புதுசா ஒரு 5G ஸ்மார்ட்போன் வாங்குற விலையில் OnePlus Buds Pro 3 இயர்பட்ஸ்.. ஆனாலும் 200% வொர்த்து வர்மா!
ஒன்பிளஸ் ஓப்பன் அபெக்ஸ் எடிஷன் (OnePlus Open Apex Edition), ஒன்பிளஸ் நோர்ட் 4 (OnePlus Nord 4) மற்றும் ஒன்பிளஸ் பேட் 2 (OnePlus Pad 2) ஆகிய புதிய தயாரிப்புகளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்த கையோடு, ஒன்பிளஸ் நிறுவனமானது இன்று மாலை இன்னொரு வெளியீட்டு நிகழ்வை நடத்துகிறது. இந்நிகழ்வின் போது ஒன்பிளஸ் நிருவத்தின் மற்றொரு பிளாக்ஷிப் தயாரிப்பு அறிமுகம் செய்யப்பட உள்ளது. அது ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 3 இயர்பட்ஸ் (OnePlus Buds Pro 3 Earbuds) ஆகும்.
இது 2024 ஆம் ஆண்டில் வெளியாகும் மிகவும் முக்கியமான டாப்-ஆஃப்-தி-லைன் ட்ரூ வயர்லெஸ் இயர்போன்களாக (Top-of-the-line truly wireless earphone) கருதப்படுகிறது. ஏனென்றால் இது டூயல் ட்ரைவர் அமைப்புடன் (Dual driver setup) வரும் அதே வேளையில் பழைய மாடலின் (அதாவது ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2) விலைக்குறியை தக்கவைத்துக்கொள்ளும் என்றும், இதற்கு முன் வந்த மாடல்களை விட பலவகையான மேம்படுத்தல்களை (Upgrades) பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 3 வெளியீட்டு நிகழ்வை லைவ் ஸ்ட்ரீம் செய்வது எப்படி? ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 3-க்கான மெய்நிகர் வெளியீட்டு நிகழ்வானது (Virtual Launch Event) இன்று மாலை 6:30 மணிக்கு தொடங்கும். இந்தியாவில் உள்ளவர்கள் இந்த வெளியீட்டு நிகழ்வின் நேரடி ஒளிபரப்பை (Live Streaming) ஒன்பிளஸ் இந்தியா யூட்யூப் சேனலின் (OnePlus India YouTube Channel) வழியாக பார்க்கலாம்.
ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 3 என்னென்னெ அம்சங்களை கொண்டிருக்கும் ? ஒன்பிளஸ் நிறுவனத்தின் இந்த புதிய இயர்பட்ஸ் ஆனது LHDC 5.0 கோடெக்கிற்கான ஆதரவுடன் 11mm வூஃபர் மற்றும் 6mm ட்வீட்டர் உள்ளிட்ட டூயல் ட்ரைவர் அமைப்பை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த இயர்பட்ஸ் ஆனது 50dB நாய்ஸ் கேன்சலேஷன் உடன் வரும் என்றும் கூறப்படுகிறது.
இதன் மூலம் ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 3 மாடலால் அதன் "முன்னோடிகளை" விட இரண்டு மடங்கு தெளிவான உரையாடல்கள் மற்றும் வாய்ஸ் கால்களை (Clear conversations and voice calls) வழங்க முடியும். கூடுதலாக, இது கேஸுடன் சேர்த்து 43 மணிநேர பேட்டரி லைஃப்பை ( 43 hours of battery life with the case) வழங்குவதாகவும் கூறப்படுகிறது. இது ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 மாடலை விட 4 மணிநேரம் அதிகமாகும். மேலும் ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 3-வை 10 நிமிடங்கள் சார்ஜ் செய்வதன் மூலம் 5 மணிநேர மியூசிக் பிளேபேக் (5 hours of music playback) கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
கூடுதலாக ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 3 ஆனது ஐபி55 ஸ்பிளாஷ் மற்றும் தூசி எதிர்ப்பை (IP55 splash and dust resistance) கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதாவது இது தூசி, வியர்வை மற்றும் லேசான மழையை எளிதில் தாக்குப்பிடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒன்பிளஸின் இந்த புதிய இயர்பட்ஸ் ப்ளூடூத் வெர்ஷன் 5.4-ஐ (Bluetooth version 5.4) ஆதரிப்பதாக நம்பப்படுகிறது, இது 94 மில்லி விநாடிகளில் அல்ட்ரா-லோ லேட்டன்சி ஆடியோவை (Low latency audio at just 94 milliseconds) வழங்கும் திறன் கொண்டது.
ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 3 இந்தியாவில் என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படும்? மிகவும் நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான யோகேஷ் ப்ராரின் (Tipster Yogesh Brar) கூற்றுப்படி, ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 3 மாடலின் பாக்ஸ் ப்ரைஸ் ரூ.13,999 ஆகும். இருப்பினும் இது கடந்த ஆண்டு அறிமுகமான ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2-ன் விலையில் விற்பனை செய்யப்படலாம். நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 (OnePlus Buds 2 Pro) இந்தியாவில் ரூ.11,999 க்கு அறிமுகமானது.


Click it and Unblock the Notifications








