: முன்னரே குறிப்பிட்டபடி இது டூய ல் ட்ரைவர் செட்டப்பை கொண்டுள்ளது. இது டூயல் டிஏசிகளுடன் இணைக்கப்பட்டுள்ளன, ஒவ்வொரு ட்ரைவருக்கும் ஒரு டிஏசி அர்ப்பணிக்கப்பட்டுள்ளதாக ஒன்பிளஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது இயர்போன்களின் சவுண்ட் குவாலிட்டியை மேம்படுத்துவதாக கூறப்படுகிறது.
மேலும் ஒன்பிளஸின் கூற்றுப்படி, பட்ஸ் ப்ரோ 3 இயர்பட்ஸ் ஆனது மைல்ட், மாடரேட் மற்றும் மேக்ஸ் மோட்களுடன் 50dB ஏஎன்சி வரையிலான ஆதரவை வழங்குகிறது. கூடுதலாக ஸ்மார்ட் ஏஎன்சி மோட்-ஐயும் கொண்டுள்ளது. இது சுற்றுப்புற ஒலி அளவை பொறுத்து ஏஎன்சி-யின் அளவை தானாக தேர்ந்தெடுக்கும்.
ஒன்பிளஸ் அல்லாத ஸ்மார்ட்போன்களில் உள்ள ஹேமெலடி(HeyMelody) ஆப் உடன் இணக்கமானதாக இருக்கும். இதென்கீழ் ஏஎன்சி மோட்கள், ஈக்வலைஸர் செட்டிங்ஸ், டச் கண்ட்ரோல் மற்றும் பலவற்றை நிர்வகிக்க முடியும். ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 3 ஆனது அதன் முன்னோடியான ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 மற்றும் ஒப்போ என்கோ எக்ஸ்2 மாடல்களை போலவே டேனிஷ் லவுட்ஸ்பீக்கர் தயாரிப்பாளரான டைனோடியோவால் (Dynaudio) ட்யூன் செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 3 ஆனது ப்ளூடூத் 5.4 மூலம் டூயல் டிவைஸ் கண்கெடிவிட்டிக்கான ஆதரவுடன் 90எம்எஸ் லோ லேட்டன்சி கேம் மோட்-ஐயும் கொண்டுள்ளது. கூகுள் பாஸ்ட் பேர்-ஐ (Google Fast Pair) பயன்படுத்தியும் இதை லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுடன் இணைக்கலாம்; இது SBC, AAC மற்றும் LHDC 5.0 ஆடியோ கோடெக்குகளையும் ஆதரிக்கிறது.
ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 3 மாடலின் இயர்பட்ஸ்கள் ஆனது அதன் சார்ஜிங் கேஸைப் போலல்லாமல், தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான ஐபி55 ரேட்டிங்கை கொண்டுள்ளன. முன்னரே குறிப்பிட்டபடி இது மொத்தம் 43 மணிநேர பேட்டரி லைஃப்பை வழங்கும். அதே நேரத்தில் இந்த இயர்பட்ஸை ஒரு முறை சார்ஜ் செய்தால் 10 மணிநேரம் வரையிலான பிளேபேக் டைமும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
இதன் சார்ஜிங் கேஸில் சார்ஜ் செய்வதற்கான யூஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளது. அதே சமயம் இது வயர்லெஸ் சார்ஜிங்கையும் ஆதரிக்கிறது. 10 நிமிட பாஸ்ட் சார்ஜில் இது 5.5 மணிநேரம் வரையிலான பிளேபேக்கை வழங்குவதாக கூறப்படுகிறது. அளவீடுகளை பொறுத்தவரை, ஒரு இயர்போனின் எடை 5.28 கிராம் உள்ளது. பிளாஸ்டிக் யூனிபாடி கேஸுடன் சேர்த்து மொத்தமாக 61.38 கிராம் உள்ளது.
ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 3 இயர்பட்ஸ் விலை மற்றும் விற்பனை விவரங்கள்: இந்தியாவில் இது ரூ.11,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது லூனார் ரேடியன்ஸ் மற்றும் மிட்நைட் ஓபஸ் என்கிற 2 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும். இது ஒன்பிளஸ் இந்தியா இணையதளம் மற்றும் பிற ஆன்லைன் மற்றும் ரீடெயில் சேனல்களின் வழியாக ஆகஸ்ட் 23 ஆம் தேதி முதல்விற்பனைக்கு வரும்.


Click it and Unblock the Notifications








