அதிரவிடும் சவுண்ட்.. 520mAh பேட்டரி.. டிச.4-ல் புதிய இயர்பட்ஸ் கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
வரும் டிசம்பர் 4-ம் தேதி அன்று ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் உடன் புதிய இயர்பட்ஸ் மாடலையும் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம்.
அதாவது தற்போது வெளியான தகவலின்படி, ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் உடன் ஒன்பிளஸ் பட்ஸ் 3 (OnePlus Buds 3) மாடலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக இந்த ஒன்பிளஸ் பட்ஸ் 3 மாடல் ஆனது தரமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த சாதனத்தின் சில அம்சங்களைப் பார்ப்போம்.

குறிப்பாக ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 போன்ற வடிவமைப்புடன் இந்த ஒன்பிளஸ் பட்ஸ் 3 மாடல் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த இயர்பட்ஸ் E509A என்ற மாடல் நம்பரை கொண்டுள்ளதாக FCC இணையதளத்தில் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக இந்த ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும் என்று ஒன்பிளஸ் நிறுவனம் கூறியுள்ளது.
அதேபோல் ஒன்பிளஸ் பட்ஸ் 3 மாடல் ஆனது 4.77 கிராம் எடையுள்ளதாக இருக்கும். பின்பு 520mAh பேட்டரியைக் கொண்டு இந்த புதிய சாதனம் அறிமுகமாகும். குறிப்பாக ஒவ்வொரு இயர்பட்டும் 58mAh பேட்டரியை பயன்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் ANS மோட் ஆன் செய்யாதபோது 9 மணிநேர பேட்டரி லைஃப் கிடைக்கும். ANS மோட் ஆன் செய்திருந்தால் 6 மணிநேரம் பேட்டரி லைஃப் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக இந்த ஒன்பிளஸ் இயர்பட்ஸ் தரமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனின் அம்சங்களும் ஆன்லைனில் வெளியாகி உள்ளது. இப்போது ஒன்பிளஸ் 12 (OnePlus 12) போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.
ஒன்பிளஸ் 12 போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் (Snapdragon 8 Gen 3) உடன் இந்த அட்டகாசமான ஒன்பிளஸ் 12 அறிமுகமாகும். மேலும் இந்த போனில் OxygenOS 14 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம் உள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.பின்பு இந்த போனில் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதி உள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6.82-இன்ச் க்யூஎச்டி பிளஸ் (1440 x 3168 பிக்சல்ஸ்) கர்வ்டு லோ டெம்ப்ரேச்சர் பாலிகிரிஸ்டலின் ஆக்சைடு (LTPO - Low-temperature polycrystalline oxide) டிஸ்பிளேவைக் கொண்டு இந்த ஒன்பிளஸ் 12 போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2160ஹெர்ட்ஸ் பிடபுள்யூஎம் டிம்மிங் (2,160Hz PWM dimming), 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 1200 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.
ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் ஆனது 50 மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார் + 48 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் டெலிஃபோட்டோ கேமரா + 64 மெகாபிக்சல் ஓம்னிவிஷன் ஓவி64பி கேமரா (OmniVision OV64B camera)என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா உடன் அறிமுகமாகும். பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா உடன் இந்த ஒன்பிளஸ் 12 போன் அறிமுகமாகும்.

12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் ஒன்பிளஸ் 12 போன் விற்பனைக்கு வரும். குறிப்பாக இந்த போனில் இன்ஃப்ராரெட் சென்சாரும் (Infrared Sensor) இடம்பெறும். இது டிவிக்கு ரிமோட் கண்ட்ரோலாக (TV Remote Control) பயன்படுத்த அனுமதிக்கும் ஒரு அம்சமாகும்.
அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் ஆனது சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications