தனித்துவமான அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகமான ஒன்பிளஸ் பட்ஸ் 2 ப்ரோ.!
ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போன்கள், டேப்லெட், 65-இன்ச் ஸ்மார்ட் டிவி, கீபோர்ட் உள்ளிட்ட சாதனங்களுடன் Oneplus Buds Pro 2 மாடலையும் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய இயர்பட்ஸ் மாடல் தனித்துவமான அம்சங்கள் மற்றும் சிறந்த வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் ஆப்பிள் நிறுவனத்தின் இயர்போன் சாதனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் இந்த ஒன்பிளஸ் பட்ஸ் 2 ப்ரோ மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இப்போது ஒன்பிளஸ் பட்ஸ் 2 ப்ரோ மாடலின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஒன்பிளஸ் பட்ஸ் 2 ப்ரோ அம்சங்கள்
அதாவது ஒன்பிளஸ் பட்ஸ் 2 ப்ரோ மாடலில் Dynaudio நிறுவனத்தின் Melody Boost dual Driver சிஸ்டம் உள்ளது. குறிப்பாக இந்த ஒன்பிளஸ் பட்ஸ் 2 ப்ரோ பயனர்களுக்குத் தனி ஆடியோ அனுபவத்தை வழங்கும் என்றே கூறலாம். பின்பு இந்த புதிய இயர்பட்ஸ் 39 மணி நேரம் பிளேபேக் வழங்கும் என்று ஒன்பிளஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒன்பிளஸ் பட்ஸ் 2 ப்ரோ மாடலில் Spatial Audio, Dolby Atmos, Head Tracking Sound உள்ளிட்ட பல்வேறு ஆடியோ அம்சங்கள் உள்ளன. குறிப்பாக ஆடியோ அம்சங்களில் அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம். மேலும் புளூடூத் 5.3 ஆதரவைக் கொண்டு இந்த புதிய ஒன்பிளஸ் இயர்பட்ஸ் வெளிவந்துள்ளது.

என்னென்ன நிறங்கள்?
ஒன்பிளஸ் பட்ஸ் 2 ப்ரோ மாடல் கண்டிப்பாக சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். பின்பு கிரீன், அப்சிடியன் பிளாக்,மிஸ்டி ஒயிட் நிறங்களில் இந்த ஒன்பிளஸ் இயர்பட்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதில் 11எம்எம் மற்றும் 6எம்எம் டூயல் ஆடியோ டிரைவர்கள், ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேசன் வழங்கப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 மாடலுக்கு வழங்கப்பட்டுள்ள ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி 48db வரை நாய்ஸ் ரிடக்ஷன் செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த இயர்பட்ஸ் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP55 சான்றிதழ் கொண்டுள்ளது. எனவே இந்த ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 மாடலை நம்பி வாங்கலாம்.
குறிப்பாக ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 மாடலை ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் சாதனங்களுடன் எளிமையாகப் பயன்படுத்த முடியும். அதேபோல் இந்த புதிய இயர்பட்ஸ் மாடலின் எடை 4.9 கிராம் ஆகும் அதேபோல் இந்த சாதனம் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வெளிவந்துள்ளது. எனவே சில நிமிடங்களில் இதை சார்ஜ் செய்துவிட முடியும்.

ஒன்பிளஸ் பட்ஸ் 2 ப்ரோ விலை
ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 மாடலை ரூ.11,999-விலையில் அறிமுகம் செய்துள்ளது ஒன்பிளஸ் நிறுவனம். வரும் வாரங்களில் அமேசான் மற்றும் ஒன்பிளஸ் இணையதளங்களில் இந்த புதிய ஒன்பிளஸ் இயர்பட்ஸ் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஒன்பிளஸ் நிறுவனம் தற்போது OnePlus TV 65 Q2 Pro எனும் புதிய ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்துள்ளது. ஸ்மார்ட் டிவியில் மீடியாடெக் 4கே இமேஜ் பிராசரஸ் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு OxygenPlay 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த 65-இன்ச் ஸ்மார்ட் டிவி.
குறிப்பாக ஒன்பிளஸ் டிவி 65 Q2 ப்ரோ மாடலின் விலை ரூ.99,999-ஆக உள்ளது. வரும் மார்ச் 10-ம் தேதி முதல் இந்த ஸ்மார்ட் டிவி விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்நிறுவனம் விரைவில் பல்வேறு அசத்தலான சாதனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








