Home
Gadgets

OnePlus Buds 3 இயர்பட்ஸின் இந்திய அறிமுக தேதி அறிவிப்பு.. என்ன விலை? என்னென்ன அம்சங்கள்?

ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் (True Wireless Earphones) ஆன ஒன்பிளஸ் பட்ஸ் 3 (OnePlus Buds 3) எப்போது இந்தியாவில் அறிமுகமாகும் என்கிற வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எப்போது அறிமுகம்? என்ன விலை? என்னென்ன அம்சங்கள்? இதோ விவரங்கள்:

ஒன்பிளஸ் பட்ஸ் 3 இயர்பட்ஸ் ஏற்கனவே சீனாவில் அறிமுகமாகி விட்டதால், இதன் அம்சங்கள் மற்றும் விலை நிர்ணயம் குறித்து பெரிய அளவிலான குழப்பங்கள் இல்லை. நினைவூட்டும் வண்ணம் இந்த இயர்பட்ஸ் இம்மாத தொடக்கத்தில் ஒன்பிளஸ் 12 (OnePlus 12) ஸ்மார்ட்போனுடன் சேர்ந்து சீனாவில் அறிமுகமானது.

OnePlus Buds 3 இயர்பட்ஸின் இந்திய அறிமுக தேதி அறிவிப்பு!

அதேபோல இந்தியாவிலும் இது ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனுடன் சேர்த்து அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதாவது ஒன்பிளஸ் பட்ஸ் 3 இயர்பட்ஸ் ஆனது ஜனவரி 23 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. அதே நாளில் ஒன்பிளஸ் 12ஆர் (OnePlus 12R) ஸ்மார்ட்போனும் அறிமுகமாகும். ஆக ஒரே நாளில் மொத்தம் 3 புதிய ஒன்பிளஸ் தயாரிப்புகள் இந்தியாவில் அறிமுகமாக உள்ளன.

ஒன்பிளஸ் பட்ஸ் 3 இயர்பட்ஸ் விலை நிர்ணயம்: சீனாவில் ஒன்பிளஸ் பட்ஸ் 3 ஆனது இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.5,800 க்கு அறிமுகமாகி உள்ளது. இதேபோன்ற விலையை நாம் இந்தியாவில் எதிர்பார்க்க முடியாது; இந்திய விலை நிர்ணயம் சற்றே அதிகமாக இருக்கலாம்.

OnePlus Buds 3 இயர்பட்ஸின் இந்திய அறிமுக தேதி அறிவிப்பு!

ஒன்பிளஸ் பட்ஸ் 3 அம்சங்கள்: ஒன்பிளஸின் இந்த ட்ரூ வயர்லெஸ் இயர்போன்ஸ் ஆனது 10.4மிமீ ட்ரைவர், மூன்று மைக்குகள், ஏஏசி (AAC) மற்றும் எஸ்பிசி (SBC) ப்ளூடூத் கோடெக் ஆதரவுடன் எல்எச்டிசி 5.0 ஹை-ரெஸ் ஆடியோ அவுட்புட்களுடன் வருகின்றன. மேலும் 94எம்எஸ் லோ லேடன்சி கஸ்டம் கேம் சவுண்ட் விளைவுகளை கொண்டுள்ளன.

மேலும் இந்த ஒன்பிளஸ் இயர்போன்ஸ் ஆனது மைல்ட், மாடரேட் மற்றும் டெப்த் (mild, moderate, and depth) என்கிற மூன்று மோட்களின் கீழ் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷனுடன் வருகின்றன. இந்த மோட்கள் முறையே 10 dB, 20 dB மற்றும் 49 dB அளவிலான ஏஎன்சி ஆதரவை வழங்கும். இதில் ட்ரான்ஸ்ப்ரென்சி மோடும் (transparency mode) உள்ளது, இது உடனடியாக பயனர்களின் சுற்றுச்சூழலில் உள்ள விஷயங்களை எந்த தடையும் இல்லாமல் கேட்க அனுமதிக்கிறது.

OnePlus Buds 3 இயர்பட்ஸின் இந்திய அறிமுக தேதி அறிவிப்பு!

ஒன்பிளஸ் பட்ஸ் 3-ன் ஒவ்வொரு இயர்பட்டும் 58mAh பேட்டரி உள்ளது. அதே நேரத்தில் சார்ஜிங் கேஸில் 520mAh பேட்டரி உள்ளது. இது யூஎஸ்பி டைப்-சி போர்ட் உடன் வருகிறது. ஒன்பிளஸின் கூற்றுப்படி இந்த இயர்போன்கள் 6.5 மணிநேரம் பிளேபேக்கை வழங்கும். ஒருவேளை ஏஎன்சி செயல்பாடு 'ஆன்' செய்யப்பட்டிருக்கும் போது 28 மணிநேரம் வரை பிளேபேக் நேரத்தை வழங்கும்.

ஏஎன்சி ஆஃப் செய்யப்பட்டுள்ள நிலையில் ஒன்பிளஸ் பட்ஸ் 3-ஐ ஒருமுறை சார்ஜ் செய்தால், இந்த இயர்போன்கள் 10 மணிநேரம் வரையிலான பேட்டரி லைஃப்பை வழங்கும். கேஸுடன் சேர்த்து மொத்தம் 44 மணிநேரம் வரையிலான பேட்டரி லைஃப் பை வழங்கும் என்று ஒன்பிளஸ் கூறுகிறது.

ஒன்பிளஸ் 12 இந்திய விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான இஷான் அகர்வால் வெளியிட்ட ஸ்கிரீன்ஷாட்டின்படி, ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.69,999 க்கு அறிமுகமாகும். முன்னரே குறிப்பிட்டபடி, இது ஜனவரி 23 ஆம் தேதி நடைபெறும் 'ஸ்மூத் பியோண்ட் பிலீஃப்' நிகழ்வில் (Smooth Beyond Belief Event) இந்தியாவில் அறிமுகமாகும்.

ஒன்பிளஸ் 12ஆர் இந்திய விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? இந்தியாவில் இது ரூ.40,000 பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம். பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.39,999 க்குள்ளும், டாப்-எண்ட் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.42,000 க்கு மேல் இருக்கலாம். சரியான விலை விவரங்கள் ஜனவரி 23 ஆம் தேதியன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Buds 3 OnePlus 12 OnePlus 12R All 3 New Products Launch in Jan 23 in India Price Specs
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X