Home
Gadgets

OnePlus Buds Pro 3 ஒட்டுமொத்த மார்க்கெட்டையும் ஓடவிடும் விலை.. 11mm வூஃபர், 43 மணிநேர Playback, IP55 ரேட்டிங்!

ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் அதன் ஒன்பிளஸ் ஓப்பன் அபெக்ஸ் எடிஷன் (OnePlus Open Apex Edition) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்து சில நாட்களே ஆகின்ற நிலையில்.. அதன் லேட்டஸ்ட் ஆடியோ ப்ராடெக்ட் ஒன்றையும் அடுத்த சில நாட்களில் அறிமுகம் செய்யவுள்ளது. அது ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 3 (OnePlus Buds Pro 3) இயர்பட்ஸ் ஆகும். இது சரியாக எப்போது (தேதி மற்றும் நேரம்) அறிமுகமாகும்? இந்தியாவில் என்ன விலைக்கு வரும்? என்னென்ன முக்கிய அம்சங்களை பேக் செய்யும்? இதோ விவரங்கள்:

ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 3 வெளியீட்டு தேதி மற்றும் நேரம்: ஒன்பிளஸ் நிறுவனத்தின் இந்த பிளாக்ஷிப் டிடபுள்யூஎஸ் (Flagship TWS) ஆனது வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி மாடல் 06.30 மணிக்கு இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதுகுறித்த டீஸரில் ஆரஞ்சு நிற பேக்கிரவுண்ட்தில் ஓவல் வடிவ கேஸை பார்க்க முடிகிறது. ஆக ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 3 ஆனது ஆரஞ்சு கலர் ஆப்ஷனிலும் வரும் என்பதை யூகிக்க முடிகிறது.

OnePlus Buds Pro 3 ஒட்டுமொத்த மார்க்கெட்டையும் ஓடவிடும் விலை!

மேலும் இது வேகன் ஸ்கின் லெதர் பினிஷ் உடன் அறிமுகமாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்பிளஸ் நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ சேனல்கள் வழியாக ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 3-ன் அம்சங்கள் அல்லது விலையை பகிரவில்லை என்றாலும் கூட, நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான யோகேஷ் பிரார், அது குறித்த விவரங்களை லீக் செய்துள்ளார்.

ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 3-ல் என்னென்ன அம்சங்கள் இடம்பெறலாம்? இது 11mm வூஃபர் மற்றும் 6mm ட்வீட்டரை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது லோ லேடன்சி ஹை டெஃபினிஷன் ஆடியோ கோடெக் (LHDC) 5.0 மற்றும் 50dB வரை நாய்ஸ் கேன்சலேஷன் சப்போர்ட், TWS Dynaudio EQ போன்ற அம்சங்களை பேக் செய்யலாம்.

மேலும் இது IP55 ரேட்டிங், ப்ளூடூத் 5.4, 94எம்எஸ் லோ லேடன்சி, டூயல் கனெக்டிவிட்டி போன்ற அம்சங்களையும் கொண்டிருக்கும். கடைசியாக ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 3 ஆனது 43 மணிநேர பிளேபேக் டைம் மற்றும் 10 நிமிட சார்ஜில் 5 மணிநேரம் மியூசிக்கை வழங்கும் என்றும் கூறப்படுகிறது.

ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 3 என்ன விலைக்கு இந்தியாவில் அறிமுகமாகும்? இந்த இயர்பட்ஸின் பாக்ஸ் ப்ரைஸ் ரூ.13,999 ஆக இருக்கலாம். அதாவது இந்த லேட்டஸ்ட் பட்ஸின் விலை அதன் முன்னோடியான ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 மாடலை போலவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நினைவூட்டும் வண்ணம் இது கடந்த ஆண்டு ரூ.11,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 3 ஆனது மிட்நைட் ஓபஸ் மற்றும் லூனார் ரேடியன்ஸ் என்கிற 2 கலர்களில் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது, இருப்பினும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு நடக்கும் வெளியீட்டு நிகழ்விற்கு பின்னரே ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 3-ன் சரியான கலர் ஆப்ஷன்ஸ், விலை, அம்சங்கள் மற்றும் விற்பனை விவரங்கள் தெரியவரும். அதுவரையிலாக நமக்கு கிடைக்கும் எல்லா வகையான தகவல்களையும் மேலோட்டமாக எடுத்துக்கொள்வதே நல்லது.

முன்னதாக அறிமுகமான ஒன்பிளஸ் ஓப்பன் அபெக்ஸ் எடிஷன் ஸ்மார்ட்போனின் இந்திய விலை நிர்ணயம் என்ன? இது சிங்கிள் 16ஜிபி ரேம் + 1டிபி ஸ்டோரேஜின் கீழ் ரூ.1,49,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒப்பிடுகையில் ஸ்டாண்டர்ட் ஒன்பிளஸ் ஓப்பன் ஸ்மார்ட்போன் ஆனது கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில்.. 16ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் உடன் ரூ.1,39,999 க்கு அறிமுகமானது. இது எமரால்டு டஸ்க் மற்றும் வாயேஜர் பிளாக் கலர்களில் வாங்க கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Buds Pro 3 Launch Date in India August 20 Expected Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X