OnePlus Buds 3 அறிமுகம்.. அடேங்கப்பா விலையில் Dynamic BASS.. 3 வகை ANC சப்போர்ட்.. 44 மணிநேர பேட்டரி!
2024 ஆம் ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 3 புதிய ஒன்பிளஸ் (OnePlus) தயாரிப்புகள் (ஜனவரி 23 ஆம் தேதி இரவு) நடந்த ஸ்மூத் பியாண்ட் பிலீஃப் வெளியீட்டு நிகழ்வின் (Smooth Beyond Believe Launch Event) போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன.
இந்நிகழ்வில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் லேட்டஸ்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் 12 (OnePlus 12), புதிய மிட்-ரேன்ஜ் மாடலான ஒன்பிளஸ் 12ஆர் (OnePlus 12R) மற்றும் புதிய ட்ரூலி வயர்லெஸ் ஸ்டீரியோ இயர்பட்ஸ் ஆன ஒன்பிளஸ் பட்ஸ் 3 (OnePlus Buds 3) ஆகியவைகள் அறிமுகமாகின.

புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களான ஒன்பிளஸ் 12 ஆனது ரூ.64,999 க்கும், ஒன்பிளஸ் 12ஆர் ஆனது ரூ.39,999 க்கும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. மறுகையில் உள்ள ஒன்பிளஸ் பட்ஸ் 3 என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது? என்னென்ன முக்கிய அம்சங்களை பேக் செய்கிறது? இதோ விவரங்கள்:
ஒன்பிளஸ் பட்ஸ் 3 விரிவான அம்சங்கள்: ஒன்பிளஸ் பட்ஸ் 3 ஆனது 15ஹெர்ட்ஸ் - 40கேஹெர்ட்ஸ் ப்ரெக்வன்சி ரேன்ஜை (frequency range of 15Hz-40KHz)கொண்டுள்ளது. மேலும் இந்த இயர்பட்ஸ் 10.4மிமீ கோ-ஆக்ஸியல் டூயல்-யூனிட் ட்ரைவரையும் (10.4mm co-axial dual-unit driver.) கொண்டுள்ளன.

மேலும் இந்த இயர்பட்ஸ் ஏஏசி (AAC) மற்றும் எஸ்பிசி (SBC) கோடெக்குகளை ஆதரிக்கின்றன, இது மற்ற கோடெக்குகளை (codecs) விட சிறந்த ஒலி தரத்தை வழங்க உதவும். ஒன்பிளஸ் பட்ஸ் 3-ன் மிகவும் தனித்துவமான அம்சங்களில் ஒன்று, இது எல்எச்டிசி 5.0 ஹை-ரெஸ் ஆடியோவை (LHDC 5.0 Hi-Res Audio) ஆதரிக்கின்றன. இது 1எம்பிபிஎஸ் வரையிலான வயர்லெஸ் டிரான்ஸ்மிஷன் ரேட்-ஐ அனுமதிக்கிறது.
ஒன்பிளஸ் பட்ஸ் 3-ல் மொத்தம் மூன்று மைக்ரோஃபோன்கள் உள்ளன, இது கால்களின் போது தெளிவான ஆடியோவை வழங்க உதவும். மேலும் இந்த இயர்பட்ஸ் 94ms லோ லேடன்சியையும் கொண்டுள்ளன. கூடுதலாக, ஒன்பிளஸ் பட்ஸ் 3 ஆனது டச் கண்ட்ரோல்களை கொண்டுள்ளது.

ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷனை பொறுத்தவரை, இது மூன்று வகையான ஏஎன்சி ஆதரவுகளை கொண்டுள்ளது: மைல்ட் (10 dB), மாடரேட் (20 dB) மற்றும் டெப்த் (49 dB). மேலும் இந்த இயர்பட்ஸ் 3டி சரவுண்ட் ஸ்பேஸ் சவுண்ட் எஃபெக்ட் மற்றும் டைனமிக் பாஸ் தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது. இயர்பட்களை சார்ஜ் செய்ய டைப்-சி போர்ட்டும் உள்ளது.
பேட்டரியை பொறுத்தவரை, ஏஎன்சி ஆன் செய்யப்பட்டிருந்தால் ஒன்பிளஸ் பட்ஸ் 3 ஆனது 6.5 மணிநேரம் வரை நீடிக்கும், சார்ஜிங் கேஸ் உடன் சேர்த்து மொத்தம் 28 மணிநேரம் வரை நீடிக்கும். ஒருவேளை ஏஎன்சி ஆப் செய்யப்பட்டு இருந்தால் ஒன்பிளஸ் பட்ஸ் 3 ஆனது 10 மணிநேரம் வரை நீடிக்கும், கேஸ் உடன் சேர்த்து 44 மணிநேரம் வரை நீடிக்கும்.
கடைசியாக ஒன்பிளஸ் பட்ஸ் 3 ஆனது பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கின்றன, ஒன்பிளஸ் நிறுவனத்தின் கூற்றுப்படி இதை வெறும் 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால், இது மொத்தம் 7 மணிநேரம் வரையிலான ம்யூசிக் பிளேபேக்கை வழங்கும். க்ளாஸி ஃபினிஷ் டிசைன் மற்றும் ஒன்பிளஸ் பட்ஸ் 2 ப்ரோவை போலவே தோற்றமளிக்கும் சார்ஜிங் கேஸுடன் வரும் ஒன்பிளஸ் பட்ஸ் 3ஆனது மெட்டாலிக் க்ரே மற்றும் ஸ்பிளென்டிட் ப்ளூ என்கிற 2 கலர்களில் வாங்க கிடைக்கும்
ஒன்பிளஸ் பட்ஸ் 3 விலை விவரங்கள்: இந்தியாவில் இது ரூ.5499 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விற்பனை சலுகைகளை பொறுத்தவரை ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டு மற்றும் கிரெடிட் / டெபிட் கார்டு இஎம்ஐ-யின் கீழ் ரூ.1000 தள்ளுபடி கிடைக்கும். மேலும் ஒன்கார்டு இஎம்ஐ மற்றும் கிரெடிட் கார்டு வழியாக வாங்கினாலும் ரூ.1000 தள்ளுபடி கிடைக்கும். இது 2024 பிப்.6 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும்.


Click it and Unblock the Notifications








