Home
Gadgets

சும்மா கிழி.. 45 மணி நேர பேக்கப்.. 3D ஆடியோ.. ANC ஸ்விப்ட்.. 3 மைக்குகள்.. அடாப்டிவ் மோட்.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் பிரியர்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த மியூசிக் பிரியர்களும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் ஒன்பிளஸ் பட்ஸ் 4 (OnePlus Buds 4) மாடலின் முக்கிய பீச்சர்கள் உறுதியாகி இருக்கிறது. 3டி ஸ்பாஷியல் ஆடியோ, ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன், அடாப்டிவ் மோட், ஹை-ரெஸ் ஆடியோ போன்ற பீச்சர்கள் மூலம் பிரீமியம் ஆடியோ அனுபவத்தை கொடுக்க இருக்கிறது. இந்த ஒன்பிளஸ் பட்ஸ் 4 மாடலின் பீச்சர்கள், வெளியீடு மற்றும் விற்பனை விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ஒன்பிளஸ் பட்ஸ் 4 அம்சங்கள் (OnePlus Buds 4 Specifications): இந்த மாடலில் பிளாக்சிப் லெவல் சவுண்ட் குவாலிட்டி கொடுக்க டூயல் டிரைவர்கள் கிடைக்கின்றன. இதில் ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) மற்றும் எல்எச்டிசி 5.0 (LHDC 5.0) கிடைக்கிறது. ஆகவே, ஓரிஜினல் மற்றும் ஸ்டூடியோ கிரேட் ஆடியோ அனுபவம் எதிர்பார்க்கலாம்.

சும்மா கிழி.. 45 மணி நேர பேக்கப்.. 3D ஆடியோ.. ANC ஸ்விப்ட்.. 3 மைக்!

டீப் மற்றும் டைனாமிக் ஆடியோவுக்காக 3டி ஸ்பாஷியல் ஆடியோ (3D Spatial Audio) சப்போர்ட் கிடைக்கிறது. ஸ்விப்ட் ப்ராசஸிங் சப்போர்ட் கொண்ட ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (Active Noise Cancellation) கிடைக்கிறது. 3X வாய்ஸ் கேன்சலேஷன் கிடைக்கிறது. இதன் மூலம் வோகல் அவுட்புட் பிரீமியமாக எதிர்பார்க்கலாம். அடாப்டிவ் மோட் (Adaptive Mode) உள்ளது.

ஆகவே, ஏஎன்சி மோட் (ANC Mode) மற்றும் டிரான்ஸ்பரன்சி மோட் (Transparency Mode) தேர்ந்தெடுக்கலாம். வாய்ஸ் கால்களுக்காக 3 மைக்குகளை இந்த ஒன்பிளஸ் பட் 4 மாடல் கொடுக்கிறது. இதில் ஏஐ கால் நாய்ஸ் கேன்சலேஷன் (AI Call Noise Cancellation) சப்போர்ட் கிடைக்கிறது. ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) கனெக்டிவிட்டி கிடைக்கிறது. ஏஐ டிரான்ஸ்லேஷன் சப்போர்ட் உள்ளது.

சும்மா கிழி.. 45 மணி நேர பேக்கப்.. 3D ஆடியோ.. ANC ஸ்விப்ட்.. 3 மைக்!

இதை ஒன்பிளஸ் போன் மூலம் கனெக்ட் செய்து ரியல் டைமில் டிரான்ஸ்லேஷன் செய்து கொள்ளலாம். வால்யூம் ஸ்வைப் கன்ட்ரோல் (Volume Swipe Control) கிடைக்கிறது. ஒரு முறை ஃபுல் சார்ஜ் செய்தால், 45 மணி நேரங்களுக்கு பேக்கப் கொடுக்கிறது. ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைப்பதால், 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால், 11 மணி நேரங்களுக்கு பேக்கப் பெற்று கொள்ளலாம்.

கேமிங் பிரியர்களுக்கான 47ms அல்ட்ரா லோவ் லேட்டன்சி மோட் கிடைக்கிறது. இந்த ஒன்பிளஸ் பட்ஸ் 4 மாடலில் ஜென் கிரீன் (Zen Green) மற்றும் ஸ்டார்ம் கிரே (Storm Gray) கலர்கள் கிடைக்க இருக்கின்றன. மேற்கண்ட பீச்சர்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது. விலை விவரங்கள் வெளியாகவில்லை. ஜூலை 8ஆம் தேதி அறிமுகமாகிறது.

அமேசான் (Amazon) தளத்தில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த ஒன்பிளஸ் பட்ஸ் 4 மாடல் மட்டுமல்லாமல், ஜூலை 8ஆம் தேதி மேலும் 3 ப்ராடெக்ட்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. ஆகவே, ஒன்பிளஸ் வாட்ச் 3 (OnePlus Watch 3), ஒன்பிளஸ் நோர்ட் 5 (OnePlus Nord 5) மற்றும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ5 (OnePlus Nord CE5) ஆகிய மாடல்களும் வெளியாக இருக்கின்றன.

இதில் பெரிதும் எதிர்பார்ப்பை கிளப்பிவிட்ட ஒன்பிளஸ் நோர்ட் 5 போனில் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 (Snapdragon 8s Gen 3) சிப்செட் கிடைக்கிறது. 144FPS கேமிங் அவுட்புட் வருகிறது. . சோனி எல்ஒய்டி 700 (SONY LYT 700) சென்சாருடன் 50 எம்பி மெயின் + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா உள்ளது. 50 எம்பி செல்பீ கிடைக்கிறது. ஜூலை 8ஆம் தேதி விலை தெரியவரும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Buds 4 With 45 Hours Playback To Launch in India on July 8 Check Key Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X