அவசரப்பட்டு வேற Earbuds வாங்கிடாதீங்க.. 3D ஆடியோ, 47ms அல்ட்ரா-லோ லேடன்சி.. OnePlus-ன் புதிய பட்ஸ்!
ஒன்பிளஸ் நிறுவனம் வருகிற ஜூன் 19 ஆம் தேதி அதன் புதிய நெக்பேண்ட் வயர்லெஸ் ஹெட்செட் ஆக ஒன்பிளஸ் புல்லட்ஸ் வயர்லெஸ் இசட்3 (OnePlus Bullets Wireless Z3) மாடலை அறிமுகம் செய்ய உள்ள நிலையில், ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் ஆன ஒன்பிளஸ் பட்ஸ் 4 மாடலின் இந்திய அறிமுக தேதி (OnePlus Buds 4 India Launch Date) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் பட்ஸ் 4 மாடல் ஆனது வருகிற 2025 ஜூலை 8 ஆம் தேதியன்று மதியம் 2 மணிக்கு (இந்திய நேரப்படி) அறிமுகப்படுத்தப்படும் என்று ஒன்பிளஸ் உறுதிப்படுத்தியுள்ளது. ஒன்பிளஸ் சம்மர் லான்ச் ஈவென்ட் (OnePlus Summer Launch Event) என்கிற பெயரின்கீழ் நடக்கும் இந்நிகழ்வில் ஒன்பிளஸ் பட்ஸ் 4 உடன் சேர்த்து ஒன்பிளஸ் நோர்ட் 5 சீரிஸ் (OnePlus Nord 5 Series) ஸ்மார்ட்போன்களும் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

ஒன்பிளஸ் பட்ஸ் 4 மாடலில் என்னென்ன அம்சங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது? வரவிருக்கும் ஒன்பிளஸ் பட்ஸ் 4 மாடலில் டூயல் ட்ரைவர்ஸ் (Dual Drivers), டூயல் டிஏசி'ஸ் (Dual DACs), ஹை-ரெஸ் எல்எச்டிசி 5.0 (Hi-Res LHDC 5.0) மற்றும் 3டி ஆடியோ (3D Audio) ஆகியவைகள் இடம்பெறும் என்பதும், இந்த அம்சங்கள் பிளாக்ஷிப் சவுண்ட் குவாலிட்டியை வழங்கமென்றும் ஒன்பிளஸ் அறிவித்துள்ளது
மேலும் ஒன்பிளஸ் பட்ஸ் 4 மாடல் ஆனது கேம் மோட் (Game Mode) இல் 47எம்எஸ் அல்ட்ரா-லோ லேட்டன்சியை (47ms Ultra Low Latency வழங்கும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. கடைசியாக ஒன்பிளஸ் பட்ஸ் 4 மாடல் ஆனது 2 கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்படும் என்பதும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது: ஜென் க்ரீன் (Zen Green) மற்றும் ஸ்ட்ராம் க்ரே (Storm Gray).

ஒன்பிளஸ் பட்ஸ் 4 மாடலின் விலை குறித்து சரியான விவரங்கள் இல்லை. ஆனால் இது பெரும்பாலும் முன்னதாக அறிமுகமான ஒன்பிளஸ் பட்ஸ் 3 (OnePlus Buds 3) மாடலின் விலையோடு "சற்றே" ஒற்றுபோகும்படி இருக்கலாம். அதாவது ரூ.6000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம். நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் பட்ஸ் 3 ஆனது தற்போது ரூ.5,499 விற்பனை செய்யப்படுகிறது.
முன்னதாக அறிமுகமான ஒன்பிளஸ் பட்ஸ் 3 இயர்பட்ஸ் மாடலின் விரிவான அம்சங்கள்: 15 ஹெர்ட்ஸ் - 40 கேஹெர்ட்ஸ் ப்ரெக்வன்சி ரேன்ஜை கொண்டுள்ள இந்த இயர்பட்ஸ் 10.4மிமீ கோ-ஆக்ஸியல் டூயல்-யூனிட் ட்ரைவரையும் கொண்டுள்ளன.மேலும் ஏஏசி (AAC) மற்றும் எஸ்பிசி (SBC) கோடெக்குகளை ஆதரிக்கின்றன. இது மற்ற கோடெக்குகளை விட சிறந்த ஒலி தரத்தை வழங்க உதவும்.

ஒன்பிளஸ் பட்ஸ் 3-ன் மிகவும் தனித்துவமான அம்சங்களில் ஒன்று, இது எல்எச்டிசி 5.0 ஹை-ரெஸ் ஆடியோவை (LHDC 5.0 Hi-Res Audio) ஆதரிக்கின்றன. இது 1எம்பிபிஎஸ் வரையிலான வயர்லெஸ் டிரான்ஸ்மிஷன் ரேட்-ஐ அனுமதிக்கிறது. ஒன்பிளஸ் பட்ஸ் 3-ல் மொத்தம் மூன்று மைக்ரோஃபோன்கள் உள்ளன, இது கால்களின் போது தெளிவான ஆடியோவை வழங்க உதவும்.
மேலும் இந்த இயர்பட்ஸ் 94ms லோ லேடன்சியையும் கொண்டுள்ளன. கூடுதலாக, ஒன்பிளஸ் பட்ஸ் 3 ஆனது டச் கண்ட்ரோல்களை கொண்டுள்ளது. ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷனை பொறுத்தவரை, இது மூன்று வகையான ஏஎன்சி ஆதரவுகளை கொண்டுள்ளது: மைல்ட் (10 dB), மாடரேட் (20 dB) மற்றும் டெப்த் (49 dB).
மேலும் இந்த இயர்பட்ஸ் 3டி சரவுண்ட் ஸ்பேஸ் சவுண்ட் எஃபெக்ட் மற்றும் டைனமிக் பாஸ் தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது. இயர்பட்களை சார்ஜ் செய்ய டைப்-சி போர்ட்டும் உள்ளது. பேட்டரியை பொறுத்தவரை, ஏஎன்சி ஆன் செய்யப்பட்டிருந்தால் ஒன்பிளஸ் பட்ஸ் 3 ஆனது 6.5 மணிநேரம் வரை நீடிக்கும், சார்ஜிங் கேஸ் உடன் சேர்த்து மொத்தம் 28 மணிநேரம் வரை நீடிக்கும்.
ஒருவேளை ஏஎன்சி ஆப் செய்யப்பட்டு இருந்தால் ஒன்பிளஸ் பட்ஸ் 3 ஆனது 10 மணிநேரம் வரை நீடிக்கும், கேஸ் உடன் சேர்த்து 44 மணிநேரம் வரை நீடிக்கும். கடைசியாக ஒன்பிளஸ் பட்ஸ் 3 ஆனது பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கின்றன, ஒன்பிளஸ் நிறுவனத்தின் கூற்றுப்படி இதை வெறும் 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால், இது மொத்தம் 7 மணிநேரம் வரையிலான ம்யூசிக் பிளேபேக்கை வழங்கும்.


Click it and Unblock the Notifications








